Re:உறுப்பினர் ஏ.லுக்மானின் அ... posted byHusain Noorudeen (Abu Dhabi)[22 June 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19529
தலைவியின் விளக்கம் மிகவும் தெளிவான சிந்தனையோடு யாரையும் பாதிக்காத வகையில் வரையப்பட்டுள்ளது. சகோதரியே, இந்த மன்றத்தில் இத்தனை கஷ்டங்களுக்கும் நடுவில் நீங்கள் செய்யும் இந்த மகத்தான சேவைக்கு அல்லாஹ் நற்கூலியைத் தருவான் என்ற பிரார்த்தனையை தவிர பெருசாக நாங்க உங்களுக்கு என்னத்த தரமுடியும். வாழ்க.
“நான் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வரவில்லை... Unofficial கூட்டத்திற்கு தான் (துணைக்குழுக்கள் குறித்த ஆலோசனை கூட்டம் ) வந்தேன்” என்று அனைவருக்கும் கேட்கும் விதமாக உறுப்பினர் லுக்மான் அவர்கள் கூறினார்
மின்சார வாரியத்திற்கும், நகராட்சிக்கும் எந்த அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்களும் இல்லை என்பதை அறியாமல், மின்சார வாரிய ஊழியர்கள் நகராட்சி பணிகளை செய்ய மறுக்கிறார்கள் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்ய - உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்க முற்பட்டார். உறுப்பினர் லுக்மான் அவர்களின் புகாரினால் - மின்சார வாரிய ஊழியர்கள் நகராட்சிக்கு வர மறுத்தால் - யாருக்கு நஷ்டம்?
“அதுக்கென்னா , நமது மார்க்கத்தில் அன்பளிப்பை உதாசீனம்படுத்தக்கூடாது, ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஒன்று இல்லையா?” என்றும் உறுப்பினர் லுக்மான் அவர்கள் வினவினார்.
அதற்கு உறுப்பினர் லுக்மான் அவர்கள், “எதற்கெடுத்தாலும், மக்கள், மக்கள் என கூறாதீர்கள்! மக்கள் பிரதிநிதிகள் என்று நாங்கள் எதற்கு இருக்கிறோம்?” என்றார்.
இதற்கு உறுப்பினர் லுக்மான் அவர்கள் - எப்படி அவர்களை அழைப்பீர்கள், எப்படி அவர்களை எங்களுக்கு இணையா உட்கார சொல்வீர்கள், எங்களை நீங்கள் மதிக்கவில்லை என்று கூறினார்.
லுக்மான் காக்கா, இதுக்கு மேலும் உங்க நல்லவர் வேஷம் பலிக்காது. இனி நீங்க அந்த பதவில தொடர்றதுக்கு சுத்தமா லாயக்கே இல்லாதவர்னு நிரூபணம் ஆயிடுச்சு. தேவை இல்லாம அடுத்த வெளக்கெண்ணை விளக்கம் கொடுக்குறேன்னு சொல்லி மூக்கு உடைபடாம வூட்டுல போய் உக்கார்ற வேலைய பாருங்க.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross