Re:இப்போதைக்கு இதுதான் குற்ற... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[20 July 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20073
அஸ்ஸலாமு அலைக்கும்.
""""' இப்போதைக்கு இதுதான் குற்றாலம் """ ரொம்ப அருமையான தலைப்பு . அருமை தம்பி S.K.சாலிஹு அவர்களின் தமாசான தலைப்பு தான் ... எப்போதுமே சிரிப்புடன் நம் மனதுக்கு மகிழ்சியுடன் குற்றால சாரல் போல் இருக்கும்.
வெளி நாட்டில் வாழ் எங்களை போல் மக்களுக்கு எல்லாம் இந்த போட்டோவில் நம் ஊர் சகோதரர்களை பார்க்கும் போது மனதுக்கு ரொம்பவும் மகிழ்சியாக இருக்கிறது. நம் ஊர் களறி கரி சாப்பாடு நாங்களும் இப்பவே சாப்பிடனும் போல் ஆசையாக இருக்கிறது. என்ன செய்ய எங்களின் சூழ் நிலைமை ஒத்து வரவில்லையே .... தமாஸ்....
தம்பி S.K.S. நீங்கள் கூறியது போன்று நம் ஊர் மக்களுக்கு இந்த தோப்பு டூர் மிகவும் சிறந்தது தான் சந்தேகமே இல்லை.
ஆனால் ..... வெளி ஊரில் இருந்தும் & வெளி நாட்டில் இருந்தும் நம் ஊருக்கு கொஞ்ச கால லீவில் ஊருக்கு வர கூடியவர்கள் நடுத்தர ( மிடில்கிளாஸ் ) வர்க்கத்தை சேர்ந்தவர்களோ .... அல்லது .... வசதி ரொம்ப குறைந்தவர்களோ இருந்து .ஒரு நாள் பேச்சுக்கு நாமும் குடும்பதுடன் காற்றாட தோப்புக்கு போய் குளித்து வரலாம் என்று எண்ணி ...... தாங்கள் எழுதியது போன்று இந்த தோப்பு வைத்து இருப்பவர்கள் நிறைய பேர்களிடம் பெர்மிசன் கேட்டால். தரவா செய்கிறார்கள்??? ஏதோ ஒரு நொண்டி சாக்கு சொல்லி தட்டி கழித்து விடுவார்கள். இவர்களுக்கு சமமாக பணம் படைத்தவர்களாக இருந்தால் அனுமதி எந்த நேரமும் உண்டு....
இதற்கு காரணம் பணம் என்கிற வெறி பிடித்த பேய் தான் இவர்களின் மனதை போட்டு ஆட்டி படைக்கிறது.....நான் யாரையுமே குறை கூறியோ + மனதை புண் படுதியோ எழுத வில்லை.பொதுவான நம் ஊர் நடப்பைத்தான் எழுதி உள்ளேன். நல்லவர்களும் நம் ஊரில் இருக்கதான் செய்கிறார்கள்.இல்லை என்று சொல்வதற்கு இல்லை.
ஆதலால் இந்த அடியேனின் ஒரு சின்ன யோசனை....நம் ஊர் காயல் நற்பணி மன்றங்கள் " மாஷா அல்லாஹ் " உலக அளவில் மிகவும் சிறப்பாக செயல் பட்டு வருகிறது. இவர்கள் எல்லாம் ஓன்று சேர்ந்து நம் ஊர் பக்கதில் நல்ல அழகான தோப்பு ஒன்றோ / இறன்றோ கூட்டாக வாங்கி .... இந்த நம் ஊர் நடுத்தர மக்களுக்கும் சரி ஏழை மக்களுக்கும் சரி ரொம்ப உதவியாக இருக்கும் விதமாக காயலிலும் ஒரு குற்றாலம் என்று நினைத்து இந்த நம் மக்கள் மனதார போய் ஒரு நாள் மன மகிழ்சியோடு சென்று குடும்பத்தோடு குளித்து வருவார்கள் அல்லவா ..... நம் எல்லா காயல் நற்பணி மன்றகளும் தயவு செய்து கொஞ்சம் யோசிக்கவும்......
குற்றாலத்தில் ஸ்டார் ஹவுஸ் இருக்கிறது இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் ( மர்ஹும் ஹாஜி .அப்துர் ரஷித் அவர்களை நாம் இன்றும் நினைவு கூற வேண்டும் ) இடம் போய் நம் ஊர் பொது மக்கள் யாராகவும் இருந்தாலும் ... நேற்றும் சரி ... இன்றும் சரி போய் கேட்டால் காலியாக இருந்தால் உடனே அனுமதி சீட்டு தருவார்கள்..... இன்ஷா அல்லாஹ் நாளையும் தருவார்கள்.....
மரியாதை கூறிய சிங்கப்பூர் காயல் நற்பணி மன்ற தலைவர் ஹாஜி .P.H.M.ஹசன் அவர்கள் மனது வைத்தால் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக இந்த எங்களின் கோரிக்கையையும் நிச்சயமாக இந்த நடுத்தர நம் மக்களின்
வேதனைகளை நீக்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தாங்கள் மற்ற நம் ஊர் காயல் நற்பணி மன்றகளிடமும் பேசி நல்லதோர் முடிவு செய்வீர்கள் என்றும் நம்புகிறோம்.
ஜனாப் ஹாஜி P.H.M.ஹசன் அவர்கள். எனக்கு தெரிந்து நான் 1980 முதல் இவரை தூரத்தில் இருந்து இன்று வரை இவரின் நல்ல பொது சேவைகளை பார்த்து வருபவனில் நானும் ஒருவன்.
தம்பி S.K.ஷாலிஹு தாங்கள் இதில் எதையுமே கட் பண்ணாமல் அப்படியே பதிவு செய்யவும்.PLZ ....
வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross