தூய பணிகள் தொடரட்டும். . posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (kayalpatnam)[21 June 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 19491
பதில் கூறி என் பணியை குறைத்து விட்டார்கள். நன்றி கவிமகன் அவர்களே!
அடுத்து தலைவி அவர்களுக்கு, முன்னர் நான், தாங்கள் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். அது தற்போது தேவையில்லை என்ற நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. உங்கள் புண்ணிய பனியின் பயணத்தை எந்த தங்கு தடையின்றி, எத்தயக்கமும் இல்லாமல் தொடருங்கள்.
அல்லாஹ்வின் மீது அச்சமில்லாதவர்களும் ,ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுபவர்களும், வக்கர குணத்தை விதைக்க முயலும் வீணர்களும் உங்களை எல்லா திசைகளிலும் சொல்லாலும், செயலாலும் திக்குமுக்காட வைக்க வேண்டுமென்ற வஞ்சக வலையை பின்னுகிறார்கள்.
அந்த வஞ்சக நெஞ்சுடையவர்களின் வார்த்தைகள் ஆகாயத்தில் அழகு நிலாவை பார்த்து ஐந்தறிவின் ஒப்பாரிஎன்று ஓரம் கட்டி விட்டு உங்கள் ஒப்பற்ற கைதூய்மையான தொண்டு தொடரட்டும்!
இப்புண்ணிய காயல் புனிதமாவதற்கு தங்களால் இயன்ற ஒத்துழைப்பை தர உண்மையான எத்தனையோ இதயங்கள் உங்களுக்கு உறுதணையாக வரத்தயாராக உள்ளோம்.
தூய பணிகள் தொடரட்டும்!.
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross