Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த... posted byOMER ANAS (DOHA QATAR.)[29 June 2012] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 19717
அஸ்ஸலாமு அழைக்கும்!
இப்பத்தான் ஆளாளுக்கு அறிக்கை விட்டு எங்களையும் குழப்பி ஊரையும் குழப்பி ஒருவழியா ஜூன் மாத கூட்டத்துடன் மக்களுக்கு நன்மை ஏதாவது கிடைக்கும் என்று பார்த்தால், உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு காரணம் சொல்லி வெளிநடப்பு செய்து, கொஞ்ச நஞ்சம் இருந்த மக்களின் நம்பிக்கையும் ஒட்டு மொத்தமாக காற்றில் பறக்க விட்டு சென்றுள்ளீர்கள்! சபாஸ்!
ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் சொன்ன வெளிநடப்புக்கான காரணம் உண்மையான, பொது மக்கள் மத்தியில் சீச் சீ இவர்களையா நாம் தேர்ந்து எடுத்தோம் என்று வெட்க்கப் படும் அளவிற்கு வேதனையினை தந்துள்ளது!
உண்மையில் உங்களுக்கு மக்கள் தேவை மீது சேவை நோக்கம் இருக்குமேயானால், உள்ளிருந்து அல்லவா போராடி எங்களுக்கு சேவை செய்து காட்ட தலைவியிடம் எடுத்து சொல்லி இருக்க வேண்டும்! உங்களது இந்த செயலால் முப்பது நாளை, நாங்கள்( ஒரு செயலும் நடைபெறாமல்) கழிக்க வைத்து விட்டீர்களே!
இதிலே ஊழல் செய்யவே வந்து காத்திருக்கும் கழுகுகள், நமதூரின் கண்ணியத்தை ஒரு ஆடியோ கிளிப்பில், காற்றில் பறக்கவிட்ட பின்பும், வெளி நடப்பிற்கு காரணம் சொல்லி செல்கின்றன! என்ன நடக்கிறது நமதூரில்?
நமது தலைவியோ யாரை நம்புவது, யாரை நம்பக் கூடாது என்ற இரட்டை நிலையில் எந்த காரியத்தையும் செயல் வடிவத்திற்கு கொண்டு வர முடியாமல் தவிக்கிறார்!
ஒன்று மட்டும் புரிகிறது! ஒன்று பட்டு எல்லோரும் செயல் படாத வரை, கண்ணியமிகு காயலுக்கு இப்ப பிடித்துள்ள ஏழரை விடாது, விடாது, விடாது!
மக்களே! உலகம் இறைவனின் சந்தை மடம்
இங்கு வருவோரும் போவோரும் தங்குமிடம்
இதுவல்ல நமக்கு சொந்த இடம்
அங்கே இருக்குது வேறு உரிய இடம் !
என்ற E M ஹனிபாவின் குரலோசையினை கேட்டு விட்டு
வழமை போல் தூங்க செல்லுங்கள்.
பாங்கின் ஓசை மீண்டும் ஒலிக்கும்,
பாப்பாக்களை எழுப்பிவிட!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross