செய்தி: கத்தர், ரியாத், தம்மாம், ஹாங்காங் கா.ந.மன்றங்கள் இணைந்து நடத்திய சர்க்கரை நோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப் போட்டி! 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கத்தர், ரியாத், தம்மாம், ... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (காயல்பட்டினம் )[03 July 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 19793
இந்த நிகழ்வு மிகவும் பரவசத்துடனும், வெற்றியாகவும், பிரயோசனமாகவும் நடந்து முடிந்தது. அல்ஹம்து லில்லாஹ்.
இத்தனை போட்டியாளர்கள் கலந்துகொள்வார்களா? என்ற ஒரு அச்சப்பாடும் இருந்தன.
பால் குடி மறவாத சின்னஞ்சிறு பசங்களும் கலந்துகொண்டு, முழுமையாக போட்டித் தூரத்தை முடித்து, ஒரு களைப்பும் இல்லாமல் ஹாயாக அமர்ந்தது மிகவும் ஆச்சரியத்தை உண்டாக்கியது.( பைக்கில் சென்ற எங்களுக்கே களைப்பாக ஆகிவிட்டது!!).
இந்த குழந்தைகளை சரியாக வழி நடத்தினால் கண்டிப்பாக மிக சிறந்த விளையாட்டு வீரர்கள் நமக்கு கிடைப்பது உறுதி.
* முதல் இடம் பெற்ற எஸ்.டி.அஹ்மத் பஸ்ஸாம் அவர்கள், தம்மாம் காயல் நற்ப்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் எஸ்.டி. அப்துல் அஜீஜ் அவர்களின் சகோதரர் ஆவார். எஸ்.டி. அப்துல் அஜீஜ் அவர்களும் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரரும், சௌதியில் நடைபெறும் மாரத்தான் போட்டிகளில் பல வருடங்களாக கலந்துக்கொண்டு பணப்பரிசும், மெடலும் தொடர்ந்து வாங்கி வருவது ஒரு ஆச்சரியமே!!. ஆக மாரத்தான் இந்த சகோதரர்களுக்கு ஒரு இனிப்புப்போல.!!
* காயல் ஜமால் மாமா அவர்கள் இந்த போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். ஆரம்ப இடத்திலும், முடிவு இடத்திலும் அவர்களை காண முடிந்தது. முகத்தில் ஒரு களைப்போ, வியர்வையோ இல்லை. அவ்வளவு பிரெஷ். வழியில் வண்டியில் ஏறி வந்ததை நான் காணவில்லை.
* பரிசு பெற்ற அனைத்து வீரர்களுக்கும், கலந்து கொண்ட அனைவர்களுக்கும் எங்கள் தம்மாம் காயல் நற்ப்பணி மன்றத்தின் சார்பாக நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross