Re:ரமழான் 1433: மகுதூம் பள்ள... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[25 July 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20167
மாஷா அல்லாஹ்..
சென்ற வருடம் மொஹுதூம் பள்ளியில் ஊத்துக்கஞ்சி ஊத்தும் போது சில விபரங்கள் அறிய முடிந்தது.
வேலைக்கார பெண்மணிகள் கைகளில் நான்கு, ஐந்து தூக்கு சட்டிகளை கொண்டு வருகிறார்கள். கஞ்சி ஊத்தும் சகோதரர் சில தூக்குகளில் முழுவதுமாகவும், சில தூக்குகளில் பாதியாகவும், சில தூக்கில் தரை தட்டும் அளவு குறைவாகவும் ஊத்துகிறார்கள்.
எனக்கு சிறிய அதிர்ச்சி..
** என்னப்பா இப்படி பாரபட்சமாக இருக்கின்றீர்கள். சொந்தக்கார வீடாக இருந்தால் தூக்கு நிறைய ஊத்துறீங்க. தெரியாத வீடாக இருந்தால் இப்படி குறைவாக கவனிக்கின்றீர்களே..? என்று என் ஆதங்கத்தை கேட்டேன்.
- அப்படி எல்லாம் இல்லை மச்சான்..
- தூக்கு நிறைய ஊத்தின வீட்டில் ஒன்பது, பத்து நபர்கள் இருக்கின்றார்கள்.. கம்மியா ஊத்தின வீட்டில் ஒரு கம்மா மட்டும் தான் இருக்காங்க.
** சரி. எப்படி வேலைக்கார அம்மாவையும் அவர்கள் கொண்டு வரும் தூக்குகளையும், இவர் இவருக்கு தான் என்று அறிவீர்கள்.
- முதல் இரண்டு நாட்கள் கொஞ்சம் சிரமம் தான். விசாரித்து விசாரித்து ஊத்துவோம்.
** சரிங்க.. இப்போ வாங்கி சென்றாரே.. அவர் வீட்டிலும் 9 நபர்கள் உள்ளார்கள். அவருக்கு ஏன் கொஞ்சமாக கஞ்சி கொடுத்தீர்கள்.
- கொஞ்ச நேரம் ஸ்கூல் விட்டபின்பு அவரின் இரண்டு மகனும் கஞ்சி வாங்க வருவாங்க. கணக்கு சரியாக இருக்கும்.
** OK.. இந்த பையன் வீட்டிலும் ஆட்கள் அதிகம் தான்.. வேறு யாரும் கஞ்சி வாங்க வரமாட்டார்கள். ஏன் கம்மியாக ஊத்தினாய்.
-இந்த பையனின் காக்கா ..... இந்த பள்ளியில் தராவிஹ் தொழுக வைக்கின்றான். தினமும் இரண்டு பெரிய ஜொக்கு கஞ்சி அவர்கள் வீட்டிற்கு சென்று விடும். கூட்டிக் கழித்து பார்த்தால் இங்கும் கணக்கு சரியாக வருகிறதா.!!
அப்பப்பா. கஞ்சி ஊத்துவதிலும் இவ்வளவு விபரங்கள் இருக்கின்றதா என்று ஆச்சரியப்பட்டேன்.
*** நாம் நோன்பு திறப்பதற்கு முன்பே, நம் கஞ்சிகள் சுற்று வட்டார மக்களால் ருசிபார்க்கப்பட்டு, கமெண்ட்ஸ் கூட வந்து விடுகிறது.( அம்மா.. இந்த கஞ்சியில் உப்பு அதிகம், அடி பிடித்த வாசனை இந்த கஞ்சியில் வருகிறது, கறி கம்மி....etc ..) ***
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross