Re:உறுப்பினர் ஏ.லுக்மானின் அ... posted bySalai.Mohamed Mohideen (USA)[22 June 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 19527
தன்னிலை விளக்கத்திற்க்கு தன் குடும்ப சிரமங்களுக்கிடையிலும் பொறுப்புடன் எவருடைய மனதையும் பாதிக்காது பதிலுரை தந்த நகர்மன்ற தலைவிக்கு வாழ்த்துக்கள். உங்களின் இந்த விளக்கம் நடு நிலையார்கள் அனைவருக்கும் தன்னிறைவை தருவதோடு மட்டுமன்றி உங்கள் மன உறுதி பாட்டை எண்ணி வியக்கின்றோம். வல்ல இறைவன் உங்களுக்கு என்றும் துணை நிற்பான் !!
நீங்கள் செய்தது சில நம் இணைய தளங்கள் செய்தியாக புகைப்படத்துடன் தருவதை கூட 'ஏதோ வெளிச்சம் போட்டு காண்பிக்கிறார்'என்று ஒரு சிலர் விமர்சனம் செய்தனர். ஆனால் நீங்கள் செய்து (சிரத்தை எடுத்து எழுதிய கடித போக்குவரத்துக்கள்) வெளிவராதது எத்தனையோ இங்கே காண முடிகின்றது. நீங்கள் செய்தது அனைத்தையும் மறந்து முழு பூசணிக் காயை சோற்றில் மறைக்கும் முயற்சிகள் தோல்வியையே அடையும்.
உங்கள் மீது "தேவையில்லாமல்" கூறபடும் அவதூர்கள் (அது தன்னிலை விளக்கமாக அல்லது பினாமிகளின் கட்டுரை தொடர்கள், கமன்ட்கள்
அல்லது வல்லவர்களின் தன்னிலை செய்தி அறிக்கைகளாக இருந்தாலும் சரி) அனைத்தும் வந்த சுவடு தெரியாமலே மறைந்து அதனை வீசியவர்களுக்கே ஒரு களங்கமாய் அமையட்டும்... நீங்கள் என்றும் இதே உறுதி பாட்டுடன் வல்லவனுக்கு மட்டும் பயந்து நடக்கின்ற வரை !!
படிப்பவர்களுக்கு எளிதாக புரிய வேண்டுமென்று மெனக்கெட்டு சிரமம் எடுத்து செய்தியையும் அது சம்பந்த பட்ட கடித போக்குவரத்தையும் முறை படுத்தி தந்த நமது செய்தியாளருக்கு நன்றிகள் பல. நமது இணைய தளம் ஒரு professional மீடியா என்பதனை வழக்கம்போல் ப்ரூவ் பண்ணி விட்டீர்கள்.
"நகர்மன்ற கூட்டம் வீடியோ பதிவு " - நல்லதொரு முடிவு. முடிந்தால் லைவ் டெலிகாஸ்ட் பண்ணுங்கள்.
"துணைக்குழுக்கள் அமைத்து செயல்படத்துவங்கியிருந்தால் " - இதை பற்றியெல்லாம் உத்தம புத்திரர்களும் பினாமி பெயர்களில் கட்டுரை செய்திகளை தருபவர்களும் மறந்தது ஏனோ?
“நான் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வரவில்லை ..." - என்ன ஒரு கடமை யுணர்வு.
"உறுப்பினர் லுக்மான் அவர்கள் சென்னை தொழிலதிபர் தரும் பயண செலவை நமது மார்க்கத்தில் 'அன்பளிப்பை' உதாசீனம்படுத்தக்கூடாது" - உள்ளம் பூரித்து போனோம். இறைவன் மீது ஆணையாக என்று லஞ்சம் வாங்க வில்லை என்று கூறும் அதே நேரத்தில் இதுவும் , ஆளுங்கட்சிக்கு
ஆள் சேர்ப்பதும், தொழிலதிபர்களிடம் (காசுக்கு பல்லிளித்து) தயவு காட்ட /சல்யூட் அடிக்க சொல்வதும் மறைமுக லஞ்சம் தானே???
தலைவிக்கு அந்த நெருக்கடியை "ஹக்கான" எவரும் தரமாட்டார்கள். அதனை (அந்த நெருக்கடியை ) தருவதற்க்கு நாம் யார்????
நெருக்கடிகளுக்கு ஒத்துழைக்க வில்லையென்றால்... இது மாதிரியான அம்புலி மாமா கதைகளை சொல்லி பயமுறுத்தும் படலம்?
" லுக்மான் அவர்கள் - எப்படி அவர்களை அழைப்பீர்கள், எப்படி அவர்களை எங்களுக்கு இணையா உட்கார சொல்வீர்கள், எங்களை நீங்கள் மதிக்கவில்லை" - உங்களை ஒரு மனதாக தேர்ந்தெடுத்த வார்டை சார்ந்த சகோதரர்கள்/ஜமாத்தினர் நீங்கள் கவுன்சிலர் ஆனதும்...உங்களை விட கீழ் ஜாதியாக போய்விட்டார்களோ என்னவோ. முதலில் அவர்களை மதிக்க ஒவ்வொருவரும் கற்று கொள்ள வேண்டும்.
எது எப்படியோ ... சகோதரர் அவர்கள் கசப்புகளை மறந்து தன்னிலை விளக்கம் தந்த பாடங்களை மட்டும் மனதில் கொண்டு கரம் படாத கைகளுக்கு சொந்தக்காரராய் மட்டுமல்லாமல் மறைமுக அன்பளிப்புகள் /தயவுகளுக்கும் துணை போய்விடாமல் சீரிய பணி புரிய வாழ்த்துக்கள்.
"தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் (TWAD) நிலுவைத் தொகையை விரைந்து செலுத்தினால்தான்...." -அரவேட்காட்டு அனுபவத்தை விட தலைவியின் இந்த சமயோஜித முடிவே மிக மேலானது.
" சந்திரகாந்த் காம்ளே IAS அவர்களிடம் - தலைவருக்கு அறையும், வாகனமும் வேண்டும் என்று உறுப்பினர்களே கோரிக்கையை முன்வைத்தனர்" - இவையிறண்டையும் ஊரை காக்கும் உத்தமர் இதனை பெரிய குறையாக வினவி அறிவுரையும் வழங்கினார். அதற்க்கும் பதில் கிடைத்துள்ளது
"இரு மாதத்திற்கு ஒரு முறை சிறப்பு கூட்டம் நடத்த " - நமது பெரும்பாலான கவுன்சிலர்களுக்கு "parallel நகராட்சி" கூட்டத்தை அடென்ட் பண்ணவே நேரம் சரியாக இருக்கும். அதை அடென்ட் பண்ணினால் தங்க காசு (பொற்குவியல்) கிடைக்கும். இங்கே என்ன கிடைக்கும்?
17 - வது வார்டு உறுப்பினர் வீட்டில் ஏற்ற பட்ட தீர்மானங்கள் சூப்பரோ சூப்பரப்பு. அவைகளின் நோக்கமும் வெட்ட வெளிச்சமாகி விட்டது. பொதுமக்களால் தேர்ந்தெடுக்க பட்ட தலைவிக்கு கட்டளையிட இவர்களுக்கு அதிகாரம் / அனுமதியிருக்கிறதா? இது மாதிரி கூட்டங்கள் போடும் போது மீடியாகளுக்கும் அழைப்பு கொடுங்கள். அல்லது ஒரு செய்தியாவது தாருங்கள். அப்பத்தான் உங்களை 'தலைமேல்' வைத்து கொண்டாடி கமன்ட் எழுத தோணும்.
நிதி நிலையறிக்கை பற்றி கேட்ட அன்பு சகோதர்களுக்கும் பதில் கிடைத்துள்ளது. அதன் உண்மை நிலையை அறிந்திருப்பீர்கள்
"சட்டதிட்டங்களை மதிக்காமல், குறுக்குவழியில் செல்லவோ (NOTE THIS POINT BROTHER/COUNSELORS), லஞ்சம் வாங்கவோ
நான் ஒரு போதும் துணை போக மாட்டேன்" - சபாஷ் !! சரித்திரம் நாளை இதனை எழுதும்.
அநேகமாக நமது நகர்மன்ற அலுவலர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் அடி வயிறு கலங்கியிருக்கும். எப்படி அடிச்சாலும் (பினாமி பெயரில் செட் up பண்ணினால் கூட) திருப்பி அடிக்கின்றாரே. அனுசரணையாளர்கள் உதவியுடன் /ஆசியுடன் உடனே parallel நகராட்சி மன்றத்தை யாராவது ஒரு உறுப்பினர் வீட்டில் கூடி... அடுத்தகட்ட சதி திட்டங்கள் தீட்ட படும்?
தீனுல் இஸ்லாத்தை பெரிது மதிக்கும் இந்த சின்ன ஊரிலேயே (அதிக முஸ்லிம் உறுப்பினர்களை கொண்ட) சீரிய சிந்தனை யுள்ள தலைவி, சமூக ஆர்வலர்கள், நல்லவர்கள் பலர் இருந்தும்... இந்த ஊழலை ஒழித்து மக்களுக்கு நன்மை செய்ய இவ்வளவு சிக்கல் இடையூறுகள் என்றால் (வாய் கிழிய மார்க்கம் பேசி என்ன பயன்?). மற்ற ஊர்கள் எல்லாம் எம்மாத்திரம்.
ஊழல் செய்யும், தன் பணி செய்ய தவறும் அதிகாரிகள் மாற வேண்டுமென்றால் நகர் மன்ற உறுப்பினர்களும் நல்லவர்களாக இருந்தால் தான் அவர்களை முறையாக வேலை வாங்க முடியும். அவர்களின் லஞ்ச லாவண்ய எண்ணங்களும் ஒழியும்.
நல்ல தூய நகர்மன்ற ஆட்சியை தர நினைக்கும் நமது நகர்மன்ற தலைவிக்கும், கரம்படியாத பிறரிடம் மறைமுக ஊதியத்தை எதிர்ப்பார்க்காத ஒரு சில கவுன்சிலர்கள் சந்திக்கும் சோதனைகளை... அவைகள் பல ரூபத்தில் (புதிது புதிதாக வரும் செய்திகள்,'யார் யாரெல்லாமோ' தரும்
அறிக்கைகள், கட்டுரை தொடர்கள், parallel நகராட்சி சூழ்ச்சி கூட்டங்கள் ) தலையெடுத்திருப்பதை யாவரும் நன்றாக அறிந்ததே.
ஊர் பெரியவர்கள், சமூக ஆர்வலர்கள்,KWT போன்ற சமூக இயக்கங்கள் மற்றும் குறிப்பாக மெகா அமைப்பினர் இந்த இக்கட்டான தருணத்தில் இந்த நல்லவர்களுக்கு ஆதரவாய் இருந்து அவர்களின் கரங்களை வலுபடுத்த வேண்டியது இன்றிமையாதது மட்டுமன்றி நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டது விழலுக்கு இறைத்த நீரை போல வீணாகி விடும். மறுமையில் வல்லோனுக்கு பதில் சொல்ல வேண்டியது வரும் என்பதனை நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்வோமாக !!
'ஹராமான பணமே வாழ்க்கை' என்று எண்ணும் மாமனிதர்கள், பொழுது போக்கிற்காக அவர்களை ஊக்குவிக்கும் அனுசரணையாளர்கள் அவர்களின் எடுபடிகள்/துதிபாடிகள் இருக்கும் வரை... ஊழலை தொடர்ந்து போராடி கொண்டே இருக்கவேண்டும்.
நம் நகர்மன்ற அனைத்து கவுன்சிலர்களுக்கும் அலுவலர்களுக்கும் அவர்களை ஆட்டுவிக்கும் அனுசரணையாளர்களுக்கும்... ஊழலின்றி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மன மாற்றத்தை வல்ல இறைவன் தருவானாக!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross