செய்தி: ரமழான் 1433: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி இஃப்தார் காட்சிகள்! எஞ்சிய 10 தினங்களுக்கு நோன்புக் கஞ்சி செலவுக்கு அனுசரணை எதிர்பார்ப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ரமழான் 1433: கடற்கரை முஹ்... posted byT,M,RAHMATHHULLAH (73)yr (KAYALPATNAM 04639 280852)[24 July 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20152
அஸ்ஸலாமு அலைக்கும்.!
தம்பி மக்கி நூகுத் தம்பி அவர்கள் கூறியது நூற்றுக்கு நூறும் சரியே ! நன்றி!! கமண்ஸ் ஐ.டீ 1433===நியூஸ் ஐ.டீ 8770 ==23-7-2012
மக்கள் தெரியாத்தனமாகவோ அல்லது பெருமைக்காகவோ வெள்ளைக்கஞ்சியை மாற்றி மஞ்ச (இறைச்சி)க்கஞ்சி யாக போட்டு உடல் நலத்தையும் கெடுத்து தவாபிலும் குறை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
நாயகம் (ஸல் )அவர்கள் ஓரிரு வேளை “ஹறீஸா “ எனும் இறச்சி கலந்த கஞ்சியை இஃப்தாறின் போது குடித்தார்கள் என மற்ஹூம் சாவன்னா ஆலிம் அவர்கள் ஒரு ஆதாரக்கித்தாபோடு வாசித்து எனக்குச் சொன்னர்கள். (அல்லாஹும்மங்ஃபிற்லஹூ வற்ஹம்ஹூ)
எனினும், 10-20 வருடங்களுக்கு முன் எல்லாப்பள்ளிகளிலும் சாதா வெள்ளைக் கஞ்சி, மிளகு வெள்ளை கஞ்சி, காய்கறிக் கஞ்சி, பிரியானிக் கஞ்சி, என்று பிறை 6, 12,27 என விசேஷ தினங்களை மக்களுக்கு ஞாபக தினங்களாக அறிய மட்டும்தான் போடுவார்கள். இம்மாதிரி இஃப்தார் வேளைகளில் கஞ்சி கட்டாயமாக கஞ்சி குடிக்கும் வழக்கம் நமது காயலர்கள் உலகில் எங்கெல்லாம் கால் வைத்தார்களோ அங்கெல்லாம் இம்முறைகளை அனுபவப்படுத்தி வருவதும் கண்கூடு, உதாரணமாக இலங்கை. சிங்கை, ஹாங்காங், பேங்க்காக் மற்றும் சில நாடுகளைக் கூறலாம். 1975ல் கெய்ரோவில் ஒரு பள்ளியிலும் கஞ்சியுடன் கூடிய இஃப்தாரில் கலந்து கொண்ட சந்தர்ப்பமும் எனக்குண்டு. அல்ஹம்துலில்லாஹ்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross