Re:எங்கே செல்கிறது இந்த ஒரு ... posted byMohamed Adam Sultan (kayalpatnam)[24 January 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 20434
தாயும்பள்ளி ஜமாஅதார்களின் தவறான முன் உதாரணம் என்று கட்டுரையாளர் தன் கருத்து பிசைவால் கசப்புணர்வுக்கு தூபமிட்டிருக்கிறார்.
தவறான முன் உதாரனத்திற்க்கு வித்தூன்றியதே பெரிய நெசவு ஜமாஅதார்கள்தான்.
இன்று நேற்றல்ல பல ஆண்டுகள் ஒருவழிப்பாதை வேண்டும் என்று KTM தெரு வாசிகள் முயன்று வந்தது கட்டுரையாளருக்கு தெரியுமா? அந்த கோரிக்கையில் ஒரு வரியில் கூட பெரிய நெசவு தெருவை பற்றி சொல்லி இருப்பார்களா?
அந்த அளவிற்கு கண்ணியம் காத்த KTM தெருவை பார்த்து ஆக்கிரமிப்புள்ள தெரு என்று உண்மைக்கு மாறான குற்றசாட்டை ஜமாஅத் தீர்மானமாகவே கூறி,
KTM தெரு வாசிகளின் கோபத்தையும்,கொதிப்பையும் கிளறிவிட்ட அந்த பெ.நெசவு ஜமாஅதார்களின் நடவடிக்கை மோசமான முன் உதாரணம் இல்லையா? இதை ஏன் கட்டுரையாளர் கண்டுகொள்ளவில்லை.
நமதூரின் அணைத்து ஜமாஅதார்களின் விருப்பமான,வசதியான வழியாகிய பெரிய நெசவு தெரு பாதை, ஒரு வழிப்பாதையாக வரவேண்டும் என்ற கோரிக்கையை அணைத்து ஜமாஅதினுடைய அங்கீகார ஒப்புதல் முத்திரையுடன், அணைத்து அரசியல் கட்சிகள், அணைத்து தன்னார்வுதொண்டுஅமைப்புகள் அங்கீகாரத்துடன் கூடிய மனுவை மாவட்ட ஆட்சி தலைவரிடம் ஊர்மக்கள் சார்பாக தாயும் பள்ளி ஜமாஅத் சமர்ப்பித்தது தவறான முன்உதாரணமா?
கட்டுரையாளரின் கருத்து கண்ணோட்ட காளை மிரண்டு போகிறது சற்று மடக்கி வையுங்கள்.
ஆரம்ப காலத்தில் KTM தெருவும் பெ.நெசவு தெருவைப்போல் விசாலமாகதான் இருந்தது நாளடைவில் ஆக்கரமிப்பால் சுருங்கிவிட்டது என்று கூறும் பெ.நெசவு ஜமாஅதார்களே,
உங்களிடம் அதற்குரிய ஆதாரம் இருந்தால் கொண்டுவாருங்கள்,அது உண்மையாக இருந்தால் உங்கள் கண் முன்னாலேயே எங்கள் வீட்டை இடிக்கிறோம்.
ஒருவேளை நீங்கள் நிரூபிக்க முடியாவிட்டால்,
நீங்களே முன்வந்து எங்கள் தெருவழியாக போக்குவரத்து போகலாம் என்று ஒப்புகொள்வீர்களா?
இதற்கு கட்டுரையாளரின் கணிப்பு என்ன?
சிறிதேனும் பொருபெர்பாரா? பதுங்குவார?
நகராட்சியில் ஒருவழிப்பாதை கொண்டுவர உரிமை இல்லாவிட்டாலும்,ஊர்மக்களின் ஒட்டுமொத்த விருப்பமான வசதியான,வழியை பரிந்துரைப்பதில் தவறு இல்லை.
நகராட்சியின் கமிஷனர் அவர்கள் உண்மை நிலையை விளக்கி ஒருவழி பாதைக்கு உகந்தது பெ.நெசவுதெரு வழி தான் என்று பருந்துரை கடிதம் கொடுத்திருக்கும் பொழுது,
ஊர்மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பிகிணங்க ஊர் தலைவி அவர்கள் ஊர்ஜமதார்கள் வழியை எற்றுகொண்டவராக பரிந்துரை சம்மத கையப்பொமிடுவதில் என்ன தயக்கமோ?
சுனாமி வீடு பிரச்னையில் ஊர் ஜமாஅத் நிலைதான் என் நிலை என்று கூறிய அதே தலைவி அவர்கள் இன்று ஊர் ஜமாத்தோடு ஒத்துபோக தயக்கம் காட்டுவதின் பின்னணிதான் என்ன?
தயவுசெய்து உண்மைக்காகவும் ஊருக்காகவும் ஒத்துபோகவும். அதுதான் நடுநிலைமைக்கு நல்லது. . .
"இது நகர்மன்றம் தீர்மானிக்கக்கூடிய பிரச்சனை இல்லை என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகும் - தாயிம்பள்ளி சார்பாக மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து வேட்டையில் பல உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது".
என்று கட்டுரையாளர் கூறியருப்பதுதான் விந்தையாக இருக்கிறது. .நகரமன்ற பொறுப்பு இல்லை என்பதால் ஊருக்கு அவசிய தேவையை பருந்துரைப்பது குற்றமா?அல்லது வேடிக்கைய?
நகரமன்ற உறுப்பினர்களை ஜமாதுதான் தேர்ந்தெடுகிறது,அந்த ஜமாத்தே ஒப்புதல் கடிதமும் முத்திரையும் கொடுக்கும் பொழுது, அந்த வார்டு உறுப்பினர் கையெழுத்து இடுவது வேடிக்கையா?
நகராட்சியின் துணை தலைவர் அவர்கள்
இல்லாத பாதையை மேற்கோள் காட்டி அதை
ஒருவழிப்பாதையாக அமுல்படுத்தி தீர்மானம் போடுங்கள் என்று நகராட்சியில் வற்புறுத்தியதாக கேள்வி..
மனசாட்சி இல்லாமல் சொந்த ஜமாஅத், ஊர்ஜமாஅத் மக்களுக்கு எதிராக செயல்படும் அவரை ஆட்டிவைக்கும் பின்னணி சக்தி..
பலம் பொருந்திய சக்தி என்பதுமட்டும் தெரிகிறது.
திமுக சார்பில் வெற்றிபெற்றதற்காக பெருமை பெற்ற கழக கட்சியாளர்களின் ஒருவனான நான் மேற்கண்ட செயலுக்காக இப்பொழுது வெட்கபடுகிறேன்.
இறுதியாக சொல்ல வருவது,
கட்டுரையாளரின் முழு உண்மையற்ற,விபரமற்ற செய்தியால்தான் இரு ஜமாஅதார்களுக்கிடையே நெருக்கம் நகர்ந்து போக வழிவகுக்கும் என்பதை என்னுடைய கருத்தாக பதிவு செய்கிறேன்.
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross