Re:துபை கா.ந.மன்றத் தலைவருக்... posted bymackie noohuthambi (kayalpatnam)[24 July 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20157
ஆடிடர் புஹாரி அவர்கள் ஒரு கம்பனியில் பணி புரிபவர் என்பதால் இருக்கும் சிறப்பைவிட அவர் ஊர் மக்கள் நலன்களில் அவர்கள் உள்ளங்களில் பவனிவருபவர் என்பதாலேயே அவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை இந்த மன்ற கூட்டம் கோடிட்டுக்காட்டுகிறது.
1993 கலவரங்களில் கைதுசெய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவன் என்ற முறையில் அந்த வடுக்கள் ஆறாத ரணமாக இன்னும் என்னை அடையாளப்படுத்தி கொண்டிருக்கிறது. அப்போதும்கூட இப்படி மன்றங்கள் இல்லாமல் இருந்தாலும் வாவு சம்சுதீன் மாமா அவர்களின் தந்தை போன்றவர்கள் மாணிக்க வியாபாரி என்ற நிலையிலிருந்து இறங்கி வந்து ஊர் மக்களை காக்கும் பணியில் சமாதான குழு ஏற்படுத்தி எங்களை 14 நாட்களில் வெளியே ஜாமீனில் கொண்டு வந்ததை நன்றியுடன் நினைத்துப்பார்க்கிறேன்.
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் எனபது கேள்வி இல்லை அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை நினைத்தால் வாழ்கையில் தோல்வி இல்லை என்ற தத்துவத்தின் விடி வெள்ளியாக வாழ்ந்து சேவை செய்து வரும் அனைத்து காயல்நல மன்றங்களையும் வாழ்த்துகிறேன். சிறப்பு விருந்தினர் புகாரி அவர்களையும் வாழ்த்துகிறேன். உங்கள் பணி சிறக்க அல்லாஹ் எப்போதும் துணை நிற்பானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross