உள்ளதைச் சொல்வோம்...நல்லதைச் செய்வோம்...வெறொன்றும் தெரியாது...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[23 June 2012] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19539
என் முந்தையக் கருத்தில் நான் கூறியிருந்ததைப் போன்று, “ நல்ல ஒரு தலைவியை செயல்பட விடாமல் சிரமங்களை அடுக்கடுக்காக கொடுத்து நெருக்கடி ஏற்படுத்தி கடைசியில் UNFIT முத்திரையைக் குத்தி வழியனுப்பி வைக்க முனைந்து விட்டனர்”.
சேர்மனின் தன்னிலை விளக்கம் பலரது உளங்களையும் தொட்டு விட்டது உறுதி! எல்லாம் நன்மைக்கே!
லுக்மான் காக்கா அப்படியொரு விளக்கம் கொடுத்திராவிடில், தலைவியின் இத்தனை உழைப்புக்களும் ஊர் அறியாமல் போயிருக்கும்!
அநியாயத்துக்கு சேர்மன் ஆபிதாவின் காலை வார நெனச்சாங்க.... அது தன் கால்கள்தான்னு தெரியாம வாரி, இப்ப (மக்கள் மனதிலிருந்து) விழுந்து கிடக்குறாங்க!
அதாங்க! எப்பவும் நல்லோருக்கு வல்லோன்தான் துணை! ஒரு சின்ன விளக்கம்! இதை நான் யாரையும் புகழவோ? அல்லது அனுதாபியாகவோ எழுதவில்லை! ஹக்கு...!!! ஆஹா... ஹக்குன்னா உண்மைங்க...! நீங்க வேறெ! ஹக்குங்கிற வார்த்தையைக் கேட்டாலே சிலருக்கு...பக்குங்குங்குதோ?
இம்முறை நான் விடுமுறையில் ஊர் வந்திருந்த போது நமதூர் இணயதளங்களுக்காக யாரும் வற்புறுத்தாத நிலையில் என் சொந்த விருப்பத்தின் பெயரில் செய்திகள் புகைப்படங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அதில் ஒரு மன திருப்தி கிடைத்தது. இக்காலகட்டங்களில் பல நண்பர்கள், பெரியவர்களின் நட்பும் கிடைத்தது. நகராட்சியின் நிகழ்வுகளை ஒரு சில வேளைகளில் செய்திக்காக பதிவு செய்ய போனபோது சேர்மன் ஆபிதா அவர்களின் தூய நட்பும் ஒரு சகோதரிக்கான பாசமும் எனக்கு கிடைத்தது. அவர்கள் படும் பாடு, சிரமங்கள், ஊருக்காக உழைக்கும் உயர்ந்த சிந்தனை, பல்வேறு பொது நல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து பம்பரமாய் ஒரு பெண் சுற்றிச் சுழலுவதைக் கண்டு வியந்துள்ளேன்.
பள்ளிவாசல்கள், சங்கங்கள், பொது நல அமைப்புக்கள், என பல்வேறு இயக்கங்களுக்கு அறிக்கை மற்றும் அழைப்பிதழ்களைக் கொடுக்க சகோதரி என்னைப் பணித்தார்கள். மனமுவந்து கொளுத்தும் வெயில் என்று கூட பாராமல் அப்பெண்மணியின் ஆர்வம் மற்றும் ஊர் நல அக்கறையால் ஈர்க்கப்பட்டு என்னால் முடிந்த அளவிற்கு சிறு,சிறு உதவிகளைச் செய்ய முடிந்தது.
ஒரு நாள் ஏதோ ஒரு செய்திக்காக இணைய தள பொறுப்பாளர்களோடு அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்த போது அவர் நகராட்சி ஊழியர்களோடு பணி விபரங்கள் மற்றும் செயல் விளக்கங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். அதன் பின் சில நிமிடங்கள் காத்திருப்புக்கு பின் எங்களை அழைத்தார். வீட்டிற்குள் சென்றதும் எனக்கு கிடைத்தது கைப்பிடி உடைந்த சேர் ஒன்று.
சமையல்கட்டுக்கு போவதும் பின் எங்களோடு பேசுவதும், மீண்டும் சமையல்கட்டு, பின்னர் சில காகிதங்கள், ஊடகத்திற்கான செய்தி, இப்படி தொங்கோட்டம் ஓடிக்கொண்டிருந்தார் நம் நகராட்சித் தலைவி.
அவரது வீட்டை சற்று நோட்டமிட்டேன். ஒழுங்கில்லாத சாமான்ங்கள், ஆங்காங்கே ஆவனங்கள், நிறைய வெள்ளைப் பேப்பர்கள் என அலங்கோலமாக இருந்தது. புரிந்துகொண்டேன்
தலைவிக்கு தலைக்கு மேல் பொறுப்புக்கள் உள்ளதால் தம் சொந்த வீட்டை ஒழுங்கு படுத்த நேரமில்லை என்று. முடுக்கு கதவில் கோளா மாளாவென கையால் எழுதி தொங்க விடப்பட்டுள்ள ஒரு அட்டைக் கண்ணில் படவே, அதனருகில் சென்று பார்த்தேன். “எங்க உம்மாவைப் பார்க்க இன்று போய் நாளை வாருங்கள்” எனும் வாசகம் எழுதப்பட்டிருந்தது!
சேர்மன் ஆபிதா அவர்களின் மகனிடம் தம்பி இதை யார் எழுதினாங்க? எனக் கேட்ட போது அச் சிறுவன் கூறிய பதில் என் நெஞ்சில் எட்டி உதைத்தது போல் இருந்தது. “ஆமா...எப்ப பாருங்க எங்க உம்மா பிஸியாவே இருக்காங்க! எல்லாரும் வந்து வந்து தொல்லை பண்ணுறாங்க அவங்களுக்கும் ரெஸ்ட் வேண்டாமா? அதுக்குதான் நான் இப்படி எழுதி போட்டிருக்கேன்” எனத் தன் தாய் படும் அவஸ்தையைத் தாங்க முடியாத அந்தபிஞ்சு உள்ளம் வாடுவதைக் கண்டு பேச முடியாமல் என் நாக்கு வறண்டு போயிற்று!
சேர்மன் ஆபிதா மட்டும் அவங்க சொல்லுற மாதிரி கொஞ்சம் வளஞ்சு கொடுத்திருந்தாங்கன்னா... வீடு என்ன? இந்த எட்டு மாசத்துலெ பங்ளாவே கட்டியிருக்கலாம்! அல்லாஹ்வுக்கு அஞ்சி, தனது வாக்குறுதியைப் பேணி, ஊர் மக்களின் நன்மைக்காக பாடு பட்டுவரும் இது போன்ற பெண்மணி நம் காயலுக்கு தலைவராகக் கிடைத்ததற்கு உண்மையில் நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இன்னும் எவ்வளவோ? சொல்லலாங்க... கருத்து மேடையை எழுத்துமேடையாக்கி விடக் கூடாதேன்ணு நிறைவு செய்கின்றேன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross