அன்பிற்கினிய சகோதரர் சட்னி செயத் மீரான் காக்கா அவர்களுக்கு! அஸ்ஸலாமுஅலைக்கும்!
ஒரே ஒரு பதிவில் மாத்திரம் எங்களுக்கு நீங்கள் சூட்டிய பெயர்கள், துதிபாடிகள், அடிவருடிகள், குள்ளநரி,
பச்சோந்தி, அன்னக்காவடிகள், திண்ணை தூங்கிகள்,மகா சந்நிதானம் இன்னும் எத்தனையோ!
ஆனாலும் உங்கள் மீது எவ்வித கோபமும் இல்லை.காரணம் இப்படி எழுத வேண்டிய நிர்ப்பந்தம் உங்களுக்கு ஏன் ஏற்பட்டது என்பதனை அல்லாஹ்வே அறிவான்.
எனது தந்தையின் மாணவர் என்ற முறையிலும், பல்வேறு
தளங்களில் உங்களோடு இணைந்து சமூகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என்ற முறையிலும் உங்கள் மீது நான் இன்னமும் மரியாதை வைத்திருக்கிறேன்.
இந்த ஊடகத்தில் எங்களைப் புழுதி வாரித்தூற்றுவோர் பற்றி
பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை சரி விஷயத்திற்கு வருகின்றேன்.
உங்களது நீண்ட அறிக்கையில், தனி நபர் தாக்குதலும், காழ்ப்புணர்ச்சியும், கீழ்த்தரமான வார்த்தைகளும், உங்களது பழைய கருத்துக்களுக்கு நீங்களே முரண்பட்டு நிற்பதும், இன்னும் பல்வேறு அருவறுப்பான வார்த்தைகளும், திரைப்பட பாடல் வரிகளையும் தவிர வேறெதையும் நான் காணவில்லை.
உங்களைப் பற்றி, உங்களது பாணியிலேயே நான் ஒரு பாடல் வடித்தால் உங்களால் நிம்மதியாகத் தூங்கக் கூட முடியாது. அந்த அசிங்கத்தை செய்ய நான் விரும்பவில்லை.
மெகா என்ற மாபெரும் அமைப்பு, மக்கள் சக்தியை தட்டியெழுப்பியபோது, உள்ளே வந்து விட்டு, மூன்று
அல்லது நான்கு நாட்களில், எந்தவித ஆதாயமும் இல்லை என்று அறிந்து ஓடிய ஒரு சிலரில் நீங்களும் ஒருவர்.
முதல் அறிமுகக் கூட்டத்தில் யார் யாருக்கோ பயந்து, ஒரு மூலையில் நின்று வேடிக்கை பார்த்துவிட்டு, கூட்டம் முடிந்ததும், மேடைக்குப் பின்னால் வந்து எங்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஓடி ஒளிந்த நீங்கள், ஒரு தொண்டனாக இருந்து வேலை செய்ததாக சொல்வது பச்சைப்பொய்.
அதன் பிறகு தேர்தல் முடியும் வரை எங்களோடு உங்களுக்கு எந்தத் தொடர்பும், பேச்சுவார்த்தையும் இல்லை என்பதுதான்
உண்மை.
பெரியவர்களை நாங்கள் அவமானப்படுத்துவது போல சித்தரிக்கும் ஒரு கூட்டத்தோடு இணைந்து நீங்கள் குளிர்காய நினைத்தால் அது உங்கள் விருப்பம். மதிப்பிற்குரிய அப்துல் ரஹ்மான் ஹாஜியாரை நீங்கள் மரியாதைக்குறைவாக விமர்சித்ததையும், அதை தவறு என மெகாவின் ஆலோசகர் கே.வி.ஏ.டி.ஹபீப்
மச்சான் அவர்கள் சுட்டிக் காட்டியதையும், அதற்குப் பதிலாக அவரையும் ஏனோதானோவென்று நீங்கள் விமர்சனம் செய்ததும், மாறாக அவர்களது நற்குணங்கள் மற்றும், நல்ல உள்ளத்தை நான் விரும்பும் நகர்மன்றம் என்ற கட்டுரையில் நான் பதிவு செய்திருப்பதும் இதே தளத்தில்தான் பதிவாகி உள்ளது
என்பதனை மறந்து விட்டீர்களா?
இரண்டு மாதத்திற்கு முன்னர் கூட செயல் திறன் மிக்க தலைவி
என்று நீங்கள் இந்த தளத்தில் பதிவு செய்த கருத்து எண்ணை நான் தந்தால் உங்களையும் துதிபாடி என்று நீங்களே அழைக்க வேண்டியது வரும்.
இதற்குமேல் உங்கள் பதிவில் வேறு எதுவும் இல்லை என்பதால், நல்ல குடும்பத்தில் பிறந்த உங்களை வேண்டி விரும்பி கேட்பது மற்றவர்களை அவமானப்படுத்த நினைத்து நீங்கள் அவமானப் படாதீர்கள் என்பதுதான்.
உரைநடையில் நான் எழுதியிருப்பது உங்களுக்குப் புரிய வில்லையெனில், உங்களைப் பற்றி கவிதைகள் ஆயிரம் ஆயிரம் எழுதி உங்களுக்கு மின்னஞ்சல் செய்ய நான் தயார். காரணம் பொது தளத்தில் உங்களை கேவலப்படுத்த நான் விரும்பவில்லை.
லுக்மான் ஹாஜி அவர்களிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவரால் பதில் தர முடியாது என்பதனை நான் அறிவேன். அவரும் அறிவார். அல்லாஹ்வும் அறிவான்.
நண்பர்களே! யாரிடமும் கையேந்தி பிச்சை எடுக்காமல், நாங்களே செலவு செய்து நகர் நலனுக்காக உருவாக்கிய திறந்த புத்தகம் மெகா. தேர்தலுக்குப் பிறகு, தலைவி அவர்களை நான் சந்தித்தது
இரண்டு முறை மாத்திரமே. ஒன்று அவரது தந்தையும், எனது தோழ வாப்பாவுமான மர்ஹூம் பாளையம் இப்ராஹீம் அவர்களது வஃபாத்தை ஒட்டியும், மற்றொண்டு கே.வி.ஏ.டி.அறக்கட்டளை சார்பாக குப்பை வண்டியை வார்டுக்கு அர்ப்பணித்த விழாவிலும்தான். இந்த ஆறு மாத காலத்தில் ஒரேஒரு முறை,
அதுவும் இரண்டு நாட்களுக்கு முன்பு, தனது தாயின் இத்தா கூட முடிவுறா நிலையில் ,தனது தங்கைக்காக
திருநெல்வேலி மருத்துவமனையில் இருக்கின்றார்கள் என்று அறிந்து,நலம் விசாரிக்கவும், அவர் மேல் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதில் அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கவும் அலைபேசியில் பேசினேன்.
நாங்கள்தான் அவர்களை இயக்குவது போல் அவதூறு எழுதுபவர்களை குறித்து எதுவும் சொல்வதற்கு இதற்கு மேல் இல்லை. நாங்கள் இயக்கி செயல்படும் அளவுக்கு அவர் ஒன்றும் பினாமியாக முன்னிறுத்தப்பட்ட வேட்பாளரும் இல்லை.
நாங்கள்தான் அவர்களை இயக்குவது போல் அவதூறு எழுதுபவர்களை குறித்து எதுவும் சொல்வதற்கு
இதற்குமேல் இல்லை.
திருமணமாகி பத்தாண்டுகள் உருண்டோடியும் எனது வீட்டுக்கு, ஒரு ரேஷன் கார்டு கூட இன்று வரை இல்லை. அதற்குக் கூட அவர்களிடம் போய் நான் நின்றதில்லை. அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
நேர்மையான முறையில் விமர்சனம் செய்யும் சகோதரர்களை நாங்கள் மதிக்கிறோம். நாங்களும் மனிதர்கள் என்ற அடிப்படையில் தவறு செய்திருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறோம். அதை விட்டு விட்டு, காழ்ப்புணர்ச்சியில் கருத்தை விதைப்பீர்களேயானால், அல்லாஹ் உதவியால் அதனை நீங்களே அறுவடை செய்ய வேண்டிய நாள் விரைவில் வரும் எண்டு கூறி நிறைவு செய்கிறேன்.
மா ஸலாமா.
நாங்கள் எந்த விமர்சனமும் யாரைப் பற்றியும் செய்யாத நிலையிலும், இச்செய்தியிலுள்ள தன்னிலை விளக்கத்திற்கு விமர்சனம் அளிப்பதை விட்டுவிட்டு, செய்திக்குத் தொடர்பேயில்லாமல் எங்களை சாடுவதற்கு இத்தளத்தைப் பயன்படுத்திக்கொள்ள எவ்வித கத்திரியுமின்றி சிலருக்கு - குறிப்பாக ஒருருக்கு வாய்ப்பளித்துள்ள அட்மின் அவர்கள், அதற்கு நான் அளித்துள்ள இந்த நாகரிகமான விளக்கத்தையும் நிராயுதபாணியாக (கத்திரிக்கோல் இன்றி) வெளியிடுவார் என்ற நம்பிக்கையுடன்,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross