Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த... posted byHameed Rifai (Yanbu (KSA))[29 June 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19712
திருவாளர் லுக்மான் காக்கா அவர்களே!
நான் முன்னர் சொன்னது போல் நினைத்ததை சாதித்து இருக்கிறீர்கள் சபாஷ்!
கவுன்சிலர்கள் எல்லோருக்கும் லஞ்சமாக கிடைக்கும் பணத்தை தலைவி அவர்கள் எப்படி தடுக்கிறார்கள் என ஹக்கானவர் பேசிய பேச்சை மிக லாவகமாக திசை திருப்பி, தலைவி பற்றி தன்னிலை மறந்த ஒரு அறிக்கை வெளியிட்டு உங்கள் நோக்கத்தை நிறைவேற்றி பாதி வெற்றியும் கண்டுள்ளீர்கள்
இன்று வெளிநடப்பு - அதுவும் கூட்டத்தில் கலந்து கொள்ள படி பணம் 600 ருபாய் வாங்கி பத்திரமாக பாக்கட்டில் வைத்து விட்டு தலைவி அவர்கள் இணைய தளத்தில் தன்னை விமர்சித்து விட்டார்கள் என கூறி உள்ளீர்கள்!
முதலில் தன்னிலை மறந்த பொய்யான அறிக்கையை விட்டு தலைவியை விமர்சித்தது தாங்கள் அல்லவா மறந்து போயிடுச்சோ?
இரண்டாவது முறையும் விஷம் தோய்த்த அம்பை தலைவி மீது பதில் அறிக்கை என்று ஒரு அறிக்கை கொடுத்துள்ளீர்கள் அந்த அறிக்கையின் யோக்கியதையை அருமை சகோதரர் 13 வது வார்ட் உறுப்பினர் சம்சுதீன் காக்கா அவர்கள் மறுப்பு பதில் அளித்ததின் மூலம் நீங்கள் பொய்யர் என்பதை நிருபித்து இருக்கிறார்
உங்கள் வெளிவேஷம் எனும் முகத்திரை இதன் மூலம் கிழிக்கப் பட்டிருகிறதே...? இன்னுமா உங்களுக்கு புரியவில்லை? பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள் நீங்கள் வெறும் அம்புதானே? உங்களை ஏவியவர்கள் யாரென - ஏற்கனவே புரிந்து வைத்துள்ள நிலையிலும் மக்களுக்கு அதனை ஐயம் பிசகற புரிய வைத்துவிட்டீர்கள்!
ஆரம்பத்தில் கேவலமான உரையாடலை திசை திருப்பி உறுப்பினர்களுக்கும், தலைவிக்கும் இடையில் சிண்டு முடிந்தீர்கள்
அதன் பிறகு சம்சுதீன் காக்காவிற்கும் கோமான் தெரு நண்பர்களுக்கும் சிண்டு முடிக்க முனைந்து தோற்றுப் போனீர்கள்
இப்போது ஐக்கிய பேரவைக்கும் தலைவிக்கும் சிண்டு முடியும் வேலையை ஆரம்பித்திருக்கிறீர்கள்.
நல்ல குளிர் காயிறீங்க காக்கா... ஆனா என்ன ஒன்னு? உங்கள் சாயம்தான் வெகு சீக்கிரமே வெளுத்து விடுகிறது
அடுத்து புதுசா எதாவது ட்ரை பண்ணுங்க காக்கா ஏன்னா அடிபட்ட புலி Sorry Sorry சூடு பட்ட பூனை சும்மா இருக்காதுதானே?
அடுத்து துணை தலைவர் அவர்கள் கூறிய குற்றச்சாட்டு ஆச்சர்யத்தையே அளிக்கிறது. கூட்டம் நடப்பதற்கு சில தினங்களே உள்ள நிலையில், கால அவகாசம் தராமலேயே கூட்டப் பொருள் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், இக்குறைக்கு தலைவியே முழுப் பொறுப்பென்றும் கூறி வெளிநடப்பு!
இரண்டு முறை நகர்மன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் தங்களுக்கு கூட்டப் பொருள் யார் வழங்குகிறார்கள் என்ற அடிப்படை கூட தெரியாமல் இருக்கிறீர்களா? அதனை செய்து கொடுக்க வேண்டியது ஆணையரின் பணி என்பதை மறந்துவிட்டீர்களா அலல்து வசதியாக மறைத்து விட்டீர்களா?என்ன பண்ண? மேலிடத்து உத்தரவு!!! உங்களுக்கும் வெளிநடப்பு செய்ய காரணம் வேணுமே...?
அடுத்து 16 வது வார்ட் உறுப்பினர் சாமு காக்கா வெளி நடப்புக்கு சொன்ன காரணம் - முகம் பார்க்கும் கண்ணாடி முன்னின்று சொல்ல வேண்டியது. இதைத் தவிர இதில் சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை.
அடுத்து நம்ம கதாநாயகன் 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் அவர்கள் இணையதளத்தில் தன் மீது காழ்ப்புணர்ச்சியோடு ஒருதலைப்பட்சமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும் கூறி, கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.
ஒருதலை பட்சம்னா என்னங்க கொஞ்சம் சொல்லுங்களேன்?அதென்ன காழ்ப்புணர்ச்சி? உங்களுக்கும் அவர்களுக்கும் கொடுக்கல் வாங்களில் பகையா??
உங்களுக்கு ஒரு செய்தியை நினைவூட்ட விரும்புகிறேன். தேர்தல் சமயம் பாசத்திற்குரிய எனது அருமை நண்பர் முஸ்தாக் அவர்கள் தொடந்து என்னிடம் வலியுறுத்தி, உங்கள் பிரச்சாரத்திற்கு உதவுமாறும் அதற்காக நோட்டீஸ் மேட்டர் போட்டு பிரிண்ட் குடுக்குமாறும் வலியுறுத்தினார்கள் அப்பொழுது கூட உங்களை பத்தி நல்ல விதமான செய்திகள் எங்களுக்கு கிடைக்கவில்லையே?நாங்கள் எப்படி இவருக்கு உதவுவது என பதில் கேள்வி கேட்ட பிறகும், நீங்கள் முன்பு போல் இல்லை திருந்திவிடீர்கள் அதற்கு நான் உறுதியளிக்கிறேன் என என் நண்பர் சொன்ன காரணத்தினால், உங்களது பிரச்சாரத்திற்கு நானும் என்னால் ஆன உதவிகளைச் செய்ததோடு மட்டுமின்றி, இந்த இணையதளத்தில் செய்தி வெளியிடும் எனது அன்பு நண்பன் எஸ்.கே.ஸாலிஹ் இடம் நோட்டீஸ் மேட்டரும் போட்டுக் கேட்டேன். அவரும் தொழில் என்ற அடிப்படையில் தர தயாரானார். ஆனால் அது பிரிண்ட் செய்யப்படவில்லை.
இவ்வாறு நாங்கள் பலரும் உதவி செய்தோம். நீங்களும் வெற்றி பெற்று வந்தீர்கள். உங்களுக்கு உதவியதற்காக இப்போது நண்பர் முஸ்தாக்கோடு சேர்ந்து நாங்களும் வெட்கப்படுகிறோம்.
ஆனால் ஒரு ஆளுக்கு மட்டும் எப்போதும் நன்றி சொல்லிக்கொண்டே இருங்கள்! அவர்தானே உங்கள் வண்டவாளத்தை பூதாகரமாக மக்கள் பேசவிடாமல் தன்னிலை மறந்த அறிக்கை வெளியிட்டு திசை திருப்பியது?
அடுத்து 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் அவர்கள்
எஃப்.சி. இல்லாத வண்டியை பழுது நீக்க வேண்டாம்... புதிய வண்டியை வாங்கலாம் என்று ஒரு சில உறுப்பினர்களைத் தவிர அனைத்து உறுப்பினர்களும் தெரிவித்த நிலையிலும், மினிட் புத்தகத்தில் தீர்மானத்தை மாற்றி எழுதியதால் வெளி நடப்பு செய்திருக்கிறார்
FC இல்லாத வண்டி இன்று நேற்று அல்ல பல வருடங்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது. (அவ்வாறு இருக்கக் கூடாது என்பதில் இரு வேறு கருத்திற்கு இடமில்லை.) இதை மாற்றி புதிய வண்டி கண்டிப்பாக வாங்க வேண்டும் என உறுப்பினர்களும், தலைவி அவர்களும் சேர்ந்து தீர்மானித்தார்கள். ஆனால் அதற்கான முறைப்படியான வேலைகள் முடிநது, புது வண்டி வாங்க சில மாதங்கள் அவகாசம் எடுக்கும். அதற்குள் இருக்கும் வண்டியை சரி செய்து பயன்படுத்துவோம்.
கோயில் விசேஷம், ரமழான் மாத தேவைகள் என அடுத்தடுத்து பல தேவைகள் முன்னிற்க, தற்போது வாடகைக்கு வண்டி எடுத்தாலும் - அதற்கு செலவழிக்கும் தொகையை விட குறைவான தொகைதான் இருக்கும் வண்டியை பழுது நீக்க செலவாகும் என்று தலைவி கூட்டத்தில் தெரிவித்ததாகவும், அதற்கு அனைவரும் மறுப்பு தெரிவிக்கவில்லையென்றும் அறிந்துள்ளேன். இது உண்மைதானா என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.
ஒருவேளை, 05ஆவது வார்டு கவுன்சிலர் ஜஹாங்கீர் சொல்வது உண்மை என்று வைத்துக்கொண்டாலும், தற்போதைய வெளிநடப்புக்கு எல்லோரையும் போல நானும் ஒரு காரணம் சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் தாங்கள் சொன்னதாகவே தெரிகிறது1 அப்படித்தானா?
அடுத்து என் வீடு சார்ந்த 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா அவர்கள் நகர்மன்றக் கூட்டத்தை வீடியோ ஒளிப்பதிவு செய்வது கலாச்சாரத்திற்கு மாற்றமானது என்றும், அதனைக் கண்டித்து வெளிநடப்பு
உணமைலையே மிகுந்த வேதனையும் ஆச்சர்யமும் அடைந்தது தாங்கள் கூறிய குற்றச்சாட்டில்தான்! நகர்மன்ற உறுப்பினர்களிலே அதிகம் படித்து ஆசிரியை பணியாற்றும் நீங்களே இப்படி ஒரு குற்றச்சாட்டை தேடி பிடித்து சொல்வீர்கள் என நானும் மற்ற நண்பர்களும் எதிர்பார்கவே இல்லை
உங்களுக்குமா நிர்பந்தம்? இன்னும் உங்கள் மீது நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சில சதிகாரர்களின் வலையில் தாங்கள் சிக்கிக் கொள்ள வேண்டாம்! சொந்தமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறன் உள்ள நீங்கள் இந்த சதி வலையில் இருந்து மீண்டு வருவீர்கள் என இன்னும் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.
சில உறுப்பினர்கள் கோரிக்கை நிறைவேற்ற படவில்லை என்ற காரனத்தால் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள் அவர்கள் இதற்கு முன்னால் நடந்த கூட்டதில் கூட இதே காரங்களை கூறி வெளிநடப்பு செய்திருக்கலாம்.
அடுத்து, 12ஆவது வார்டு உறுப்பினர் சுகு அவர்கள், இன்டர்நெட்டை கூட்டத்திலிருந்து ஒழித்த பிறகே கூட்டத்திற்கு வருவதாக சவடால் விட்டுச் சென்றுள்ளார். அப்படியானால், இன்னும் 4 ஆண்டுகள் 5 மாதங்களுக்கு இதுதுான் தங்களின் நிலையாக இருக்கும் போல!
இறுதியாக, பதவியேற்ற சில நாட்களில் திருவாளர் லுக்மான் அவர்கள் தெரிவித்த கருத்தையே என் கருத்தாக சொல்லி முடிக்கிறேன்.
இங்கு parellel நகராட்சி மன்றமே நடக்கிறது. அங்கு
எடுக்கப்படும் முடிவுகள் இங்கு அமல்படுத்தப்படுகின்றன.
இங்கு எந்த பதவிக்கு யார் வரவேன்றும் என்பதை பெரிய மன்னர்கள் முடிவு செய்கிறார்கள்.
மக்கள் பார்பதில்லை...
ஆனால் அல்லாஹ் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
இந்த parellel நகர்மன்றதை எங்கே நடத்தினீர்கள்?
எந்த மன்னரிடமிருந்து உத்தரவு வந்தது?
எந்த மந்திரி மச்சான் அமல்படுத்தினார் அதற்காக எவ்வளவு பட்டுவாடா செய்யப்பட்டது?
இன்னொரு தன்னிலை மறந்த அறிக்கை தருவீர்களா லுக்மான் காக்கா அதிலாவது பொய்யில்லாத யாரையும் சிண்டு முடியாத உங்கள் வயதுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ற அறிக்கை தருவீர்களா????
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross