செய்தி: முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி வெள்ளி விழா மற்றும் பட்டமளிப்பு விழா! மாணவியர் விடுதியை இலங்கை நகீப் மவ்லானா திறந்து வைத்தார்!! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[12 July 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19961
சந்தோசம், மகிழ்ச்சி மற்றும் பூரிப்பு.
பட்டம் பெற்ற அனைவர்களுக்கும் பாராட்டுக்கள். வல்ல ரஹ்மான் உங்களுக்கும், இதற்காக பாடுபட்ட அனைவர்களுக்கும் நல் வாழ்வை தருவானாக.
நம் மஹ்லராவில் பட்டம் பெற்ற ஆலிம்களின் லிஸ்டை பார்த்து, ஒரு காயலர் கூட இதில் இல்லையே என்று கவலைப்பட்ட மக்களுக்கு, இந்த லிஸ்டைப்பார்த்து மிக்க மகிழ்ச்சி. 52 மாணவியர்கள் ஆலிமா பட்டமும், 6 மாணவியர்கள் ஹாஃபிழ் பட்டமும் பெற்றுள்ளார்கள்...சபாஷ்...!!
இருந்தாலும் மனம் வருத்தம் தான், ஆண்களில் நிறைவாக ஆலிம்கள் இல்லையே என்று.
வல்ல இறைவன் இவர்களின் ஞானத்தை அபிவிருத்தி செய்து, இவர்களின் கல்வியை பிரயோசனமான கல்வியாக ஆக்கி, குரான் & ஹதீஸை அதன் தூய வடிவில் மக்களுக்கு போதிக்கும் நல்ல எடுத்துக்காட்டான ஆலிம்களாக ஆக்குவாயாக.
*** இரு சிறுமிகள் கதைத்துக் கொண்டது காதில் விழுந்தது.
***
- ஆலிமா பட்டம் பெருசா அல்லது ஹாபிழா பட்டம் பெருசா..
- ஆலிமா பட்டம் தான் பெருசு.. ஏன் இந்த கேள்வி உனக்கு?
- இல்லை.. ஹாபிழா பட்டம் பெற்றவர்களுக்கு பல பல பரிசுகள், பல ஆயிரக்கணக்கில் பண முடிப்புகள் என்று என் மச்சிக்கு கொடுத்தார்களே, ஆலிமா பட்டம் பெற்ற என் மாமிக்கு வெறும் சிறிய ஹாட் பாக்ஸ் மட்டும்தான் கொடுத்தாங்க... அதான் சிறிய டௌட்டு..!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross