Re: தன்முனைப்பு (ஈகோ) தவிர்த்து, இருவரும் மக்கள் நலப்பணியாற்றுவீர் ! posted byarabi haja (hong Kong)[24 June 2012] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 19599
இந்த இணைய தளத்தில் நகர் மன்ற தலைவி சகோ. ஆபிதா மற்றும் உறுப்பினர் சகோ. லுக்மான் ஆகியோரின் அறிக்கைக்கு பல்வேறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டதை பார்க்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. முதலில் அனைத்து சகோதரற்கும் நன்றி.
இவற்றில், ஒருவரை ஒருவர் தூண்டிவிடும் நோக்கில் பதிவு செய்யப்பட்டவைகளை தவித்து, நடுநிலையான நல்ல பல கருத்துக்களும் பதிவாகியுள்ளன.
என்னை பொறுத்தவரை தலைவரும், உறுப்பினரும் தத்தமது தளத்தில் - கடமை நோக்கில்- ஆதங்கத்தையும், அதற்க்கான விளக்கத்தையும் தந்துள்ளனர்.
இந்நிலையில் மக்களாகிய நாம் இருவரையும் தட்டிகொடுத்து, அவர்களது பணியை ஆற்றுமாறு உற்சாக படுத்தி தமது கருத்துக்களை பதிய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
அவர்களை தன்முனைப்பு (ஈகோ) ஆட்கொள்ளாமல், கருத்து வெளிப்பாடு அனைத்தும் மக்கள் நலனுக்கே எனும் பொது நலன் விஞ்சியிருப்பின், நிச்சயம் இந்த பரஸ்பர வாதத்தினால் மக்களுக்கு நன்மையே விளையும். இன்ஷா அல்லாஹ்.
இத்தனை ஆண்டுகள் நமதூரில் கிட்டத்தட்ட மன்னராட்சி முறை அமுலில் இருந்ததை போன்ற நிலை. மக்கள் ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை. கடந்த நகராட்சித் தேர்தல் புதிய பரிமாற்றத்தை (transformation)- மக்களாட்சியை- நமதூரில் ஏற்படுத்தியுள்ளது.
ஊழலே நிர்வாகம் என்ற நிலை மாறி ஊழலற்ற நிர்வாகம் என்ற உறுதி பெருவாரியான - படித்த மக்களிடையே ஏற்பட்டு விட்டது. ஒருசிலரின் காலடியில் அதிகாரம் மண்டியிட்டுக் கிடந்த நிலை மாறி மக்கள் கையில் கொடுக்கப்பட்டிருக்குது. மக்கள் தங்கள் பிரதிநிதிகள் எவ்வாறு கடமையாற்றுகிறார்கள் என அறிய முற்படுகிறார்கள்.
வெளிப்படையான நிர்வாகம் இன்று உதயமாகியுள்ளது. மக்கள் கருத்துக்கு அஞ்சும் நிலை. மக்கள் நம்மை பற்றி என்ன நினைகிறார்கள்? அவர்களுக்கு நாம் நமது பதவி காலங்களில் என்னென்ன பணியாற்றினோம் என பட்டியலிடும் அவா. இவை நல்லவை இல்லையா?
புதிய அனுபவம் இது. இன்றைய குழப்ப நிலைக்கு இதுதான் காரணம் என நினைக்க தோன்றுகிறது. இந்த பரிமாற்றம் ஆரம்ப நிலையில் (initial stage) உள்ளதால் இந்த குழப்பம் சில காலம் நீடிக்கலாம். ஐந்தாண்டு கழியும் நிலையில் நாம் முதிர்ச்சி அடையலாம்- நம்மை நாம் தயார் படுத்திகொண்டால் - பொறுத்திருந்து பாப்போம்.
எனவே மக்களாகிய நாம் இதை நல்ல மாற்றத்திற்கான சந்தர்ப்பமாக மாற்ற முயற்சிக்கவேண்டும். இல்லையேல் மீண்டும் மன்னராட்சி முறையே அமுலுக்கு - ஒருசிலரின் கையில் அதிகாரம் என்ற நிலை - வந்துவிடும். ஜாக்கிரதை !! மீண்டும் நாம் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுவோம். விழலுக்கு இறைத்த நீராய் அனைத்தும் வீணாகிவிடும். அறிவார்ந்த மக்கள் விழிப்புணர்வு கொள்வர்.
தலைவர் சகோ. ஆபிதா மற்றும் சகோ. லுக்மான் அவர்களுக்கு ஒரு பொது வேண்டுகோள் ! பொது நலன் விரும்பும் தாங்கள், சில மாச்சரியங்களை - பிரச்சினைகளை - தன்முனைப்பு களைந்து- பரஸ்பரம் விட்டுகொடுத்து, இருவரும் பேசி தீர்த்துக்கொள்ளலாம். மக்கள் மன்றத்திற்கு வரும் முன் எவ்வகையான வாதங்கள் அவசியம் என்பதை உணர்ந்து வெளிப்படுத்துங்கள்.
தேவையற்ற வாதங்கள் என்னை போன்றோரை விரக்தி அடைய வைக்கும். இருவரும் கொள்கை பால் உறுதி மிக்கவர்கள். உங்களில் ஒருவருமோ அல்லது இருவருமோ தோல்வி கண்டால் நீங்கள் கொண்ட கொள்கைக்கு பின்னடைவு என்பதை அறியாதோரா நீங்கள் ?
அல்லாஹ்வுக்காக கேட்கிறேன் ! உங்கள் தன் முனைப்பை (ஈகோ) வை இருவரும் விட்டொழியுங்கள். இவ்வூரின் கடைக்கோடி ஏழை எழியோருக்காக கேட்கிறேன் ! உங்கள் மீது அளப்பரிய அன்பும் பாசமும் கொண்ட - நம்பி வாக்களித்த, உழைத்த, துஆ வேண்டிய - நல்ல உள்ளங்களின் சார்பாக கேட்கிறேன்!
தயவு செய்து நாலாந்தர லாவணி கச்சேரியை தவிர்த்து, உங்கள் சக்தியை மக்கள் நலனுக்காக செலவிடுங்கள்! உங்கள் இருவராலும் முடியும். மற்ற நல்ல உள்ளம் கொண்ட உறுப்பினர்களையும் இணைத்து, மிச்சம் இருக்கும் நாலாண்டு காலத்தை மக்களுக்கு நல்ல பணியாற்ற வேண்டுகிறேன்.
நண்பர்களே ! காயல் நல்லுள்ளங்களே ! உங்கள் கருத்துக்களும் அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் டானிக்காக அமையட்டும். ஆதரவாக பேசுவதாக நினைத்து, உசுப்பேத்தி இருவரும் இவ்வேழ்வியில் மாண்டு விடாமல் காப்பாத்த வேண்டியது நமது கடமை. அல்லாஹ் அனைவரையும் - நமதூரையும் - காப்பற்றட்டும். அல்லாஹ் நாடினால்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross