செய்தி: மஹ்ழரா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா! 16 பேர் “ஆலிம் மஹ்ழரீ” பட்டமும், பார்வையற்ற ஒரு மாணவர் “ஹாஃபிழுல் குர்ஆன்” பட்டமும் பெற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மஹ்ழரா அரபிக்கல்லூரி பட்ட... posted bySalai.Mohamed Mohideen (USA)[09 July 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 19912
ஆலிம் மற்றும் ஹாஃபிழுல் குர்ஆன் பட்டம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
சனது பெற்றவர்களில் பெரும்பாலானோர் கேரளத்தை சார்ந்தவர்கள். அவர்கள் நமதூருக்கு வந்து இந்த பட்டத்தை பெற்று செல்வதில் நமக்கு பெருமை / சந்தோசம். அதேநேரத்தில் நாற்பதினாயிரம் (?) முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நமதூரில்...நமதூரை சார்ந்த ஒருவர் கூட இங்கே இல்லாதது, மார்க்க கல்வியில் நாம் ஏற்படுத்தி உள்ள வெற்றிடத்தை அல்லது மார்க்க மற்றும் உலக கல்விக்கிடையில் ஏற்பட்டுள்ள இடைவெளியை & மார்க்க கல்வியின் மீதான நமது ஈடுபாட்டின்மையை / குறைவை நமக்கு உணர்த்துகின்றது.
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் கூட ஹாஃபிழுல் குர்ஆன், இளம் கத்தீப்கள், இஸ்லாமிய ஆராய்ச்சியாளர் & பேச்சாளர்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றார்கள். ஆனால் உலகக் கல்வியின் விழிப்புணர்வில் நமதூரில் / நாட்டில் மார்க்க கல்வியின் முக்கியத்துவம் மங்கி வருவதும் அதனை நாம் கண்டு கொள்ளாமல் இருப்பதும் மிகவும் வேதனையே.
இதனை ஆரம்பத்திலேயே களைய தவறினால், மார்க்க கல்வியை அதன் முக்கியத்துவத்தை உணர்த்த ஒரு பெரிய மீட்பு போராட்டத்தையே / விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய சூழல் வரும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross