Re:சுற்றுச்சூழல் பாதுகாப்பில... posted byVilack SMA (saigon , vietnam .)[16 July 2012] IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 20007
இதில் தவறு பொதுமக்களிடம்தான் உள்ளது . ஒவ்வொரு ஏரியாவிற்கும் குப்பை அள்ளும் வாகனம் வரும் நேரம் நகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளது . அந்த நேரத்தில் , நகராட்சி பணியாளரிடம் குப்பை வாளியை கொடுக்காமல் ( வேலைக்காரி அந்த நேரத்தில் இருக்க மாட்டாளாம் , இவர்களாக குப்பை வாளியை தூக்குவது இவர்கள் அந்தஸ்து குறைந்து விடுமாம் ) வண்டி போனபிறகு , வேலைக்காரி வந்ததும் , கண்டகண்ட இடங்களில் , அடுத்தவர் வீட்டு படிக்கட்டுகளில் விசிறி அடித்து செல்வது . இதுதான் காலம் காலமாக நடப்பது . இதில் நகரமன்ற தலைவி , உறுப்பினர்கள் , பணியாளர்கள் இவர்களை குறை சொல்வதில் அர்த்தமே இல்லை .
எனது வீட்டு எதிர்புறம் ஒருவர் புதிதாக வீடு கட்டி குடியேறினார் . மக்கள் வழமைபோல் அவர் வீட்டுமுன் குப்பையை கொட்டினார் . நல்லவிதமாக சொல்லி பார்த்தார் . ஜனங்கள் திருந்துவதாக தெரியவில்லை . ஒருநாள் தெருவில் நின்று குப்பை கொட்டும் நபர்களை மிகவும் அசிங்கமாக திட்டி விட்டார் . அதில் இருந்து அவர் வீட்டுமுன் குப்பையை காணோம் . ஒருவேளை தெருவில் வீடு வைத்திருக்கும் அனைவரும் இந்த வழியை கையாண்டால்தான் தெரு சுத்தமாகும்போல தெரியுது .
ஒருமுறை தலைவி தங்கை ஆபிதாவுடன் போனில் பேசும்போது இந்த பிரச்சினை பற்றி பேசினோம் . குப்பையை எரிப்பதை அவரும் விரும்பவில்லை. இப்படி ஜனங்கள் தெருவில் அடுத்தவர் வீட்டுமுன் குப்பையை வீசுகிறார்களே என்று வருத்தப்பட்டார். மாற்று வழியாக, மூடியுடன் உள்ள குப்பை தொட்டி வாங்கும் எண்ணம் உள்ளது என்றும் தெரிவித்தார். இது நல்ல திட்டம்தான், ஆனால் ஜனங்கள் இதற்கு எந்த அளவுக்கு ஒத்துழைப்பார்கள்?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross