Re:காயல்பட்டினம் நகர்மன்ற 01... posted bySalai. Mohamed Mohideen (USA)[21 June 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 19503
தனக்கென்று வாசகர்கள் மத்தியில் நல்லதொரு “இமேஜை” உருவாக்கி வைத்திருந்த சகோதரர் அவர்களின் இந்த தன்னிலை விளக்கம் பல கமன்ட்களை படித்ததில் backfire (தனக்கே திரும்பி) ஆகிவிட்டது போல் தெரிகின்றது. ‘படம் பார்த்து கதை எழுதுகின்றார்கள்’ என்றதினால் இவைகளை இப்பொழுது இங்கு எழுதுகின்றேன்.
அந்த குரல்களுக்கு சொந்தக்கார்கள் யாரென்று பெரும்பாலானோருக்கு தெரியும். அதனை அச்செய்தியின் கமன்ட்களை படித்தால் உணரலாம். ஆனால் தானாகவே தன்னிலை விளக்கத்தின் மூலம் தேவையில்லாமல் அக்கேள்வியை கேட்டு சிக்கி கொண்டார்.
வாசகர்கள் வெளியூரில் / வெளிநாட்டிலேதான் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் எண்ணமும் செயலும் தன் தாய் மண்ணை பற்றிதான் உள்ளது. இறைவன் மீது ஆணையிட்டு (வல்லாஹி) கூற முடியுமா என்று வாசகர்கள் கேட்ட, இதுவரை மறுப்புரையே கூற படாத பல கேள்விகளே அதற்க்கு சாட்சி.
'தலைவியே!! ஆளும் கட்சியில் சேர்ந்து விடுங்கள்' என்று உத்தம புத்திரர்கள் கூட தூது போனதும், தங்க ராஜாவுக்கு கும்பிடு போட சொன்ன விவரம் வரை பலருக்கும் எப்பவே தெரியும். ஒரு சிலர் அதனை வெளியிடாது கண்ணியம் காத்தனர்... ஒரு சிலர் பொறுமை இழந்து அதை வெளியிடும் நிலைக்கு தள்ள பட்டனர்.
இரண்டாம் பைப் லைன் திட்டத்தில் ஒவ்வொருவருக்கும் இரண்டரை லட்சம் வரை கிடைக்கும் என்பதும் அதனை பாவம் புண்ணியத்திட்க்கு பயந்த ஒரு சிலர் கூட (அதனை வாங்காமல் விட்டால் எங்கே மற்ற கவுன்சிலர்கள் ஆட்டை போட்டு விடுவார்களோ என்று) அதனை வாங்கி வேற 'நல்லதொரு குமார் / படிப்பு காரியத்திற்க்கு' பயன் படுத்த திட்டமிட்டுள்ளது முதல் & அத்திட்டம் வந்தால் இரண்டரை லட்சம் கிடைக்கும் என்ற கனவோடும்... எங்கே அதனை நல்லவர்களும் வல்லவர்களும் அடைய விடாமல் கெடுத்து விடுவார்களோ என்ற மன பிராந்தியில் தினமும் காலத்தை தள்ளுவது வரை யாவரும் அறிந்ததே.
இன்னும் சில நாட்கள் கழித்து... பிறரை சுரண்டி கொழுப்வர்கள், தேர்தலில் முகத்திரை கிழிக்க பட்டவர்கள், கூஜா தூக்கிகள், ஊழல் பேர்வழிகள் எல்லாம் பினாமி (களின்) பெயரில் கட்டுரைகள் /கதைகள்/ செய்திகள்/ கமன்டுகள்/துணுக்குகள் / blogs/ பிட் நோட்டீஸ்களிலும் கூட வளம் வருவார்கள். யாராவது கேட்டால்… நாங்கெல்லாம் 'ஒன்று கூடி' கதை எழுதுகிறோம் (சினிமா தயாரிப்பது போல் ?) என்பார்கள். இது போன்ற பல படங்கள் அடுத்த ரிலீசுக்கு தயாராகி 'அனுசரணையாளர்களின்' அப்ருவலுக்காக கூட காத்திருக்கலாம்.
'ஆளும் கட்சிக்கு ஆள் சேர்க்கும் (part time job?) ‘ , 'கும்பிடு சாமிக்கு ஜே!!’ போட சொல்லும் மற்றும்
"மேற்கூறியவர்களின்" கேள்விகளுக்கெல்லாம் ‘தலைவி’ பதில் தர வேண்டுமா என்பதனை சிந்திக்க வேண்டிய விஷயம். கேள்வி கேட்பவர் ஹக்கானவராக இருந்தால் அல்லது இவைகளில் நியாயமானவைகள் என்று எதுவும் இருந்தால் மட்டும் பதில் கூறுங்கள்!!
'ஈ - டெண்டேர்ணா' என்னான்னு தெரியாவிட்டாலும் கூட 'அடுத்தவனை குழிபறிக்க' சட்டத்தின் சந்து பொந்துகள் அத்து படி. ஒரு வருடம் (?) கழித்துதான் நகர்மன்றத்தில் தலைவர் மீது 'நம்பிக்கை இல்லாத தீர்மானம்' கொண்டுவர இயலும் என்ற விதியை நன்கறிந்த நம் அன்பர்கள் ஒன்று கூடி 'திட்டமிட்டபடி' நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு இப்போதிருந்தே காய் நகற்றும் அவர்களின் புத்திசாலித்தனம் யாவரும் அறிந்ததே!!
ஒரே கல்லில் இரண்டு மாங்காய். டம்மி தலைவர் (puppet) கிடைத்த மாதிரியும் இருக்கும்.... அந்த இரண்டரை லட்சதிட்க்கும் ஆபத்து வராமல் இருக்கும்.
"சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் மிகப் பெரிய சூழ்ச்சியாளன். மறைவானவற்றின் மீதான அறிவு அவனுக்கே உரியது!!"
பெண் தலைமை கூடாதென்றும்… ஏதோ ‘மெகா’தான் ஆட்சிக்கு அவர்களை அமர வைத்தது போல சித்தரித்து, தன் ‘சுய சிந்தனையுடன்’ ஒட்டு போட்ட பொதுமக்களை கேவல படுத்துகின்றார்கள். மாதங்கள் எட்டாகியும் இன்னும் ஒரு சில சகோதரர்கள் / தரப்பினர், பொது மகா ஜனத்தால் தேர்ந்தெடுக்க பட்ட தலைவியின் வெற்றியை...
‘பெரியவர்களின்’ தலைமைக்கு ஏற்பட்ட ஒரு
'அவமானமாகவே' இன்று வரை தவறாக கருதுவதும் & தலைவியின் வெற்றியையும் செயல்பாட்டையும் ஜீரணிக்க முடியாத சங்கடத்தில் இருப்பதை அவர்களின் கருத்துக்கள் வாயிலாக உணர முடிகின்றது.
அதற்க்கு காரணம், பெரியவர்கள் மீதுள்ள 'முரட்டுத்தனமான' அன்பு / மதிப்பு அல்லது அவர்கள் தங்களின் சொந்தக்காரர்கள்
/ தெரு - முஹல்லா – ‘கொள்கை’ வாசிகள், நல்லவர்கள் என்ற காரணமாக கூட இருக்கலாம். இன்னும் சிலர் 'மெகா' என்ற அமைப்பை அவமானபடுத்துவதற்கான வாய்ப்பாக எண்ணி தவறு செய்தவர்களை நியாயமும் கூட படுத்துகின்றார்கள்.
"அன்பானவர்களிடம் நேரடியாக/போனில் பேசினாலும் ... உங்களுக்கு தெரியாது பதிவு செய்து தளத்தில் பதிவு ஏற்றி உலாவ விட்டு விடுவார்கள்" - இக்கருத்து அக்கயவர்களுக்கு ஆதரவளிக்கின்றதா அல்லது எதை எதோடு ஒப்பிட்டு பேசபட்டுள்ள ஒரு (3rd class ??? ) முயற்ச்சி என்று தெரியவில்லை.
மெகாவையும் அதன் சேவையையும் எங்கேயோ கடல் கடந்து வாழும் நம் சகோதரர்கள் உணர்ந்ததை கூட ... ஒரு செயல் உறுப்பினாராக நம் அன்புச்சகோதரர் உணராமல் போனது மெகாவின் துரதிஸ்டமே. அதற்கான விளக்கத்தை கவிமகன் காதர் அவர்களின் கருத்து பதிவில் அறிய முடிந்தது.
தலைவியின் செயல்பாட்டில் மீதுள்ள உங்களுடைய நியாயமான அதிருப்திகளை / கேள்விகளை கேட்க்கும் அதே நேரத்தில் ஊழலுக்கும் அநியாத்திட்க்கும் எதிராக குரல் குடுங்கள்!!
ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். நமதூர்… இனிமேல் கடந்த காலம் போல் இருக்காது. ஊழல் புரிபவர்களுக்கும், நமதூரை ஏதோ அவர்கள் அப்பன் வீட்டு சொத்து போல கண்ட்ரோல் பண்ண நினைப்பவர்களுக்கும், அவர்களின் கூஜா தூக்கிகளுக்கும்… என்றைக்கு நம் மக்கள் இன்டர்நெட் இணையதளங்கள் அளவுக்கு விழிப்புணர்வு பெற்றனரோ அன்றே ‘சாவு மணி’ அடிக்கப்பட்டுவிட்டது என்பதனை தோண்டித் துருவும் செய்திகள் வாயிலாகவும் மற்றும் அதில் நமது சகோதர / சகோதரிகள் ஆழமான கருத்து / உணர்வு பதிவுகளே அதற்கு சாட்சி.
உங்களுடைய பொன்னான நேரத்தையும் வசதி வாய்ப்பையும் வல்ல ரஹ்மானுக்கு பயந்து நன்மையான காரியங்களில் மட்டும் செலவு செய்யுங்கள். நிச்சயம் நீங்களும் வெளிச்சத்துக்கு வருவீர்கள்... பிறருக்கு ஒரு முன்மாதிரியாக மக்களால் போற்ற படுவீர்கள்.
இறுதியாக இந்த சகோதர கருத்தியல் யுத்தத்தினால் 'பலனை' அறுவடை செய்ய போவது 'அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்' என்று எண்ணும் கழுகு கூட்டங்களும், எடுபடிகளும் /ஜால்ராக்களும்தான்.
இவர்கள் தலையெடுக்க நம்மை அறியாமலேயே நாமே இதற்கு வழி வகுக்க கூடாது. காலம் எப்பொழுதும் இப்படியே இருந்து விட போவதில்லை.
எஎ
பாசத்திற்குரிய நமது பெரியவர்களும் நகராட்சி தலைவியும் மாற்று கருத்து கொண்ட அன்பர்கள் அனைவரும் ஒன்று சேரும் காலம் வெகு தொலைவில் இல்லை. அப்பொழுது ஊழல் மற்றும் அராஜக பேர்வழிகளுக்கு ஒத்த குரலில் சாவு மணி அடிக்கப்படும்.
ஒற்றுமை எனும் அந்த விடியலை நோக்கி நாம் பயணிப்போம்!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross