Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01... posted byமுஹம்மது ஆதம் சுல்தான். (kayalpatnam)[18 June 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 19418
ஆஹா பூச்சைகுட்டி வெளியில் வந்து விட்டது.பல பேர்களின் கிடுக்குபிடி கேள்வியில் கருப்படுகளின் விபரத்தை வேண்டா வெருப்போடு, இருந்தாலும் இருக்கலாம் என்று லுக்மான் அவர்கள் ஒப்புகொள்கிறார்.
எப்படிப்பட்ட ஈனத்தமான ஊழல் விவகார பேச்சின் பறிமாற்றங்கள். அதன் சுவடு தெறிந்த அந்த நிமிடமே ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டவேண்டிய கடமை,நான் உண்மையான உறுப்பினர் என்று சொல்லும் உங்களுக்கு உண்டல்லவா?
அதைவிட்டு விட்டு நாங்கள் 18 உறுப்பினர்களும் கூட்டாக இருந்தும் தலைவி எங்களை கண்டுகொள்ளவே இல்லை,எங்களக்கு முக்கியத்துவம் இல்லை இப்படியொரு அநியாயம் நடத்தும் தலைவி தேவையா?என்பது தானே உங்கள் எண்ணாம்.
உங்கள் எண்ணப்படி எல்லோரும் உங்கள் பின்னல் வருவார்கள் என்று வைத்துகொண்டால்,
தலைவி அவர்கள் ஊழலின் உச்சாணியாக இருக்கவேண்டும்,என்னுடைய ஆலோசனைப்படிதான் நகராட்சி நடக்கவேண்டும் என்று ஆணையிடும் அசுரர்களின் அடிவருடியாக இருக்கவேண்டும், எந்த விஷியத்தையும் மக்கள் முன்வைப்பதாவது மண்ணாங்கட்டியாவது,
நமக்குண்டானத்தை எடுத்துக்கொண்டு இடத்தை காலி செய்துவிட்டு, எல்லோருக்கும் பிரியமானவர் போல, பச்சோந்தி போல்பாவலா காட்டிவிட்டு பங்களாவில் உள்ளவர்கள் போடும் பாதையில் பவனி வந்து பொருளாதாரத்தில் போதிய வாழ்வை பெருக்க நினைக்கும் தலைவியாக இருப்பார்களேயானால் உங்கள் 18 உறுப்பனர்களின் பின்னால் ஒரு படையே புறப்பட தயாராகி இருக்கிறது .
ஆனால் 18 ல் எத்தனை பெருச்சாளிகளை உங்கள் சோத்துமூட்டையில் கட்டிகொண்டு இருக்கிறீர்கள் என்றுகூட உங்களுக்கு தெரியாமல் சோத்து மூட்டைக்கு ஆபத்து என்று கொக்கரிக்கும் உங்கள் குரல் உண்மையான குரல்தான் என்று உங்களை படைத்த, நீங்கள் 5 வேலை தொழும் அந்த அலாஹ்வை சாட்சியாக வைத்து கூறமுடியுமா?
உணமையாக நாம் வாழவேண்டும் என்பதுமட்டுமல்ல முக்கியம், மாற்றாரின் மீது புகார் செய்யும் பொழுது அது உண்மையாக மனசட்சிபடிதான் இறைவனுக்கு பயந்து நேர்வழியில் தான் குற்றம் கூறுகிறோம் என்ற பயம் இல்லாவிட்டால் நீங்கள் செய்யும் எந்த இபாததும் இறைவனிடம் போய் சேருமா என்பதை உங்கள் மனதையே கேட்டு கொள்ளுங்கள்!.
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross