ஆபிதா அல்ல! ஆட்டுக்குட்டி அல்லது ஆபிரஹாம் லிங்கன் இருந்தாலும் இதைத்தான் செய்ய முடியும்! posted byHameed Rifai (Yanbu (KSA))[24 June 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19597
தன் மீது எண்ணில் அடங்காத விமர்சனங்களை கவுன்சிலர் திருவாளர் லுக்மான் அவர்கள் மழையாய்ப் பொழிந்துள்ள போதிலும், அவை ஒவ்வொன்றுக்கும் பதிலளிக்கும் வகையில், கவுன்சிலர்களின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்ற எக்கச்சக்கமாக அவர்களிடம் பதிவுகள் இருந்தும், தன் தரத்தை இறக்காமல், தன் பணி மீது சொல்லப்பட்ட குறைகளுக்கு மட்டும் விமர்சனம் அளித்துள்ளார் நமது நகர்மன்றத் தலைவி அவர்கள்.
இதற்குப் பிறகும், “சகோதரி ஆபிதா அவர்களின் நீண்ட அறிக்கையில்.நான் அதை செய்வதுக்கு முயற்சிசெய்தேன்,இதை செய்வதுக்கு கடிதம் எழுதினேன் இப்படியே அடிக்கிக்கொண்டே போகிறார்.அதிகாரத்தை தன் கையில் வைத்துள்ள நகராச்சி மன்ற தலைவி தனது நிர்வாக திறமைஇன்மையால். எதிர் கட்சிபோல செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்.” (Comment Reference Number: 19571) என்று குறிப்பிட்டுள்ளார் ஒரு சகோதரர்.
உண்மையில் இவர் விதண்டாவாதம் செய்கிறாரா அல்லது புரியாமல் எழுதுகிறாரா என்பது அவருக்கும் அல்லாஹ்வுக்குமே வெளிச்சம்!
என்றாலும், ஒரு நகர்மன்றத் தலைவருக்கு உள்ள அதிகாரம் குறித்து நான் அறிந்து வைத்துள்ள சில விஷயங்களை இங்கே தருகிறேன்:-
உதாரணத்திற்கு, நமதூருக்கு ஒரு நல்ல திட்டம் கொண்டு வர வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அதை,
(1) நகர்மன்றத் தலைவர் கூட்டப் பொருளில் வைத்து (அல்லது உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்ட அந்த பொருளை ஏற்று,) தீர்மானம் இயற்ற வேண்டும்.
(2) அதுகுறித்த work orderஐ நகராட்சியின் பணி மேற்பார்வையாளர் அளிக்க வேண்டும்.
(3) அந்தப் பணி குறிப்பிட்ட காலத்தில் நடக்கிறதா என்பதை தலைவர் கண்காணிப்பார்.
அப்பணி நடைபெற்றால், அதன் கால அளவு, தரம், கணக்கு வழக்குகள் குறித்து முறையான சட்ட விதிகள் மற்றும் குறிப்புகளுடன் கண்காணிக்க அவருக்கு அதிகாரம் உண்டு.
அப்பணி நடைபெறாவிட்டால், அதுகுறித்து வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ நகராட்சி ஆணையருக்கு உத்தரவிடுவார்.
அதன் பிறகும் அப்பணி நடைபெறவில்லையெனில், ஆணையருக்கு மேலுள்ள நகராட்சி மண்டல இயக்குநரிடம் (RDMA) நகர்மன்றத் தலைவர் முறையிடுவார்.
அதன் பிறகும் அப்பணி நடைபெறவில்லையானால், தமிழ்நாட்டின் சுமார் 110 நகராட்சி நிர்வாகங்களுக்கும் தலைமைப் பொறுப்பில் இருக்கும் CMAயிடம் அவர் முறையிடுவார்.
இதுதான் அவரால் செய்ய முடியும். தன்னால் எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்ய நம் நகர்மன்றத் தலைவி ஆபிதா அவர்கள் தயங்கவோ, காலம் கடத்தவோ இல்லை என்பதையே இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கடந்த நகராட்சியில் - கவுன்சிலர்கள் தயவில் பதவிக்கு வந்த வாவு செய்யிது அப்துர்ரஹ்மான் ஹாஜியார் அவர்கள் - நேர்மையான நடவடிக்கையை மேற்கொள்ள முனைந்தபோது, நகராட்சி உறுப்பினர்களின் பிழைப்பில் மண் விழும் என்று அச்சப்பட்ட காரணத்தால், அவரை நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் தூக்கியெறியவும் தயங்கவில்லை இன்று இருக்கும் 2 கவுன்சிலர்களையும் உள்ளடக்கிய பழைய கவுன்சிலர்கள். அதன் பிறகு, எக்கேடும் கெட்டுப் போகட்டும்! நாம் நம்மால் முடிஞ்சத செய்வோம், அல்லது நகராட்சி பக்கமே செல்லாமல் இருப்போம் என்று வெறுப்பில் ஒதுங்கிக்கொண்டார்.
இந்த செய்தியில், வாவு செய்யிது அப்துர்ரஹ்மான் ஹாஜியார் அவர்கள் தெரிவித்த சில முக்கிய வாசகங்கள் பின்வருமாறு:-
நகர்மன்றத் தலைவரை நாம் நோpல் சந்தித்து இதுகுறித்து வினவியபோது: தான் ஒருபோதும் தவறிழைக்க விரும்பவில்லை என்றும் தன் பொறுப்பைப் பயன்படுத்தி பிறர் தவறிழைக்கவும் தான் அனுமதிக்கப் போவதில்லை எனவும், நகர்மன்றத் தலைவராக தான் பொறுப்பேற்ற நாள் முதலே தீவிரமாக இக்கொள்கையைக் கடைப்பிடித்து வருவதாகவும்,
பொருளாசையை அடிப்படையாகக் கொண்ட உறுப்பினர்கள் சிலருக்கு எனது இக்கொள்கை பிடிக்காததால், அவர்கள் துவக்க நாள் முதலே தனது நலத்திட்டப் பணிகளுக்குத் தடையாக இருப்பதோடு மட்டுமின்றி, தேவையற்ற திட்டங்களை தமது வார்டுகளுக்கு செயல்படுத்த உத்தரவு வழங்கக் கோரி தன்னை தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும், தான் அவற்றுக்கு சிறிதும் இடம் கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், தனது இக்கொள்கையால் சம்பாதிக்க முடியாமல் போன சில நகர்மன்ற உறுப்பினர்கள் தன்னை தனது இல்லத்தில் தனிப்பட்ட முறையில் வந்து சந்தித்து, நீங்கள் என்ன நலத்திட்டங்களை வேண்டுமானாலும் செய்யுங்கள்... எங்களுக்கு ஆட்சேபணை இல்லை... அதே நேரத்தில் எங்களுக்கு அத்திட்டங்களின் மூலம் ஆதாயம் கிடைக்க நீங்கள் தடையாக இருக்கும் வரை அத்திட்டங்களை நடைமுறைப்படுத்த நாங்கள் ஒருபோதும் விடமாட்டோம்... என்று கூறியதாகவும் தெரிவித்தார்.
இதுபோன்ற காரியங்களுக்கு சிறிதும் நான் துணைபோகாதிருந்ததால், நகர்மன்றக் கூட்டங்களில் மேற்படி உறுப்பினர்கள் தொடர்ந்து தன் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இடைஞ்சல்களை தொடர்ச்சியாகத் தந்துவந்ததாகவும், அவற்றின் காரணமாகவே தான் தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆகிய - இத்தளத்தில் வெளியான பழைய செய்திகள் மூலம் அறியலாம். (தயவுசெய்து, சிரமம் பார்க்காமல் இந்த செய்திகளையும் படித்து முடிக்கவும். அப்போதுதான் சில உண்மைகள் புலப்படும்.)
நேர்மையை தன் கொள்கையாகக் கொண்டிருந்தும், வாவு செய்யது அப்துர்ரஹ்மான் ஹாஜியார் அவர்கள் மேல் நடவடிக்கைக்கு முனையவில்லை. அதற்கான காரணம், அவருக்கும் அல்லாஹ்வுக்குமே தெரியும்!
நான் இங்கு குறிப்பிட வருவது என்னவென்றால், வயிற்றுப் பசி எடுத்தவன் எதையாவது உருட்டித் தின்பது போல இந்த நகராட்சியில் திருட்டுப் பசியெடுத்தவர்கள் எப்பாடுபட்டாவது அதை அடையவே முனைவார்கள். அதற்கு உறுதுணையாய் இருப்போரை அணி சேர்த்துக்கொள்வார்கள். அதற்குத் தடையாக இருப்போர் அப்துர்ரஹ்மான் ஆனாலும் சரி! ஆபிதாவானாலும் சரி!! முழு மூச்சுடன் எதிர்ப்பார்கள்.
காரணம், நேர்மைக்குக் கட்டுப்படுவதால் அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை என்றும், தீமையான வழியில் சென்றால்தான் நம் வீட்டில் அடுப்பு எரியும் என்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் சிலரும், சம்பளம் பெறும் அதிகாரிகள் பலரும் உறுதியான எண்ணம் கொண்டிருப்பதுதான்!
எனவே, ஆபிதா அவர்கள் இருக்கும் இந்தப் பொறுப்பில் அமெரிக்காவையே ஆண்ட ஆபிரஹாம் லிங்கன் இருந்தாலும் சரி! அல்லது ஒரு ஆட்டுக்குட்டி இருந்தாலும் சரி!! இதைத்தான் செய்ய முடியுமே தவிர, அதிகாரிகளை நீக்கவோ, தண்டிக்கவோ இவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதுதான் யதார்த்தம்!
அல்லாஹ்தான் எல்லோருக்கும் உண்மையை உணர்த்த வேண்டும்!
நகராட்சியை குறுக்கு வழியில் செயல்படுத்துவது சிலருக்கு பிழைப்பு!
வேறு சில தங்க ராஜாக்களுக்கு அது பொழுதுபோக்கு!!
ஒன்று மட்டும் நிச்சயம்! தனக்குத்தானே தவறு செய்யும் ஒருவனைக் கூட இறைவன் நாடினால் பொருந்திக்கொள்வான். ஆனால், ஊருக்கே துன்பம் விளைவிக்கும் இக்கொடிய செயலை பொழுதுபோக்காக செய்பவன் உலகிலும் நல்லா இருக்க மாட்டான்! மறுமையிலும் பொல்லாத் துன்பங்களை சுமப்பான்!! இதைத் தவிர வேறென்ன சொல்ல?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross