Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01... posted byமுஹம்மது ஆதம் சுல்தான். (kayalpatnam)[17 June 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 19402
சகோதரர் லுக்மான் அவர்கள், தான் தூய்மையானவன் என்ற நிலையை உறிதிபடுத்த முயற்சிப்பதை உண்மைலேயே பாராட்டுகிறேன் .முன்னரும் பாராட்டியுள்ளேன்.அதே நேரத்தில் தலைவியை பற்றி கூறுகின்ற குற்றசாட்டுக்கு சகோதரர் ரிபாய் சொல்வதுபோல்.
கண்ணியத்திற்குரிய தலைவி அவர்களே, தாங்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் ஊருக்கு உழைக்கத்தான் இந்தப் பொறுப்பில் இருக்கிறீர்கள் என்பது உண்மையானால், இணையதளம் வரை வந்து விட்ட இந்த சகோதரர் லுக்மான் அவர்கள் அறிக்கைக்கு தகுந்த விளக்கம் தந்து உங்களது மானத்தையும், ஊர் மானத்தையும் காப்பாற்றுங்கள்!
18 உறுப்பினர்களின் பேச்சையும் தலைவி அவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்றால் அந்த 18 பெரும் அவர்களின் பகையாளிகள் அல்ல. தலைவியின் தன்னுடைய நிலைப்பாடு சரியானதுதான் என்ற தீவிர தன்மையே தவிர வேறு ஒன்றும் இல்லை
தலைவிமேல் நீங்கள் சொல்லும் குற்றசாட்டு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும் இமயமலை அளவு போன்றதல்ல என்பது உங்கள் விளக்கதிலேயே தெரிகிறது. அவர்களின் சுயநலத்தையோ, ஒருசிலருக்கு சாதகதன்மையையோ,சில பண முதலைகளின் பக்கம் சாய்ந்தோ , ,ஊழல் ஊறிய செயலோ, அல்லது நமக்கு இவ்வளவு கிடைக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் இவ்வளவுதான் கிடைக்கும் என்று சொல்லி தலைவியே ஊழல் பணத்தை பகிர்ந்தளித்தார் என்பன போன்ற ஈனசெயல் பட்டியலை தலைவியின் மீது சுமத்துகிறீர்களா?
அல்லது நாங்கள் 18 பெரும் புண்ணிய புதல்வர்கள் , எந்த தேவைக்கும் ,ஆசைக்கும் அப்பாற்பட்டவர்கள், அப்படிபட்டவர்களிடத்தில் தலைவி தன் எண்ணத்தை திணிக்கிறார் என்கிறீர்களா? நாங்கள் 18 பெரும் அப்பழுக்கற்ற யோக்கியர்கள் எங்கள் எண்ணப்படி தலைவி ஆட மறுக்கிறார் என்கிறீர்களா?
உங்கள் கூற்று வாதப்படி உண்மை என்று வைத்துகொண்டாலும், ஆடியோவில் பேசிய கருப்பு ஆட்டைப்பற்றி கண்டுகொள்ளவே இல்லையே. அவரும் சேர்ந்து தானே 18 பேர்கள்.
தலைவியை தாக்க துணிந்த உங்களுக்கு அந்த கருப்பு ஆட்டை அடித்து விரட்ட துணிவில்லையே ஏன்? அந்த கருப்பு ஆடு யாரென்று சகோதரர் முஸ்தாக் அவர்கள் போட்டு உடைத்து விட்டார்.
அந்த கறுப்பு ஆடு எங்கிருந்து யாரால் எந்த சக்தியால் நிறுத்தப்பட்டு, நோட்டுகள் பறக்கவிட்டு ,வெற்றிபெற்று பின்பு பதவி வழங்கப்பட்டு, அந்த கருப்பு ஆட்டை பற்றி அணுவளவும் கூட தெரியாது என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சொல்ல முடியுமா ?
சொல்ல மாட்டீர்கள். உங்கள் உள்நோக்கம் குறிக்கோள் அந்த கருப்பு ஆட்டை பற்றியதல்ல, .தலைவியை தகுதி இழக்க செய்வது ஒன்றேதான் உங்கள் லட்சியமாக இருக்கிறது.
நாங்கள் 18 பேரும் பாலாரும் ,தேனாறும் பெருக்கெடுத்து காயல் நகரை சூழ்ந்துகொள்ள சபதம் எடுத்து முயற்சித்து கொண்டிருக்கிறோம். இந்த தலைவி அதற்க்கு முட்டுகட்டையாய் இருக்கிறார். இருக்கலாமா? என்ற பொருள் பட லுக்மான் அவர்கள் கேள்விகனைகளை காயலர்களின் மீது தொடுக்கிறார். கண்ணிய மிகு காயல் கண்மணிகள் தான் பதில் கூற வேண்டும்!
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross