Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01... posted bySalai.Mohamed Mohideen (USA)[18 June 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 19435
சகோதரருக்கு ஒரு சபாஷ் !! ஒரு வழியாக தைரியமாக அக்குரல்களை வெளி கொணர்ந்துளீர்கள்.
"குலையுடன் கூடிய தென்னை மரங்கள்" ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் போல் தெரிகின்றது. கொளுத்தும் வெயிலுக்கு இதமான 'இளநீரை' தர வேண்டியவர்கள். பாவம் அவ்-வார்ட் மக்கள்... அவர்களுக்கு ஒட்டு போட்டு வெற்றி பெற வைத்ததற்கு சரியான 'சவுக்கடி' கொடுத்துள்ளனர். ஊரின் குலையை அடி மண் வேரோடு அறுக்காமல் இருந்தால் சரி.
இத்தனை வெட்ட வெளிச்சமான பின்னரும் கூட இவர்கள் இன்னும் இப்பதவியில் நீடிப்பார்கள் என்கின்றீர்களா என்ன?? நாமெல்லாம் 'ம** விட மானத்திட்க்கு' முக்கியம் தருபவர்கள் அல்லவா.
" இங்கு parellel நகராட்சி மன்றமே நடக்கிறது" - தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும் என்று
parellel நகராட்சி மன்றத்தை நடத்துபவர்களையும், அதற்க்கு துணை / பணவுதவி புரிபவர்களையும் இதே மன தையிரியத்துடன் வெளிக்கொணருங்கள். வல்ல இறைவன் எப்பொழுதும் உங்களுக்கு துணை புரிவானாக !!
"காக்கும் கரங்கள் மேடையையும் இதற்கு பயன்படுத்தலாம். தவறில்லை" என்கின்றார் ஒரு அன்பு சகோதரர். --- 'தேர்தல் விழிப்புணர்வு' தந்த பாடங்கள் போதுமானது. மீண்டும் இவர்களை போன்ற நல்லதொரு தொண்டு அமைப்புகளை இழுக்காமல் இருப்பதே சாலச்சிறந்தது!!
மனிதன் என்ற முறையில் குறை நிறைகள் நிச்சயம் ஒவ்வொரு மனிதரிடமும் உள்ளது. கருத்து வேறுபாடுகள் மனகசப்புகள் நீங்கி, நகர் மன்றம் நல்ல படி தூய்மையாக செயல்பட ... மாற்ற பட வேண்டிய குணாதசியங்களை மாற்ற வேண்டியவர்கள் மாற்றி நம் நகர்மன்றம் என்றும் சிறப்பாக செயல் பட வாழ்த்துக்கள். வல்ல இறைவன் அருள் புரிவானாக!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross