Re:உறுப்பினர் ஏ.லுக்மானின் அ... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[24 June 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19592
ஒரு அசாதாரண சூழலில் நகராட்சி தேர்தல் நடைபெற்றபோது ஒரு பலம்வாய்ந்த நிர்வாக ரீதீயான ஒரு அமைப்பை எதிர்த்து சில சாதாரனவர்களால் ,அவர்களின் கடும் உழைப்பால் முயற்சியால் மக்களின் பேராதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்டவர் நமது நகராட்சி தலைவி அவர்கள். அந்த சமயத்திலும் கூட வார்டு மெம்பர்களில் கணிசமானவர்கள் இந்த தலைவியோடு ஒத்துழைக்க மாட்டார்கள் என்கிற நிலைதான் இருந்தது. அது இன்று உண்மையாகவும் போயிற்று.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் ஒரு சிலரே தலைவியோடு சீரிய முறையில் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அவர்களில் ஒருவர் அருமை சகோதரர் லுக்மான் அவர்கள். அதன் காரணமாகத்தான் நகராட்சி துணை தலைவர் பதவிக்கு யார் பொருத்தமானவர் என இதே இணையதளம் கருத்துகணிப்பு நடத்தியபோது பெரும்பாலோர் லுக்மான் அவர்களின் பெயரையே பரிந்துரை செய்தனர்.
லுக்மான் அவர்களின் தன்னிலை விளக்கத்திற்கும் ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ அறுபதுக்கும் மேற்பட்ட கருத்துக்கள் பதிவு பெற்றுள்ளன. இப்போது தலைவி அவர்களின் விளக்கத்திற்கும் அதே அளவில் கருத்துக்கள் பதிவாகியுள்ளன. இனியும் பதிவாகும். நிறைய சகோதரர்கள் தங்களது வாதத் திறமையை நிரூபித்துள்ளனர். அந்த அளவுக்கே இதில் பயனும் உள்ளது. தயவு செய்து இந்த விவாதத்தை முடித்து வையுங்கள். பல அக்கப்போர்களை தடுத்த புண்ணியம் உங்களை சாரும். நன்றி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross