போலி ஒற்றுமை வேண்டாம். posted byS.A.Muhammad Ali (Velli) (Kayalpatnam)[26 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20437
ஒற்றுமை என்ற வாதத்தின் அபத்தங்களை வெளிக்கொண்டு வந்து இருக்கிறது இந்த பதிவு. நெசவு தெரு மற்றும் கோமான் தெரு ஜமாத்தை யாரும் இரண்டாம் தாரமாக பார்க்க வில்லை. ஒரு வழி பாதைக்கு இருக்கும் வழிகளில் சிறந்ததாக ஏகோபித்த மக்களின் தேர்வாக இருப்பது பெரிய நெசவு தெரு. நெசவு தெரு ஜமாத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் நான் கேட்கும் கேள்விகளுக்கு முதலில் பதில் கூறுமாறு கேட்கிறேன்.
1 நெசவு தெரு ஜமாஅத் கூறிய மாற்று பாதை அந்த பகுதியில் உள்ள மக்களிடம் கலந்தாலோசித்த பிறகா கூறப்பட்டது?
3 நெசவு தெரு ஜமாஅத் சார்பாக கலக்டரிடம் மனு கொடுக்கப்பட்ட போது யாரிடம் கலந்தாலோசனை செய்தார்கள்?
4 வேண்டாம் என்று பிடிவாதம் செய்பவர்களிடம் எவ்வாறு சமரசம் செய்வது? இது என்ன முடுக்கு பிரச்சனையா உனக்கு 2 அடி எனக்கு 2 அடி உனக்கு என சமரசம் செய்வதற்கு?
5 நகராட்சி தலைவியே நேரில் சென்று அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க முன் வந்த போதும் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களிடம் எந்த மாதிரி சமரசம் செய்ய சொல்கிறீர்கள்?
தாயிம்பள்ளி ஜமாத்தின் தீர்மானத்தை தவறான முன்னுதாரணம் என்று கூறுவதற்கு யார் நீங்கள்? முதலில் அந்த வாசகத்தை நீக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
இந்த பிரச்சனையை நீங்கள் K.T.M. தெரு விற்கு மட்டும் சம்பந்த பட்ட பிரச்சனையாக பார்ப்பதால் தான் இந்த எண்ணம் உங்களுக்கு தோன்றுகிறது. ஊரில் உள்ள பெரும்பாலான அமைப்புகள், ஜமாஅத்கள் தங்களது ஆதரவை தெரிவித்து இருப்பதன் மூலமும் நீங்கள் இதை உணரவில்லை என்றால் என்னவென்று சொல்வது?
சில நச்சு பாம்புகள் நல்லது நடப்பதை தடுக்க நினைத்தாலும் அதன் விஷ பற்கள் பிடுங்க படும் நேரம் விரைவில் வரும்.
மேயிற மாட்டுக்கு நக்குற மாடு இளப்பம் என்று கூறுவார்கள். அதை தான் தற்போது நாம் கண்டு கொண்டு இருக்கிறோம்.
தற்போது நகராட்சியில் எந்த ஒரு நல்ல திட்டம் அமுல் படுத்த முனைந்தாலும் அதை தடுக்க சில குள்ள நரிகள் சூழ்ச்சி செய்கிறது.
இன்ஷா அல்லாஹ் விரைவில் ஒரு வழி பாதை வர நாம் அனைவரும் துஆ செய்வோமாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross