Re:காயல்பட்டினம் கடற்கரையில்... posted byMauroof (Dubai)[12 July 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19980
சகோ. முத்து இஸ்மாயிலின் வேண்டுகோள் நன்று. கொடிய விஷங்களை கக்கி கோடிகளில் புரளும் இந்த நாசகார ஆலையின் பண முதலைகள் (இவர்களின் சொந்த மாநிலத்தில் இயற்கை பாதுகாப்பு காரணங்களுக்காக ஆலை தொடங்க அனுமதி மறுக்கப்பட்டவர்கள்) மற்றும் பிழைப்பிற்காக ஒன்றை (சுகாதாரத்தை) இழந்து பிறருக்கும் இழக்கச் செய்யும் ஊழியர்கள் மற்றும் இவ்வாலையின் உயர்தர பிச்சைக்காரர்களின் காதுகளையும், எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் உடல் நலன் மற்றும் இயற்கை வளம் பாதுகாக்கப்படவேண்டும் என்ற உயரிய நோக்கம் சிறிதும் அற்ற அரசு (இன்றைய, நேற்றைய அரசுகள் மட்டுமல்ல) நிர்வாகத்தையும் சென்றடையும் என்பது கேள்விக்குறியே. இருப்பினும் அடியுங்கள் (சொல்லுங்கள்) அடிக்க அடிக்க அம்மியும் நகரும், இல்லையேல் நாம் நகற்றப்படுவோம்/அகற்றப்படுவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross