Re:ரயில் டிக்கெட் - தட்கல் ம... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[10 July 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19918
ஒருமுறை உறவினர் ஒருவருக்கு, தக்கால் முறையில் முன்பதிவு செய்ய சுபுஹு தொழுதுவிட்டு அவசர அவசரமாக சென்றேன். புகைவண்டி நிலையம் சென்றதும் அதிர்ச்சி.
பயணிகள் அமருவதற்காக போடப்பட்டுள்ள நாற்காலிகளில் வரிசையாக தண்ணீர் பாட்டில், பெரிய பெரிய கற்கள், டவல்கள், இத்யாதி இத்யாதி என்று நிறைத்து வைத்து இருந்தார்கள். என்ன நாடுடா இது. யாரையும் உட்கார விடாமல் இப்படி தொல்லை செய்கிறார்களே என்று விசாரித்தால், இது தான் ரிசார்வேசனாம். முந்தைய இரவு 7 மணிக்கே வந்து கல் போட்டு ரிசார்வேசனை கன்பார்ம் செய்து விட்டார்களாம்.
நான் 19 ஆவது ஆள். காலை 8 மணி வரை தேமே.. என்று நின்றுகொண்டே இருந்தது தான் மிச்சம். இனி 10 மணி வரை நிற்கனுமாக்கும்.
(எனக்கு பின்னாடி 13 நபர்கள் இருந்தார்கள், ஆறாவது நபர் கையை கவுண்டருக்குள் நுழைக்கும் போதே, சென்னைக்கு அனைத்து வண்டியும் புல்லாகி விட்டது).
** நம் ஊருக்குள் தக்கால் முன்பதிவு மையம் ஒன்றை துவங்க முயற்சி செய்யுங்களேன். பல ஊர்களில் இப்படி தனி மையம் உள்ளதே.!! உண்டான கட்டமைப்பே வருவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறதா.!! அப்படின்னா சரிதான்.
இதில் எது சரி, 'தட்கல்' , 'தற்கல்', 'தக்கல்', 'தக்கால்'.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross