கண்குளிரக் கண்டேன்...காயல் நண்பர்களை...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[20 July 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20067
அட! நீங்க வேறெ! ஏன்ய்யா இப்படி எங்க வயித்தெரிச்சலை கிளப்புறீங்க...தோப்புக்கு போனமா? வந்தமான்னு இருக்காம அதை படம்பிடிச்சு வேறெ காட்டுறீங்களோ...? சரிப்பா நல்லா இருங்க...! நாங்க ஊர்லெ இருக்கும் போது மட்டும் மொகுதூம் பள்ளித் தோடத்துக்கும்,சேதுக்கு வாய்த்தான் வாய்க்காலுக்கும் தான் அழைப்பீங்க.. இது மாதிரி அரசல் புரசல் அசத்தலுக்கு நாங்க எப்படா புறபடுவோம்ன்னு எதிர்பார்த்துட்டிருப்பீங்க போலெ!
அன்றாடம் குடும்ப சிந்தனையிலேயே உழன்று வரும் நமதூர் பெண்டிர்க்கும், பாலைவன நாட்டிலிருந்து சோலை வனத்திற்கு விடுமுறையில் வரும் ஆடவர்களுக்கும் இந்த இன்ப சிற்றுலா மனதிற்கு இதம் அளித்து வருகின்றது. வருமானம் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் இது போன்ற தோப்புக்களின் உரிமையாளர்கள் ஊரார் அனுபவித்து மகிழ உதவி செய்து வருவதை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
அது சரி...! இத்தனை தோட்டங்கள் உள்ளனவா? குறித்து வைத்துக் கொண்டேன். அடுத்த முறை ஊர் வரும் போது பயன் படுமல்லவா? தோட்ட உரிமையாளர்களின் கைபேசி நம்பர்களையும் வெளியிட்டிருக்கலாமே....? சும்மா ஒரு நப்பாசைதான்...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross