எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி அங்கே உமக்கோர் இடம் வேண்டும்....!!! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[18 June 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19441
அன்புள்ள ஏ. லுக்மான் காக்கா அவர்களுக்கு,
இது உங்களுக்குத் தேவைதானா? வேலிக்குள்ளிருந்த பாம்பை எடுத்து.... அதாங்க பனியனுக்குள்ளே விட்ட கதையாகிப் போயிடுச்சே?
எட்டு மாத கால நகராட்சியில் தலைவி சாதிச்சது இருக்கட்டும். உங்கள் தலையில் கொட்டி நீங்க என்ன.... சாதிச்சீங்கன்னு கருத்தாளர்கள் கேட்டால் அதற்கும் தாங்கள் கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனாய் தெருவாசிகளிடம் போய் கேளுங்கள், அல்லாஹ் அறிவான் என மழுப்பி பதில் கூறியுள்ளீர்கள்.
கருத்தாளர்களின் நியாயமானக் கருத்துப் பதிவிற்கு தங்களின் விளக்கம் படம் பார்த்து கதை எழுதுகின்றார்கள் எனும் குற்றச்சாட்டுதான். விடுங்க!
இவங்களாவது படம் பார்த்து தானே கதை எழுதுகின்றார்கள்? இன்னும் சிலர் படத்தைப் பார்க்காமலேயே விமர்சனம் செய்கின்றார்களே? அவர்களை என்னவென்று அழைப்பது?
இறுதியாகக் கேட்கின்றேன். தாங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்? எதற்காக காய் நகத்துகின்றீர்கள்? ஏன் இந்த தடுமாற்றம்?
உங்கள் பழைய கருத்துக்களைப் படித்துப் பார்த்த போது பல விஷயங்கள் தெளிவாகியது. காக்கா! இப்போதைக்கு தங்களுக்கு சற்று ஓய்வும் அமைதியான சூழ்நிலையும் தான் தேவை. வீணாக நீங்கள் மனதைப் போட்டுக் குழப்பி மற்றவர்களையும் குழப்ப வேண்டாம்.
தாங்கள் நிலையான ஓர் முடிவுடன் நியாயமான குற்றச்சாட்டுகளோடு பிறர் குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள்.
இப்ப சொல்லுறோம் தாங்கள் நல்லவர் தாம்! நல்லவரே தாம்! அல்லாஹ் மீது சத்தியமா நீங்க லஞ்சம் வாங்கவே மாட்டிங்க...
தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த மனக் குழப்பத்திலிருந்து விரைவில் நிம்மதி கிடைக்க வல்ல நாயனிடம் கையேந்துகின்றேன்.
இனி தன்னிலை விளக்கம், பதில் என்று இழுத்துக் கொண்டே போகவேண்டாம். எல்லாவற்றிக்கும் ஓர் தீர்வு அல்லாஹ்விடத்திலிருந்து நிச்சயமாக உண்டு!
எனவே மனம் தளர்ந்து விடாதீகள். வஸ்ஸலாம்.
என்றும் அன்புடன் உங்கள் அருமைத் தம்பி,
ராபியா மணாளன். புனித மக்கா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross