Re:ஆணையம் உத்தரவை தொடர்ந்து ... posted bySalai Sheikh Saleem (Dubai)[11 July 2012] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19951
DCW தொழிற்சாலையில் இருந்து வெளியாகி நமதூர் கடலில் கலக்கும் கழிவு நீரில் மெர்க்குரி சல்பர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவினைக்காட்டிலும் அதிகமாகவே இருப்பதாக CFFC ஆய்வு அறிக்கையில் தெளிவாகக் கோடிட்டு காட்டியிருக்கிறது. இந்த ஆய்வறிக்கை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற லேப் பில் இருந்து பெறப்பட்டதாகும்.
இப்போது CFFC எனபது அரசில் பதிவுசெய்யப்படாத ஒரு தன்னார்வ தொண்டு இயக்கம் என்பதனால் ஊரில் பாயிசீன் சங்கத்தில் நடைபெற்ற கோட்டத்தில் KEPA உருவாகியது. இனி KEPA தான் என்ன செய்ய போகிறது என்று நமக்கு அறியத்தர வேண்டும்.
ஆனால், நமதூரில் இன்று வரை இந்த கொடிய ஆட்கொல்லி நோய்க்கு நாம் நமது மக்களை காவு கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்பதை யாரும் மறக்க வேண்டாம். கேன்சர் வியாதி நமது சமுதாயத்தில் பரவிக்கிடக்கின்றது. இதற்க்கெல்லாமா நாங்கள் விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும்?
இப்படி யார் பூனைக்கு மணி கட்டுவது என்று யோசித்துகொண்டிருப்பதை விட - கேன்சர் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது அவர்களின் உறவினர்களோ DCW முன்னால் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி மீடியாக்களை அழைத்து அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.
நான் இதை சொல்லக் காரணம் நமதூரில் பொது நலம் என்று பொதுவில் யாருக்கும் இல்லை. எனவே பட்டவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும், எனவே நீங்களாவது நமது ஊர் நலம் கருதி, நமது எதிர்கால சந்ததிகளின் வாழ்வாதாரங்களை கருத்தில் கொண்டு இப்படி ஒரு முன்னுதாரானத்தை ஏற்படுத்துங்கள். உங்களின் கோரிக்கைகளை யாரும் மறுக்க முடியாது? எந்த அமைப்பின் உதவியும் நீங்கள் கோர வேண்டியதில்லை.
ஆமாம் அது என்னதோ ஒரு " பாடி'' இயக்கும் என்று ஒன்னு கவிமகனார் ஆரம்பித்து இருக்காராமே? அதில் எனக்கும் ஒரு சீட் வேண்டுமே ? இதிலாவது லஞ்சம் இருக்காதே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross