கருத்து என்பது சட்னி, சாம்பார் அல்ல...! சளிச்சுப் போச்சேன்ணு தூக்கி எறிய...!!! posted byM.N.L.முஹம்மது ரபீக் (புனித மக்கா.)[21 June 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19483
காயல்பட்டினம் நகர்மன்றம் 02 -வது வார்டைச் சாந்த ராபியா மணாளனின் தன்னிலை விளக்கம்.
கருத்துப்பதிவாளர் என்பது நான் ஆசைப்பட்டு இதற்காக கடும் முயற்சி செய்து பெற்றது அல்ல. இந்த பெருமை எங்கள் காயல்பட்டணம் டாட் காம் வாசகர் வட்டத்தால் அமானிதமாக தரப்பட்டதாகும்.
நான் கருத்துப் பகுதியில் வெற்றி பெறுவதற்காக செலவிட்ட தொகை Rs / ௦= மட்டும்தான்.
வாசகர் வட்டத்தில் கருத்தாளனாக நான் பொறுப்பேற்ற போது, இறைவன் மீது சத்தியமாக பொய்யான கருத்துக்களை எழுதவும் மாட்டேன். யாராவது அப்படி எழுதும்படி சொன்னாலும் அதைச் செய்யவும் மாட்டேன் என்று கூறிய வாக்கை இன்று வரை கடைபிடித்து வருகிறேன். இன்ஷா அல்லாஹ் இனியும் கடைபிடிப்பேன்.
நான் பொய்யான விசயத்தை எழுத வேண்டும் எனக் கருதவில்லை. முறையான வழியில் அல்லாமல் வரும் எல்லாக் கருத்துக்களும், எண்ணங்களும் பொய் போன்றதுதான்.
எழுதிய ஆரம்ப காலத்தில் மாற்றுக் கருத்துடையவர்களை (சட்னி மீரான் அவர் என் பெயரைக் குறிப்பிட்டுள்ளபடியால் அவரது பெயரை நான் குறிப்பிடுகின்றேன்) பற்றி சில கருத்து வேறுபாடுகள் சொல்லப்பட்டாலும் எல்லோர்களுக்கும் முன் நான் எழுத்துக்குப் புதிது என்பதால் உடனடியாக யாரையும் குறை சொல்லக் கூடாது என்று எண்ணி அவற்றையெல்லாம் புறக்கணித்து அவரது வேறுபாடுகளுக்கு ஆதரவாக இல்லாவிடினும் அமைதியாகவே நாங்கள் (கருத்தாளர்கள்) பலர் இருந்து வந்தோம்.
நல்ல கருத்தைத் தர வேண்டும் என்ற ஆர்வம் சட்னி மீரான் அவர்களுக்கு இருந்தாலும் அதை எழுத்தில் கொண்டு வருவதில் தீர்க்கமான எண்ணம் இருப்பது போல் தெரியவில்லை. தனக்குள்ள திறமை என்ன என்பதை மிகுந்த முயற்சி எடுத்து அறிந்து கொண்ட அவரால் அந்தத் திறமையின் வெளிப்பாட்டை கருத்தாளர்களிடம் சாடுவதில் காட்ட தெரிந்ததே தவிர நிரூபித்துக் காட்டத் தெரியவில்லை. கருத்துப்பேழையில் உள்ளவர்களுக்கு பொறுமை மிக அவசியம். அதற்காக நான் அடங்கிப்போகச் சொல்லவில்லை. சட்னி மீரான் அவர்கள் சில கருத்தாளர்களோடு கடுகடுத்த எழுத்துக்களால் சில கடுஞ்சொற்களை உபயோகித்த சம்பவங்களும் உண்டு.
எங்களைப் போன்ற சில கருத்தாளர்களின் ஆலோசனைகளை பரிசீலிப்பதற்கு கூட அவர் தயாராக இல்லை. குறிப்பாக ஒவ்வொரு செய்தியிலும் நடக்கும் நிகழ்வுகளை கருத்தாளர்களின் எண்னங்களின் பிரதிபலிப்பை முழுமையாகப் படித்து, அதன் பின்னர் தான் விருப்பு வெறுப்பின்றி பதிவு செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை ஆராய வேண்டும் என்று கூறினால் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் அடுத்த கருத்தை எழுதத் துவங்கிவிடுவார். விளைவு, முதலில் ஒற்ரைபடை எண்ணிக்கயில் வந்து கொண்டிருந்த கருத்துக்கள் படிபடியாக கூடி இப்போது ஐம்பதுக்கும் மேல் ஆகிவிட்டது. மக்கள் விழிப்புடன் இருப்பதுதான் இதற்கு காரணம். கருத்தாளர்களின் பிரச்சனை தீர்ந்த பாடில்லை.
ஆடியோ ஒலிப்பதிவு ஆகட்டும், தன்னிலை விளக்கத்திற்கு கருத்து எழுதுவதாகட்டும் இவற்றில் ஏற்படப் போகும் விளைவுகளைப் பற்றி முற்கூட்டியே ஆலோசனை செய்யாமல் பிரச்சனை முற்றிய பிறகு முடிவு காண முயற்சி செய்கிறார். இதைப் பற்றி எச்சரித்தாலும் அதை புறக்கணித்து விடுகிறார்.
இதேபோல் நகராட்சி தேர்தலாகட்டும், ஐக்கியமாக இருக்கும் சில பேர், அவைகள் பிரச்சனையாகட்டும், சரியான நேரத்தில் அவரால் சரியான கருத்தை எழுத முடியவில்லை.
இது சம்பந்தமாக என் போன்ற கருத்தாளர்களின் ஆலோசனைகளையும் ஏற்க மறுப்பதால் கருத்தாளர்களில் பலர் ஒன்று சேர்ந்து இந்தப் பிரச்சனைகள் எப்படி தீர்ப்பது என்று முடிவெடுக்க கடந்த 17.06.2012 அன்று வெளி வந்த செய்திக்கு (தன்னிலை விளக்கத்திற்கு) தக்க பதில் கருத்துக்களை காயல்பட்டணம் டாட் காமிற்கு அனுப்பிக் கொடிருந்தோம்.
ஒட்டுமொத்தமாக எங்கள் கருத்துக்களையும் அவர் நிராகரித்துவிட்டார். ஒரு போனில் கூட அதைப் பற்றி பேசுவதற்கு தயாரில்லை என்பதோடு, ஒட்டுமொத்தமாக எல்லா கருத்தாளர்களையும் உங்களுக்கு பல சன்னிதானங்களின் மகா மகிமையைத் தெரிய முடியாமல் போனதால் இவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று கூறி எங்களையும் கொச்சைப்படுத்தினார்.
இதன் பிறகு இவருக்கு பதில் எழுதி எந்த உபயோகமும் இல்லை என நான் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் பல கருத்தாளர்கள் எவ்வளவோ எடுத்து எழுதியும் அவர் அதைப் பற்றி ஆலோசிக்க முன்வரவில்லை.
இதற்கிடையில் நேற்று Kayalpatnam.com-ல் சில கருத்தாளர்களின் பதிவுகளில் நகர்மன்றத் தலைவி செய்தது மாபெரும் மன்னிக்க முடியாத குற்றம் என்பது போல் உள்ள சில கருத்துக்களை காண நேர்ந்தது இது என் மனதை மிகவும் பாதித்தது.
இதில் அந்தக் கருத்துக்களின் யோக்கியதையும் வெளிப்பட்டது மட்டுமல்லாது, எல்லா கருத்தாளர்களும் அவர்களுடன் இணைப்பது போன்று எழுதியிருந்தது. அவர்களின் எல்லா நோக்கங்களையும் சந்தேகப்பட வைத்துவிட்டது.
இத்தகையவர்களை வைத்துக் கொண்டு எத்தனை கேள்விக்கணைகளைத் தொடுத்தாலும் அது நம்மைச் சேர்மன் ஆபிதாவின் அனுதாபி, ஊர் பெரியவர்களை மதிக்கத் தெரியாத - நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள், திருவிழாவுக்கு கடை விரிப்பவர்கள். உடுத்த துணியோடு அரபிகளால் ஊருக்கு விரட்டப்பட்டவர் எனும் சந்தேகக் கண் கொண்டுதான் பார்க்கப்படும். அவரது கருத்துக்களில் நேர்மை இருப்பதும் சந்தேகம்தான்.
பொதுநலச் சேவை என்று வந்துவிட்டால் இதுபோன்ற விமர்சனங்களைப் பற்றி எல்லாம் கவலைப்படக் கூடாது என சிலர் கூறலாம்.
என்னைப் பொருத்த வரை தனி மனித ஒழுக்கமும் சுய கௌரவமும்தான் முதலில் முக்கியம். அதன் பிறகு தான் பொதுநலச் சேவை.
நல்ல கருத்துக்களை நல்ல இணையதளங்களில் மட்டும்தான் எழுத வேண்டும் என்பது என் கருத்து. அப்படியென்றால் இப்போது இருக்கும் இணைய தளங்கள் நல்லவைகள் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். நான் எந்த தளத்திற்கும் நல்லவை என்றோ, கெட்டவை என்றோ சான்று தரப்போவதில்லை. அவர்களின் கெட்ட செயல்கள் எப்போது நேரிடையாக காண நேர்கிறதோ அல்லது ஆதாரபூர்வமாக தெரியவருகிறதோ அப்போது மட்டும்தான் அவர்களைப் பற்றி கருத்து கூறமுடியும்.
எனவே எனது சக கருத்தாளர்களிடம் தெரிவிப்பது என்னவென்றால் இந்த (ஆடியோ) உரையாடலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து, அவர்களை மக்களுக்கு வெளிப்படுத்துவதுடன் இனி அவர்கள் வெட்கித் தலை குனிந்து தம் தவற்றை உணரும் வகையில் கருத்தெழுதுங்கள் அதை விட்டு விட்டு சேர்மனின் குறைகளை கிளறுவதால் இது போன்ற ஆடியோக்கள் என்ன? வீடியோக்களே வெளிவந்தாலும் அவைகள் திசை திருப்பப்படும் என்பது உறுதி! கெட்ட எண்ணங்களுடன் நல்ல செயல்கள் செய்ய முடியாது.
யார் என்ன எழுதினாலும் பரவாயில்லை நாம் நல்லதை எழுதினால் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என சில நண்பார்கள் கூறலாம். மக்களுக்கு நன்மை கிடைப்பதற்கு பல நல்ல வழிகள் இருக்கின்றன. அதைச் செய்து நன்மைகள் பெற்றுக் கொள்ளலாம். இப்படிப்பட்ட கருத்துப் போர் தேவையில்லை.
இன்னும் சில காலங்கள் அவதானித்து, என் கருத்து மூலம் பொது வாழ்வில் நன்மைகள் செய்ய முடியுமா? என்று பார்ப்பேன். முடியாவிட்டால் இந்த மடி கனணியையேத் தூக்கி எறிந்து விடுவேன்.
இறுதியாக ஒன்று, நான் கருத்தெழுதிய நாள் முதல் இன்று வரை நான் யாரிடமாவது, அல்லது யார் கருத்தையாவது திருடிப் பெற்றிருந்தால், அல்லாஹ்வின் சாபம் என் மீது உண்டாவதாக!
என்னைப் பற்றியும் என் உள்ளத்தைப் பற்றியும் வல்ல அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross