செய்தி: காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு ஏப்ரல் 2012 - மே 2012 மாதங்களுக்கான மானியமாக - 40 லட்சத்து, 45 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல்பட்டினம் நகராட்சிக்க... posted bySalai.Mohamed Mohideen (USA)[09 July 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 19911
நமது அரசாங்கம் எவ்வளவோ நல்ல பல திட்டங்கள் நிதி ஒதுக்கீடுகள் செய்தாலும் அதனை முறையாக மக்கள் தேவைகளுக்கு பயன்படுத்தாததும் & முழுமையாக அவர்களை சென்றடையாததும் தான்... நமது தேசம் பின்தங்கியுள்ளதட்க்கு மிக முக்கிய காரணம்.
எல்லா வளமிருந்தும் நமக்கு நாமேதான் தடையாக உள்ளோம். மிக முக்கிய தடை... ஊழல் புரிபவர்கள். அந்த ஆடியோ க்ளிப்பில் உரையாடியது போல, ஐம்பது சதவிகிதத்தை பயன்படுத்தி விட்டு மீதி ஐம்பது சதவிகிதத்தை தனது பாக்கட்டுக்குள் சொருகி விடும் 'கயவர்கள்' நாட்டில் அதிகரித்து விட்டனர்.
நாட்டை நம்மால் திருத்த / மாற்ற முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் நமது ஊரையாவது இந்த ஊழலிருந்து பாதுகாப்போம். இது போன்ற நல்ல பல திட்டங்கள் /நிதி ஒதுக்கீடுகள், நமதூர் ஏழை எளிய (தேவையுள்ள) மக்களை 'முழுமையாக' போய் சென்றடைய வேண்டும். அதற்க்கு ஒருமித்த குரலில் ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதோடு மட்டுமன்றி... இவைகளுக்கு யாரெல்லாம் தடைகளாக இருக்கின்றார்களோ அவர்கள் அடையாளம் காணப்பட்டு நேர்வழி பெற உதவ (களையப் பட) வேண்டும்.
இது போன்ற தகவல்கள் இணைய தளத்தை பார்ப்பவர்களுக்கு மட்டுமன்றி ஊரில் உள்ள அனைத்து மக்களுக்கும் அறிய தர / போய் சேர வேண்டும். பாமரர் முதல் அனைவரும் விழிப்புணர்வு பெற வேண்டும். அதற்க்கு உள்ளூர் மாத இதழ்கள் அல்லது உள்ளூர் டிவி சானல்ஸ் மிக முக்கியமான ஊர் நடப்புகளை இது போன்ற விழிப்புணர்வுகளை சிறு செய்திகளாக தினமும்/ வாரத்துக்கு ஒருமுறை ஒளிபரப்பலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross