செய்தி: கத்தர், ரியாத், தம்மாம், ஹாங்காங் கா.ந.மன்றங்கள் இணைந்து நடத்திய சர்க்கரை நோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப் போட்டி! 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ...? ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ...? posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[02 July 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19788
ஓர் நல்ல முயற்சி!
விழிப்புணர்வுக்காக மட்டும் என இல்லாமல் காயலரின் திறமைக்கும் இது உறுதுனையாக அமைந்துள்ளது. நான்கு நல மன்றத்தின் முயற்சியால் 300க்கும் மேற்படோர் அதிலும் குறிப்பாக ஆறு வயது அரும்புகளும் பங்கெடுத்துள்ளனர். ஆர்வம் குன்றாமல் ஆரவாரத்தோடு நடைபெற்ற மாரத்தான் போட்டிக்குப் பிறகு சர்க்கரை நோய் நம்மை விட்டு முற்றிலுமாக மாறத்தான் வேண்டும்! எல்லோர் மனதிலும் உற்சாக வெள்ளம், முகத்தில் பெருமிதம், சிறியவர் பெரியவர் என பேதமின்றி ஜமால் மாமாக்கு கூட சீரியல் நம்பர் கொடுத்துள்ளார்கள்.
குறிப்பாக ஓட்டத்திற்கு தயார் நிலையில் முன் வரிசையில் அதுவும் நெம்பர் 001 பேட்ஜை குத்திக்கொண்டு மண்ணின் மைந்தன் நிற்பதைப் பார்த்து அவர்தான் முதலாவதாக வருவார் என எதிர்பார்த்தேன். மனுஷன் 50-வது வந்தவர்களின் லிஸ்டில் கூட இல்லாதது ஏமாற்றத்தை தந்தது.
சாளை-ஜியாவுத்தீன் மேடையை இன்னும் மெருகூட்டினார். இணையதள நண்பர்கள், எஸ்.கே.சாலிஹ் வர்ணனை செய்யும் தோரணை எஸ்.கே மாமாவைதான் நினைவூட்டியது. கவுன்சிலர் ஜஹாங்கிர் மற்றும் நண்பர் முஜாஹித் அலி மிக உற்சாகத்தோடு காணப்பட்டனர்.
பங்கெடுத்து களைத்தோருக்கு மருத்துவ உதவி, மூச்சுப்பயிற்சி, என திட்டமிட்டு செயலாற்றியது பெருமை! நகர் நலத்தில் அக்கறை கொண்டு நகர்வலம் வந்த அத்தனை பேர்களுக்கும் வாழ்த்துக்கள்!
இது ஓர் கூட்டு முயற்சி! களைகட்டியுள்ளது கண்கூடாகத் தெரிகின்றது! வென்ற மாணவர்களைப் பள்ளி வாரியாக அறிய தந்து அப்பள்ளிக்கூடங்களுக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள். யார் பெற்ற பிள்ளையாக இருந்தால் என்ன? எல்லோரும் காயலின் கண்மணிகள்தானே? ஓர் உன்னத சேவைக்காக ஓடிக்களைத்து வந்தவர்களை பாராட்டுவதை விட்டு விட்டு பாரபட்சம் காட்டுவதாக நினைப்பது ஓர் குறுகிய கண்ணோட்டமே! -விவாதம் வேண்டாம் ப்ளீஸ்...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross