செய்தி: நகராட்சியின் குடிநீர் வினியோகக் குறைபாடு, நிர்வாக சீர்கேடு, ஊழலை ஊக்குவிக்கும் வகையில் உறுப்பினர்கள் பேச்சு! சீர் செய்து நடவடிக்கை மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியருக்கு ம.சே.கரங்கள் கோரிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகராட்சியின் குடிநீர் வின... posted bysulaiman (abudhabi)[05 July 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19846
02.07.2012 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில், அவ்வமைப்பின் நிறுவனர் பா.மு.ஜலாலி இதுகுறித்து அளித்துள்ள கோரிக்கை மனுவின் வாசகங்கள் பின்வருமாறு:-
காயல்பட்டினம் இரண்டாம் நிலை நகராட்சியில் மக்கள் குறை தீர்க்கவும், விண்ணப்பங்கள் வேண்டியும் மனு அளித்து வருகின்றனர். அவற்றுக்கு 3, 4 மாதங்களாகியும் குறைகள் நிறைவு செய்யப்படாமல் உள்ளன. அரசுப் பணிகளும் மிகவும் கால தாமதமாக நடந்து வருகின்றன. பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் காலப்போக்கில் மறைந்து misplace ஆகிவிட்டது எனக்கூறி, மீண்டும் மனு அளிக்கும்படி வேண்டப்படுகிறது.
நிர்வாக சீர்கேட்டினை நிவர்த்தி செய்வதற்கும், குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கவும், நிர்வாகத்தினை சீராக்க - திருச்செந்தூர் கோட்ட வட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) மூலம் விசாரணை மேற்கொண்டு, நிர்வாகத்தை சமச்சீர் செய்து ஆள்வதற்கு தங்களிடம் பணிவுடன் வேண்டுகின்றோம்.
அஸ்ஸலாமு அழைக்கும் ,சகோதரர் ஜமாலி அவர்களின் புகார் மனுவின் ஒரு பகுதி நான் மேலே எடுத்துக்காட்டி உள்ளேன்.இதன் கடைசி பகுதில் 2 உறுப்பினர்கள் பேசிகொண்ட ஆடியோ பற்றிய புகாரும் இருக்கிறது.
இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கபடுமேயானால். (வாங்கிய மனுக்கள் மீது 4 மாதம் ஆகியும் எந்த நடவடிகையும் எடுக்கப்படவில்லை , மற்றும் நிர்வாக சீர்கேட்டை நிவர்த்தி செய்வதுக்கும் ). இந்த புகாருக்கு சகோதரி ஆபிதா மீதுதான் நடவடிக்கை எடுக்கபடும்.
இந்த புகாரை பொறுமையாக படித்து இதன் தாற்பரியத்தை சரியாக புரிந்து கொள்ள முடியாமல். தங்களது அறியாமையை கருத்துகளாக எழுதுகிறார்கள் ,வெளிச்சம்போட்டு காட்டுகிறார்கள், நமது நகராச்சி மன்ற தலைவி அவர்களின் புகழ் பாடிகளில் சிலர் . இவர்களின் நிலைமையை நினைக்கும் போது பாவமாகவும் ,வேதனையாகவும் இருக்கிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross