செய்தி: ஜாவியா அரபிக்கல்லூரியில் 8 ஆண்டு தீனிய்யாத் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்! போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சோலைப் புஷ்பங்களே...! சுவனத்தின் சுவடுகளே...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[15 July 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20000
ஜாவியா- எனது துவக்கப்பள்ளி! அருள்மறை குர்ஆனின் அலிஃப், பே யைக் கற்றுத்தந்த ஆரம்ப பாட சாலை! கன்னியத்திற்குரிய, கண்டிப்பு மிக்க ஆசான் மர்ஹூம் ஜெய்லானி லெப்பை அவர்களிடம் பயின்றோம். அவர்களது பயிற்சி முறை, பழக்க வழக்கங்கள், மார்க்கப்பற்று, பேணுதல், மரியாதை ஆகியவற்றைக் கூற வேண்டுமெனில் கட்டுரையாக ஐம்பது தொடர் எழுதினாலும் தீராது!
பொதுவாக ஜாவியா என்றாலே (அதபு) ஒழுக்கம் என்றே சொல்லலாம். அங்குள்ள பெரியவர்களின் கனக்கச்சிதமான கட்டுப்பாடுகள் கல்வி பயிலும் மாணவர்களுக்குள்ள மதிப்பு மரியாதையே தனிதான்.
அந்த காலத்தில் பணியாற்றிய பலருள் என் நினைவில் நீங்கா இடம் பெற்றவர்களில் மதிப்புக்குரிய மஹான்- சாவண்ணா ஆலிம், முத்து வாப்பா ஆலிம், ஃபாரூக் ஆலிம், ஹைத்ரூஸ் ஆலிம், முஹம்மது அப்துல் காதர் ஆலிம், மற்றும் ஜாவியாவின் உருதி மிக்கத் தூண்களான ஃபாஸி ஹாஜியார், ஷாதுளி ஆலிம், நூஹ் ஆலிம், காவல்துறை சேகு காக்கா, அரப்ஃபாத் ஸ்டோர் செய்யது அப்துர் ரஹ்மான் ஹாஜி, அஜீஸ் காக்கா, கல்ஜி ஆலிம், என் நண்பன் கலீலுர் ரஹ்மானின் தந்தை மற்றும் முஹம்மது அப்துல் காதர், தாவூது, ஏ.கே மஹ்மூது சுலைமான், எம்.ஐ.மஹ்மூது சுலைமான், மீரா சாகிப், அபூபக்கர் ஆகியோரது குடும்பத்தினர் (இன்னும் பலரது பெயர் நினைவில் இல்லை) அனைவர்களும் ஜாவியாதான் தன் வீடு, குடும்பம், சொந்தம் என்று அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுக் கட்டிக் காத்து வந்ததை நான் இன்றும் நினைவு கூருகின்றேன்.
இப்பாடசாலையில் பயின்று பட்டமும், பரிசுகளும் பெற்ற அத்தனை பிள்ளைகளையும் பார்க்கும் போது அவர்கள் அமர்ந்திருக்கும் விதமும், மலர்ந்த முகமும், பூத்துக் குலுங்கும் ஒரு பூஞ்சோலையைப் போல காட்சியளிக்கிறனர். வல்ல அல்லாஹ் அவர்களின் ஞானத்தையும், கல்வியையும் உயர்த்தி சத்திய சன்மார்க்கத்தின் முத்தான பாதையில் நம்மையும், நம் சமுதாயத்தையும் வழிநடத்திச் செல்ல தவ்ஃபீக் செய்தருள்வானாக... ஆமீன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross