செய்தி: ரமழான் 1433: இன்று தலைப்பிறை காணப்பட்டதால், நாளை ரமழான் துவக்கம்! மஹ்ழராவில் நடைபெற்ற நகர உலமாக்கள் கூட்டத்தில் அறிவிப்பு!! விரிவான தகவல்கள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ரமழான் 1433: இன்று தலைப்ப... posted byP.S. ABDUL KADER (jeddah)[20 July 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20078
வசந்த காலத்தின் வயிட்டுபடிதான் நோம்பு.
உடலுக்கு ஏற்படும் நன்மைகள்
நுரையீரல் அதிகபடியாக இயங்கும் நேரம் காலை 3-5. ஸஹர் நேரத்தில் நாம் நோன்பு வைப்பதற்காக அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த பத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது.இதன் மூலம் மற்ற உறுபுக்கள் புத்துணர்வு பெறுகின்றன.
காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டு பழகி போன நமது வயிரு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன.
பகல் நேரத்தில் டீ, காபி, சிகரெட், வெற்றிலை, பொடி போன்ற அனைத்து வகையான கெட்டபழக்கங்களிலிருந்தும் நீங்கி விடுவதால், நோன்பு அவரது உடல்நிலை நலிவடைவதிலிருந்து காப்பாற்றி, அவரது உடல் சீராக இயங்க உதவுகின்றது.
இந்த நேரத்தில் தான் உடலில் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகன்றன.
ஆரோகிய வழியில் நோன்பு வைக்க
ஸஹர் நேரத்தில் தூக்க கலக்கத்தில் கடமைக்காக உட்கார்ந்து சாப்பிடாமல், சுய உணர்வுடன் தனக்கு விருப்பமானதை நன்றாக மென்று சாப்பிடுங்கள். நோறுங்கத் தின்றால் நூறு வாழ்வு’ என்ற பழமொழிக்கேற்ப நன்றாக மென்று சப்பிடப் பழகிக்கொண்டாலே, அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை குறைந்து விடும். நன்றாகச் சாப்பிட்ட திருப்தி உண்டாகும்.
குளிர்ச்சியான தண்ணீர், ஐஸ்கரீம், ஜுஸ் இவைகலை உடல் ஜீரணிப்பதில்லை. உணவு சாப்பிட்ட உடன் ஜீரணித்திற்காக இதமான வெந்நீரை கொஞ்சம் குடிக்கலாம்.
நோன்பு வைப்பவர்கள் அதிகமாக பொருமையிழந்து தவரு செய்யும் நேரம் ஒன்று இருக்கின்றதென்றால் அது நோன்பு திறக்கும் நேரம் தான். நோன்பு திறக்கும் போது பொறுமையிழந்து கட்டுப்பாடு இல்லாமல் கண்ட உணவுகலையும் உண்பது நோன்பின் நோக்கத்தையே வீணாக்கி விடும்.
நோன்பு திறக்கும் நேரத்தில் பல அமிலங்கள் வயிற்றில் சுரந்திருக்கும். குடலிலும் வயிறிலும் இன்னும் தேவையற்ற கழிவுகளும் தங்கியிருக்கும். இவைகளை நீக்கும் சக்தி சுத்தப்படுத்தும் சக்தி தேனுக்கு உண்டு. பேரீத்தம்பழத்தை தேனில் நனைத்து மென்று சாப்பிட்டு நோன்பு திறக்கும் போது, உடலில் ஊறிக் கிடக்கும் தேங்கிய கழிவுகள் நீக்கப்படுகின்றன.
எலுமிச்சை, ஆரஞ்சு, அன்னாசி பழச்சாறுடனும் தேன் கலந்து குடிக்கலாம். ஆனால் எந்த ஜுஸ் சாப்பிட்டாலும் சீனியும், ஐஸ்சும் சேர்க்க்கூடாது. இளநீரும் நோன்பு திறக்க நல்ல பானமாகும். இளநீர் வயிற்றின் நச்சுக்களை சிறுநீராக மாற்றி வெளியேற்றி விடும்.
ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், சோடா, கோலா போன்ற வாயு நிறைந்த பானங்கள், காப்பி, டீ, புகைபிடித்தல், எண்ணெய்யில் முழ்கி எடுத்த சம்சா, பஜ்ஜி போன்றவற்றின் மூலம் நோன்பு திறக்க கூடாது.
இவ்வாறு முறையாக நோன்பு திறந்து 1 மணி நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது உடல்நலத்துக்கு மிகவும் சிறந்த்து. அவ்வாறு உண்ணாமல் இருக்கும் போது, வயிறு தன் அமிலத்தை முழுவதும் வெளியேற்றி விடும். பிறகு நாம் உணவை நன்றாக மென்று உண்பதால் நன்கு ஜீரணம் ஏற்படும். வயிற்றில் கோளாறு எதுவும் ஏற்படாது. ஏற்கனவே கோளாறு இருக்குமானால் அதுவும் குணமடையும். வயிறு முட்ட உண்பதையும், கார உணவை உண்பதையும் தவிர்ப்பது நல்லது.
மேற்கண்ட முறையில் நோன்பு வைக்கப் பழகிக் கொண்டால் உடலில் தளர்ச்சி, சோர்வு, மயக்கம் போன்றவை இருக்காது. உடல் ஆரோக்கியமாக இருக்கும். தோவையில்லாத கொழுப்புகள் குறைய ஆரம்பிக்கும். உடல் எடை குறையும், உடம்பு தோற்றம் அழகாகும். முக்கியமாக இரவுத் தொழுகையில் மிகவும் விருப்பத்துடன் சோர்வில்லாமல் தொழ முடியும். உடலில் புது தெமபு பிறக்கும். மனதில் புது உற்சாகம் உண்டாகும்.
எல்லாம் வல்ல இறைவன் இந்த சங்கை மிகுந்த நோன்பு மாதத்தின் வாயிலாக நமதூரில் பரவி வரும் நோய்களை முற்றிலும் யாருக்கும் வராது காத்து அருள்வானாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross