Re:மாட்டிறைச்சி விலையேற்றம்!... posted byvilack sma (saigon, vietnam)[29 July 2012] IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 20283
ஈரல் , பல்குத்தி , மீன் சினை , காடை , கவுதாரி இவைகளை தங்கத்திற்கு நிகராக விலை வைத்து வாங்கும் நாம் என்று இதில் இருந்து திருந்துகிறோமோ அன்றுதான் எல்லா விலைவாசிகளும் குறையும் . அருகில் இருக்கும் ஆருமுகநேரிக்காரனை ஏளனமாகப்பார்க்கும் கெளதாரிக்காரன் நமதூர் மக்களை Bill Gates என்றும், Ambani என்றும் நினைக்கிறான். நாமும் அப்படித்தானே இருக்கிறோம். வெளிநாட்டில் சம்பாதித்து, ஊரில் பொருட்கள் வாங்குவது நமக்கு ஒரு ´´ துக்கடா ´´ தான் .
பொதுவாக விலையேற்றத்தால் பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள் மட்டுமே . வசதி உள்ளவனுக்கு எந்த பொருளையும் , என்ன விலை கொடுத்தாலும் வாங்கும் சக்தி . ஏழைகளுக்கு அதிக விலை கொடுத்து வாங்கும் சக்தி இல்லை என்றாலும் , மிக மிக மலிவானவற்றை வாங்கி உண்பார்கள் . இங்கே அந்தஸ்து என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல . ஆனால் நடுத்தர வர்க்கம் பாவம் , அதிக விலை கொடுத்து அவர்களால் வாங்க முடியாது , அதேசமயம் மிகவும் மலிவான பொருட்களை வாங்க அவர்களின் அந்தஸ்து தடையாய் நிற்கும்.
நமதூரை பொறுத்தவரை ஏழைகள் குறைவுதான் , நடுத்தர வர்க்கம்தான் அதிகம் .
AWS காக்கா சொன்னதுபோல 2 வாரத்திற்கு கறி வாங்காமல் கடைகாரர்களை விலை குறைக்க நிர்பந்தம் செய்யலாம் . ஆனால் நமதூர் மக்கள் அதற்கு ஒத்துழைக்க மாட்டார்கள் .
ஐக்கிய பேரவையோ , வேறு எந்த சங்கங்களோ , யார் சொன்னாலும் நமதூர் மக்கள் கேட்கப்போவதில்லை . அவர்களாகவே திருந்தினால்தான் உண்டு .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross