அட! என்னப்பா இது? சும்மாவே நகர்மன்றம் வேக்காடு எடுத்து காந்தித் தொலையுது. இதுலெ வேறெ நீங்க வாந்தி, பேதி, மலம்ன்னு கருத்தெழுதிக்கிட்டு, உதாரணம் சொல்ல நல்ல வார்த்தைகளே இல்லையா?
மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஷுஐபு அவர்களே! உங்களுக்கு பதில் கொடுக்க வேண்டாம் என எண்ணியிருந்தேன். ஏற்கெனவே இப்பதிவில் தாங்கள் என் கருத்துக்களை சாடியும், உங்கள் அபிமான உத்தமரை வாழ்த்தியும் சில வார்த்தைகளைக் கையாண்டு இருந்தீர்கள்.
நினைவிருக்கின்றதா ஒரு முறை தாங்கள் கிரிக்கெட் பற்றி கட்டுரை எழுத, அதை விமர்சித்தவர்களோடு கருத்துப்போர் புரிந்து நம் வீடு, குடும்பம் என விமர்சனத்திற்கு ஆளாகினோமே? அதுக்குள்ளேயே மறந்துட்டீங்களா? உங்கள் மருமகன் எனும் உரிமையில் சொல்லுகின்றேன். விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம்தான் பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மூலதனம்!
நீங்கள், அவர்களே! இவர்களேன்னு பெயர் போட்டு வேறு பதில் எழுதி விடுகின்றீர்கள். கருத்துக்களை சொல்வதோடு நாம் நிதானித்துக் கொள்ள வேண்டும். தேவைக்கு மட்டுமே பதில் கொடுக்க வேண்டும். இந்தப் பழக்கம் உங்களுக்கும் இல்லை! நீங்க ஆதரிக்கும் மரியாதைக்குரிய சத்தியவான் லுக்மான் அவர்களுக்கும் இல்லை!
நகர்மன்றத் தலைவியைப் பாருங்கள். பதில் கொடுத்தார்கள். தீர்ப்பை மக்ககளிடம் விட்டுவிட்டார்கள். நகர்மன்ற நிகழ்வுகளால் பிரதிபலிக்கும் கருத்துக்கள் ஊடகங்களின் வாயிலாக கத்திரி போட்டும் போடாமலும் வந்த வண்ணம் இருக்கின்றன. நான் நகர்மன்றத் தலைவரோடு பழகிய சில காலங்களில் அவரது துடிப்பையும், நகர் நலத்தின் மீது அவர் கொண்டுள்ள அக்கறையையும் கண்கூடாகப் பார்த்தேன். அதில் உண்மை, உறுதி, வேகம், விவேகம்,பற்று, பாசம் என பல நல்ல தன்மைகள் அவரிடத்தில் இருந்தது. எனவே தாம் கருத்தெழுதினேன்.
உண்மை எப்போதும் கசக்கத்தான் செய்யும். தாங்கள் சொல்லுவதைப் போன்று ஆதரவு கருத்தாளர்கள் ஒருபோதும் ரசிகர்கள் அல்ல! மாற்றுக் கருத்துடையவர் எதிரியும் அல்ல! முதலில் நல்ல மாத்திரைகளை உட்கொண்டு இந்த வாந்தி, பேதிகளை நிறுத்த முயலுங்கள்.
தினமும் என்னை அர்ச்சித்து குறைந்தது பத்து ஈமெயில் வரத்தான் செய்கின்றது. அவற்றில் சில “ஷா”க் கடிக்கிற மாதிரி வரும். சில ஏம்ப்பா உனக்கு இந்த வேண்டாத வேலை? ”காக்கா” ப்புடிச்ச மாதிரி எழுது, மாசா மாசம் எதாவது உனக்கு அனுப்பித் தருகின்றேன். என்றும் வந்துள்ளது.
இன்னும் சிலர் நான் பொய்யன், பிதற்றல்வாதி, காசுக்கு கருத்தெழுதுகின்றவன். மக்காவை விட்டு வெளியேற வேண்டும். அதையும் தாண்டி “ அவர் அங்கிருந்து வெளியேற மாட்டார். அபுஜஹில், அபுலஹப், உத்பா, சைபா போன்ற பொய், புரட்டு, பித்தலாட்டம் ஆகியவற்றின் தலைமகன்களும் இந்த புனித பூமியில்தானே உலாவினார்கள் என்று ஒருவேளை தன்னை சமாதான படுத்தி கொள்கிறாரோ என்னவோ?” என, உத்தம திருநபியின் உம்மத்தான எனக்கு அவர்கள் கொடுத்துள்ள பட்டப் பெயர்கள்தான் இவை.
இவர்கள் அத்தனை பேர்களுக்கும் நான் தனித்தனியாக பதில் எழுதிக் கொண்டிருதால் என் காலமும்.நேரமும் விரயமாகிக் கொண்டேதான் இருக்கும்! அன்பு மாமனாரே! மருமகன் எனும் உரிமையில் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன். கேட்பதும் கேளாததும் உங்கள் விருப்பம்.
என்றும் அன்புடன்.
ராபியா மணாளன்.
Moderator: பிற உடகங்களை மேற்கோள் காட்டும் வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross