செய்தி: கத்தர், தம்மாம், ரியாத், ஹாங்காங் கா.ந.மன்றங்கள் இணைந்து நடத்திய சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம்! 715 பேர் பயனடைந்தனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அது அப்படி தான்... posted byசாளை S,I,ஜியாவுத்தீன் (காயல்பட்டினம்)[04 July 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 19819
இந்த சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம் மிகச்சிறப்பாக நடந்து முடிந்ததற்கு வல்ல ரஹ்மானுக்கும், உறுதுணை புரிந்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும், எங்கள் "தம்மாம் காயல் நற்பணி" மன்றத்தின் சார்பாக நன்றிகளை கூற கடமைப்பட்டுள்ளோம்.
இந்த முகாமில் அனைத்து பயனாளிகளும் பிரயோசனப்பட்டு மனதார வாழ்த்தி துஆ செய்ததை காணக்கிடைத்தது. அல்ஹம்து லில்லாஹ்.
* ஒரு சகோதரர் முதல் முதலாக இந்த முகாமில் சர்க்கரை பரிசோதனை செய்ய வந்து, சோதித்ததில் சர்க்கரை அளவு 400 க்கும் அதிகம் வந்ததும், அவருக்கு சரியாக கவுன்சிலிங் கொடுத்து, பிரச்சனைகளை எடுத்து சொன்னதும், உடனே குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் முகாமிற்கு அழைத்து வந்து பரிசோதனை செய்து சென்றார்.
* YUF இல் பரிசோதனை செய்த மருத்துவர் நூர்தீன் காக்கா அவர்கள், ஒவ்வொரு பயனாளியையும் பரிசோதித்து விட்டு, அவர்களுக்கு தகுந்த விளக்கம், மருத்துவ ஆலோசனைகளை சடவு இல்லாமல் சொன்னதை கண்டு மிக்க மகிழ்வு. தேங்க்ஸ் டாக்டர்.
* ஒரு 5 வயது குழந்தைக்கு கணையம் வேலை செய்யாமல், நிரந்தரமாக இன்சுலின் போட்டுக்கொண்டே இருக்கனும் என்ற நிலைமையை அறிந்து மிகவும் கவலை கொண்டோம். அந்த நேரத்தில் முகாமே சிறிது ஸ்தம்பித்தது, இந்த குழந்தையை பார்த்து.
எல்லாம் வல்ல ரஹ்மான் அனைவர்களுக்கும் நோய் இல்லா நல்வாழ்வை தருவானாக.
** ஆக மொத்தத்தில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் நம் ஊரில் மிகவும் அதிகம் என்பதும், பாஸ்டிங்கிள் உள்ளவர்களுக்கு 250, 300 சுகர் அளவு இருந்தாலும், அதை ஒரு பொருட்டாகவே நினைக்காமல், "அது அப்படி தான்" என்று சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்வதையும், முகாமில் வைத்து இருந்த சர்க்கரை போட்ட டீ யை குடித்த காட்சியையும் காணக்கிடைத்தது. (சர்க்கரை போடாத டீ யும் வைக்கப்பட்டு இருந்தது.)
ஆனால் ஒரு சில பெண்களிடம்,சுகர் அளவு கொஞ்சம் கூடினாலும் ஒரு பய உணர்வு உள்ளதையும் கண்டோம்.
* முகாம் முடிந்தும் பெரிய சதுக்கை முகாமில் மக்கள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்தார்கள் என்பதும் காண முடிந்தது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross