பாட்டுக்கு பாட்டு posted bySalai Sheikh Saleem (Dubai)[22 June 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19509
சட்னியார் ஒரு சகாப்தம்
அன்பு சட்னியாரே!
இரயில் பயணங்களில் வந்துபோக நாங்கள் ஒன்னும் வழிப்போக்கர்கள் இல்லை. எங்களுக்கும் எங்கள் தாயகத்தை செழிப்பானதாக்க கனவுகள் உள்ளது. ஆனால் நம்பினோருக்கு துரோகம் செய்ய உம்மளவுக்கு நாங்கள் இன்னும் பக்குவப்படவில்லை.
கிடைத்த சந்தர்ப்பத்தில் நடந்த சீர்கேட்டின் பிரதிபலிப்புகளை ஒலி வடிவில் பதிவுசெய்தால், ஏன் வீடியோ எடுக்கவில்லை என்று ஒரு எக்காளம்!
ஏன் ஒரு டைரக்டர் கூட வைத்துக்கொள்ள வேண்டியதுதானே 'கட்' சொல்வதற்கு ? இதற்க்கு கூடவா நீர் இன்னும் ஸ்கூல் போக வேணடும்?
ஆனால் அங்கு கூட உம் துரோகத்திற்கு பாடம் எடுக்க மாட்டார்களே !
ஓலி நாடாவிர்க்கும் MEGA விற்கும் என்ன சம்பந்தம் ???
ஏன் அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் முடிச்சு போட்டு - நீர் அதில் கழுத்தை மாட்டிக்கொள்கிறீர்?
MEGA என்றால் உங்களுக்கு ஏன் இந்த "மகா" பயம்?
இது ஒரு வழிகாட்டுதல் இயக்கம்தானே?
ஒரு கருத்தை மட்டும் சொல்லி நாங்கள்தான் ஒதுங்கிக் கொண்டோமே ?
ஏற்றோர் ஜனநாயகத்தை அனுபவித்தனர்.
இகழ்ந்தோர் இறுதி வரை மனக் குமுறல்களிலும் உண்மையை மறைப்பதிலும் இயற்கையை மாற்ற முயற்சிக்கின்றனர்.
இன்ஷாஅல்லாஹ் அது ஒரு போதும் முடியாது.
நிஜம் கொஞ்சம் கசக்கத்தான் செய்யும்
எனக்கு தில் இருக்கிறது நான் என் சொந்த பணத்தை ஊர் நன்மைக்காக வேண்டி செலவழித்தேன். பிறர் பணத்தில் குளிர் காய நினைக்கும் விஷயத்தில் தாங்கள் எதிர்பார்க்கும் தகுதி எமக்கில்லை. கற்றுத் தரும் நிலையில் தாங்களிருக்கலாம். ஆனால்
இந்தப் பாடப் பிரிவில் படிக்க எங்களுக்கு விருப்பமில்லை.
பலரது பக்கெட்டுகள் நிறைந்துள்ள போதிலும் மனதில் மட்டும் ஏனோ தளர்வுதான் காணப்படுகிறது.
ஆனால், அல்ஹம்துலில்லாஹ், எங்களின் பக்கெட் காலியானாலும்
மனங்கள் நிறைந்திருக்கிறது.
நாங்கள் கொள்கையில் வெற்றி பெற்றவர்கள்!
குளத்தைப் பகைத்துக்கொண்டு கால் கழுவாதவர்கள் நீங்கதான் என முகம் பார்க்கும் கண்ணாடியை முன்னிறுத்தி ஒரேயொரு முறை சொல்லும்! அது யாரென நொடிப்பொழுதில் தெரியும் உமக்கு.
நீர் "மெகா" வோடு இணைகிறீர் என்றதும், எங்களுக்கு முதல் வந்த மினஞ்சலே
"ஏனப்பா வேலிக்குள் போகிற ஓணானை ---------""
நீர் நிமிஷத்திற்குள் நிறம் மாறும் குணம் ஊருக்கே தெரிந்த ஒன்றாகி விட்டது
அந்த நிமிஷம் முதல் உம் பெயர் எங்களின் மின்னஞ்சல் பட்டியலிலிருந்து நீக்கம் செய்தோம். பிறகு, உமது ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்பட்டது
ஒரு கொள்கைக்கு கட்டுப்படுவதாக நடிப்பவர்களுக்கு இஸ்லாம் கொடுத்த அடைமொழியை அடைய ஏன் இத்தனை ஆசை உமக்கு?
சத்தியவானுக்கு கொடை பிடிக்கும் கர்ணனே
எங்கள் இளவல் கவிமகன் மற்றும் ரிபாஈ அவர்களின் கேள்விக் கணைகளுக்கு உங்கள் முபாஹலாவை - எதிர்கொள்ள சொல்லுங்கள்! அவர்களின் சுயரூபம் முக்காப்புலாவாகிவிடும்.
உம் பதிவிலிருந்து நீர் யாரோ உம்மிடம் சொல்ல சொன்னதை
ஏதோ சொல்ல வருகிறீர் என்று மட்டும் புரிகிறது
சொல்வதை திருந்த சொல்லும்! அப்போதுதான் எல்லோருக்கும் புரியும் உம் நிஜம்
தாங்கள் அரபு நாட்டில் இருந்து மற்றவர்களைப் புறம் பேசலாம்
மற்றவர்கள் அரபு நாட்டில் இருந்து நன்மைகள் கூடவா செய்யக்கூடாது ?
MEGA விற்கு செய்த துரோகத்திற்கும் சேர்த்து நீர் அல்லாஹ்விடம்
பாவமன்னிப்பு கோரும்.. அவன் மன்னிப்பவன் எஜமான், ஆனால் நாங்கள் மனிதர்கள்.
குதிரை பேரம் பேசியவருக்காக வக்காலத்து வாங்கும் புரோகிதரே! உம் முகத்திரை கிழிந்து தொங்குவது உமக்குத் தெரியவில்லையா?
இத்தனை இருந்தும் என் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லும்
சட்டினியாரே! உண்மையில் நீர் ஒரு சகாப்தம்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross