அல்லாஹ்வுடைய சாபம்: posted byH.I.RUGNUDEEN BUHARY (KERALA)[24 June 2012] IP: 180.*.*.* India | Comment Reference Number: 19594
அஸ்ஸலாமு அலைக்கும்.
இக்காலத்தில் லஞ்சம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. சில ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தை விட லஞ்ச வரவே அதிகம். பல நிறுவனங்களில் லஞ்சக் கவர்கள் சகஜமாக நடமாடுகின்றன. பல வேலைகள் ஆரம்பம் முதல் இறுதி வரை லஞ்சமின்றி சாத்தியமற்றதாகி விட்டன. இதனால் வசதியற்றோர் பெரும் கஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர். இது பல ஒப்பந்தங்களை மீறுவதற்கும், ஊழியர்கள் நிறுவனப் பொறுப்பாளர்களை பெருங்குழப்பத்தில் ஆழ்த்தவும் காரணமாகிறது. லஞ்சம் கொடுக்கப்படுகிறது. லஞ்சம் கொடுக்கவில்ல எனில் தரமான வேலை நடைபெறுவதில்லை. அல்லது தாமதப்படுத்தப்படுகிறது.
வேலை வேண்டுமா? வேலையை மாற்றவேண்டுமா? மருத்துவ விடுமுறை வேண்டுமா? பரிந்துரை செய்ய, தொடர்பை ஏற்படுத்தித் தர இவ்வளவு தந்துவிடு! என்று பெருந்தொகையை நிபந்தனையாக கூறும் பலர் உள்ளனர். இவ்வாறு லஞ்சம் பெறுவது நபிமொழியின் அடிப்படையில் ஹராம் ஆகும். இது போன்ற தீயவிளைவுகளின் காரணங்களினால் தான் நபி (ஸல்) அவர்கள் இத்தவறுக்கு உடன்படும் இரு தரப்பினருக்கும் பாதகமாக பிரார்த்தித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: லஞ்சம் கொடுப்பவன் மீதும், வாங்குபவன் மீதும் அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டுமாக! (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)
நல்ல மனிதர்களுக்கு மறுமை நாளில் அல்லாஹ்விடம் கிடைக்கும் கூலியே போதுமானதாகும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross