Re:ரமழான் 1433: கோமான் மொட்ட... posted byP.S.ABDUL KADER (JEDDAH)[27 July 2012] IP: 204.*.*.* United States | Comment Reference Number: 20210
இறைவனின் அன்பு வேண்டும், அவனின் அருள் வேண்டும் அவன் தரும் பொருள் வேண்டும், சீர்மிகு செல்வம் வேண்டும், சிறப்பு மிகு செல்வாக்கு வேண்டும், சிதராத குடும்பம் வேண்டும், செழிப்பான மக்கள் வேண்டும், புகழ் பெரும் கல்வி வேண்டும், பயம் இல்லா வீரம் வேண்டும், பெரும் வீட்டிலே வாழ வேண்டும், வாழும் நாட்டையே ஆள வேண்டும் … இப்படியாகப் பற்பல நோக்கங்களை நெஞ்சிலே சுமந்து திரியும் மனிதன் தான் கொண்ட கொள்கையில் தொய்வு தெரியும் போது அல்லது அதில் ஒரு சோதனை வரும் போது இறைவனை எண்ணுகிறான் இதயத்தை இறைவனுக்காகக் காணிக்கை செய்கின்றான் தான் ஒரு சிறு தியாகத்தைக் கடை பிடிக்கத் துணிகின்றான்.தன்னைத்தானே ஒரு கட்டுப்பாட்டில் பின்னிப் பிணைத்துக் கொள்ளுகின்றான்.
இப்படிப்பட்ட காணிக்கையை, கடமையை, தியாகத்தை கட்டுப்பாட்டை ஏற்கத் துடிக்கும் மனிதன் உண்ணாமல் பசித்திருக்கும் நோன்பைத்தான் முதல் நிலையாக மகிழ்வுடன் கடைப்பிடிக்க ஆசைப்படுகின்றான்.
ஏனென்றால் பசியின் பெருமையே பெருமை அதற்கு ஈடான இறைவணக்கம் என்ன இருக்க முடியும்? பணத்தால் சாதிக்காத ஒன்றை மனிதன் பசியால் சாதித்து விடுகிறானே? பட்டத்தால் சாதிக்க முடியாத ஒன்றை
மனிதன் பசியால் சாதித்து விடுகிறானே?
பிஞ்சுக் குழந்தை – கெஞ்சிக் கேட்கும் கிடைக்காத ஒரு பொருளை ‘சாப்பிட மாட்டேன் போ…’ என்று பெற்றோரை மிரட்டி பட்டினி கிடந்து தான் விரும்பிய பொருளைப் பெற்றுக் கொள்கிறது இதை வீட்டிலே பார்க்கிறோம்.
கட்டிய மனைவி கேட்கும் கிடைக்காத நகையை – கணவனுடன் சாப்பிடாமல் பசி கிடந்து முகம் வாடி உடல் வதங்கி கணவனின் நெஞ்சத்தை நெகிழ வைத்து உடனடியாகப் பெற்றுக் கொள்கிறாள் இதை நாட்டிலே பார்க்கிறோம்.
போராடியும் கிடைக்காத சுதந்திரத்தை ஒரு நாட்டில் தியாகிகள் உண்ணா விரதம் இருந்து – பசி கிடந்து பட்டினி கிடந்து பெற்று விடுகிறார்கள் ! இதை ஏட்டிலே பார்க்கிறோம்.
இப்படி எத்தனையோ சின்னஞ்சிறு விஷயங்களையும் பென்னம் பெரிய காரியங்களையும் பசிகிடந்து சாதித்தோரின் சரித்திரப் பட்டியல்களை படிக்கிறோம்,பார்க்கிறோம், கேட்கிறோம் !
நினைத்ததைச் சாதிக்கும் ஆற்றல், அந்தப் பசிக்கும் பட்டினிக்கும் உண்டு. பிள்ளை பசித்திருக்கப் பெற்றோர் சகிக்க மாட்டார்.கணவன் பசித்திருக்க மனைவி பொறுக்க மாட்டாள்.மனைவி பசித்திருக்க கணவன் விரும்ப மாட்டான். மக்கள் பசித்திருக்க மன்னன் தாங்க மாட்டான் !
“தனியொரு மனிதனுக்கு உணவிலை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம்” என்று பாடி வைத்தான் புரட்சி கவிஞன். அப்படிப்பட்ட பசி உணர்வை ஏற்று மனிதன் புனிதனாக வாழ வேண்டும் என்ற இறைவனை வேண்டுகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross