மீடியாவுக்கு எதிராக நமது நகராட்சியில் நடப்பதை உணரமுடிகிறது...! posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227)[19 July 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20047
காயல்பட்டினம் நகராட்சியில் நடத்தப்படும் அனைத்து வகைக் கூட்டங்களிலும் ஊடகத்தினரை அனுமதிக்கக் கோரி, காயல்பட்டினம் மக்கள் சேவாக் கரங்கள் சார்பில், அதன் நிறுவனர் பா.மு.ஜலாலீ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார்.
ஊடகத்தினரை நகரமன்ற கூட்டங்களில் அனுமதி அளித்து தானே வருகிறார்கள்...! நீங்களும் கூட்ட நடப்பு செய்திகளை உலக காயல் நல மக்களுக்கு தந்து கொண்டுதானே இருக்கிறீர்கள்... அப்பறம் என்ன..? புதுசா ஊடகத்தினரை அனுமதிக்கக் கோரி ஆட்சியருக்கு மனு..?
ஒன்னும் புரியலே... உங்களை நகராட்சி கூட்டத்திற்கு செய்தி சேகரிக்க வர கூடாது...! என்று தடை உத்தரவு போட்டார்களா..? நகராட்சி நடப்புகள், செயல்பாடுகள் அதன் தீர்மானங்கள் மீடியா (இணைய தளம்) செய்தி மூலம் உலகங்கும் பரவி ஊர் நலனுக்குக்காக பாடுபட்டு வரும் காயல் மக்கள் பார்வைக்கு, கவனத்துக்கு போக கூடதென்று உங்களை செய்தி சேகரிக்க தடுத்தார்களா...?
இந்த செய்தியை படிக்கும் போது எதோ ஒரு விவகாரம் நிழல் மறைவில் மீடியாவுக்கு எதிராக நமது நகராட்சியில் நடப்பதை உணரமுடிகிறது...! அதன் வெளிபாடுதான் காயல்பட்டினம் மக்கள் சேவாக் கரங்கள் சார்பில், அதன் நிறுவனர் பா.மு.ஜலாலீ அவர்கள் மீடியவுக்காக உலக காயல் நல மக்களுக்காக குரல் கொடுக்கிறார் போல தெரிகிறது....
நகராட்சிக்குள் (உலக காயல் மக்களுக்கு செய்தி தரும் மீடியா) மீடியாவை தடை செய்ய நகராட்சி அதிகாரிகள்.. நகராட்சி தலைவர்.. மற்றும் உறுப்பினர்கள் தடை செய்வார்களேயானால்...! அதன் விளைவு மிக மோசமாகவே இருக்கும்...
நகராட்சி முன் மிக பெரிய ஆர்பாட்டமே... நடக்கும் அதில் சந்தேகமில்லை...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross