Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த... posted bymackienoohuthambi (colombo)[29 June 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 19705
நான் முன்பு இந்த இணையத்தளத்தில் சகோதரர் லுக்மான் அவர்கள் கொடுத்துள்ள குற்றச்சாட்டுக்களை ஒரு பொது மேடை போட்டு மக்களுக்கு தெளிவு படுத்த சொல்லியிருந்தேன். இப்போது நடந்துள்ள வெளிநடப்பை பார்த்தால் ஒன்று தலைவியின் நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை அல்லது எல்லா உறுப்பினர்களும் தலைவிக்கு ஒத்துழைப்பு தருவதில்லை எனபது தெளிவாகிறது. இனிமேலும் நகரமன்ற தலைவி தலைமை பதவியில் தொடர்வது நகர்மன்றதை கேலிக்குரியதாக்கி விடும். யாரும் உங்களிடம் தங்கள் குறைகளை சொல்ல வரமாட்டார்கள். பேசாமல் ஆணையர் அவர்கள் இந்த நகர்மன்றதை கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்த புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள். இனிமேல் அரசியல் கட்சிகள் ஆட்சிதான் வரும். ஊர் ஒற்றுமை என்று பேசுவதெல்லாம் மக்களை மடையர்களாக்கும் பேச்சு என்றே தெரிகிறது. வாழ்க நமதூர் ஒற்றுமை. நாம் எப்போது ஒன்று பட்டோம் இப்போது மட்டும் ஒன்றுபட.பிரிந்து இருப்பதே அழகு காயல்பட்டினத்தின் தனி தன்மை. மார்க்கமானாலும் மன்றமானாலும் பிரிந்து வாழ்வோம் வெற்றிகளை இழப்போம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross