வெட்கத்தை (நாணம்) உடையவர்களாக வாழ்ந்தால்........... posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[10 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20332
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
நமதூரின் காலச் சக்கரத்தை ஐம்பது வருடங்களுக்குப் பின்னே சுழற்றிச் சென்றால் இன்று நாம் காணும் காயல்பதியைவிட மிகவும் மாறுபட்டதாக அது இருக்கும் என்பது உண்மையே.
ஏன் மாறுபட்டதாக இருந்தது? அன்றைய மக்களில் பெரும்பாலோர் மார்க்கத்திற்கு கட்டுபட்டார்கள், மார்க்க அறிவை கற்றார்கள் , ஹலாலான வருவாய்க்கு மதிப்புக் கொடுத்தார்கள் , பெற்றோர்களையும், பெரியவர்களையும் மதித்தார்கள் , கடைகளிலோ வேறு ஏதும் தொழில் துறைகளிலோ வேலை செய்து வந்தாலும் எப்படியும் நாம் சொந்தமாக ஒரு வியாபாரம் செய்யணும் - வியாபாரம்தான் பரக்கத்தானது என்று முயற்சி செய்தார்கள் அதிலே மிகுதமானவர்கள் வெற்றிக்கண்டார்கள் - மேலும் மக்களிடம் வெட்கம் (ஹயா) என்பது குடிகொண்டிருந்தது.
ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழ்தான் பெரும்பாலோரிடம் :
மார்க்கத்திற்கு கட்டுப்படுவதில்லை, மார்க்க அறிவை முறையாக கற்பது இல்லை ஆனால் மார்க்கம் பற்றி மிக அழகாக பேசுவார்கள்.
சம்பாத்தியம் ஹலாலா? அல்லது ஹராமா? என்பதைப் பற்றிக் கவலைக் கொள்வதில்லை வருவாய் வந்தால் சரிதான்.
பெற்றோர்களையும் , பெரியவர்களையும் மதிப்பதில்லை என்பது மட்டுமில்லாது அவர்களுக்கு பிள்ளைகள் / இளைவர்கள் புத்தி சொல்கிறார்கள் ஏன் என்றால் இவர்கள் (உலகக் கல்வியை) படித்தவர்களாம்.
வியாபாரியாக இருந்தவர்கள் , இருப்பவர்கள் அது ஏன் இன்னும் நல்ல நிலையிலே வியாபாரத்தை செய்து கொண்டிருப்பவர்கள் கூட அவர்களுடைய பிள்ளைகள் பெரிய கம்பெனிகளிலோ அல்லது வெளி நாடுகளுக்கோ சென்று சம்பாதிப்பதை கெளரவமாக நினைக்கிறார்கள் ஏன் என்றால் அவர்கள் மேல் படிப்பு படித்திருக்கிறார்களாம்.
இன்று வெட்கம் (ஹயா) என்பது ஈமானில் ஒரு பகுதி என்பதை மறந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
பணம் பெரும்பாலோரிடம் இருந்தாலும் அவை இறைவனின் கட்டளைக்கு உட்பட்டு சேர்ந்திருக்கிறதா ? என்பதை பார்க்க வேண்டும்.
எவர் ஒருவர் ஹலாலான உணவு உட்கொள்ளாமலும் "ஹயா" என்னும் வெட்கத்தை பேணாமலும் இருக்கிறாரோ அவரிடம் நாம் எந்த ஒரு நியாயத்தையோ, நேர்மையையோ எதிர் பார்க்க முடியாது. வீண் விதண்டா வாதங்களும் - சர்ச்சைகளும்தான் மிஞ்சும்.
இதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் - சுயமாக சிந்தித்து செயல்பட்டால் - அந்த குடும்பமும் , ஊரும் முன்னேற்றமடையும்.
ஆகவே நாம் ஒவ்வொருவரும் ஹலாலான உணவுகளை உட்கொண்டு , வெட்கத்தை (நாணம்) உடையவர்களாக வாழ்ந்தால் அன்று என்ன இன்றும் ஏன் ? நாளையும் நம்ம ஊர் சிறந்த ஊராகவே திகழும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! நமக்கும் நம் ஊருக்கும் நல்ல முன்னேற்றத்தை தருவான் ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross