காயல்பட்னம்.காம் உடைய செம்யயான சேவை posted byமுஹம்மதுஆதம்சுல்தான். (kayalpatnam)[11 July 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19944
மாஷா அல்லாஹ்!
காயல்பட்னம்.காம் உடைய செம்யயான இந்த சேவையை பாராட்டுவதென்பது ஒவ்வொரு மனசாட்சியுடையோனின் மாண்பாகும். இது கண்மூடித்தனபுகழ்ச்சி என்று புழுங்குவோர் புலம்பிகொண்டுதான் இருப்பார்கள், அவர்களை எல்லாம் புரம் தள்ளிவிட்டு, உங்கள் புண்ணிய பயணத்தை தொடருங்கள்.
உங்கள் பயணத்தின் ஒவ்வொரு சாதனை மைல்கல்லும் சிறப்புற சீறிப்பாய வேண்டும், அதுவே சிலருக்கு சிம்ம சொப்பனமாக சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் மூலையில் முடங்கி கிடக்க வைத்துவிடும்!
காயல்பட்டணம்.காம் மீது எனக்குள்ள ஒரு குறையை குறிப்பிட விரும்புகிறேன். காயல்பட்டண நகராட்சியிலுள்ள பெரும்பாலான (அல்லது அனைத்து) உறுப்பினர்களும், எந்த ஒரு மீடியாவும்,எந்த ஒரு .காம் மும் நகராட்சி கூட்டம் நடைபெறும்பொழுது உள்ளே வரக்கூடாது என்று முடிவேடுதததாக கேள்வி.
இப்படி ஒரு முடிவெடுத்திருந்தால் அது சரியல்லவென்று காயல்பட்டணம்.காம் முதல் பல மீடியாக்கள் சொல்லியதாகவும் கேளிபட்டேன். மீடியாகளே நீங்கள் இப்படி சொல்வதால்தான் உங்கள் மீது குறை காண்கிறேன்.. .
நம் நகராட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் நம்மூருக்காக அல்லும் பகலும் ஓய்வில்லாமல் உழைப்பதோடு மட்டுமில்லாமல், ஊழலற்ற, ஒருபைசா கூட கையூடில்லாத, ஓட்டளித்த மக்க்களின் உண்மை ஊழியனாக, வாங்கும் ஊழியத்திற்கு உளபூர்வ விசுவாசியாக, கண்ணியமாக கடமையாற்ற துடித்து கொண்டிருக்கும் அத்தூயவர்கள் தீவரமாக பங்கு பெரும் கூட்டத்தில், அவர்களுக்கு தொல்லை கொடுக்கும் முகமாக, அவர்கள் எதிரில் நின்று கொண்டு குறிப்பெடுக்கிறேன் என்று அவர்கள் கவனத்தை திசை திருப்புவதோடு, அவர்களை புகைப்படம், பேட்டி என்று எள்ளளவும் அவர்களின் அலுவல்களை பார்க்க விடாமல், அவர்களின் முழு பணிகளையும் மழுங்கச்செய்யும் மோசமான காரியங்களைச் செய்யும், அத்தனை மீடியாக்களும் அந்த பக்கமே வராமல் அலறி அடித்துக்கொண்டு ஓட வைக்க வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளார்கள்!
இந்த உறுதியை ஒவ்வொரு கண்ணியமிகு காயல் குடிமகனும் ஏகமனதாக ஏற்றுகொள்ளவேண்டும் என்றும் எதிர்பார்கிறார்கள்.
அக்கறையுள்ள அந்த உறுப்பினர்களின் ஏக்கத்தை ஏற்பதும், எதிர்ப்பதும் இணையதள மீடியாக்களின் மனசாட்சியின் முடிவிற்கே விட்டுவிடுவோமாக! அல்லாஹ் அனைத்தும் அறிந்த்கவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross