LET'S ALL WIN AND NO BODY SHOULD லோசே.......................................!!!!!!!!!!!!!!!!!!!!!! posted byShameemul Islam SKS (Chennai)[29 January 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 20439
தலையங்கத்தை ஒரு விமர்சனமாகவும் அதன் கீழ் இடப்பட்டுள்ள காரசாரமான (பல) விமர்சனங்களை தலையங்கமாகவும் மாற்றிப் பார்த்தால் பொருத்தமாக இருக்குமோ.........???????
ஒரு வேளை தலையங்கத்தின் நோக்கமும் அதுதானோ............!!!!!!!!!!
எனது பள்ளி உயர்கல்விப் பருவத்திலும் என் கல்லூரி நாட்களிலும் கூட எனக்கு இரண்டாவது தெருவாக அமைந்திருந்தது KTM தெருதான்.
மாலை நேரத்திலும் விடுமுறைக் காலங்களிலும் தெருவில் உள்ள பல இளைஞர்களுடன் தெருவில் ஒன்று கூடி நடந்து சென்று KMT -க்கு நேர் கிழக்கில் உள்ள பொலி முகத்தில் சென்று தான் விளையாடுவோம்.
அப்போது அவர்கள் மனதில் எந்தக் கவலையும் இருக்காது.
இப்படி மற்ற தெரு போல நமக்கும் தெருவிலேயே விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என எப்போதும் யாரும் சொல்லக் கேட்டதே இல்லை. நம் முன்னோர் இப்படி செய்து விட்டார்களே என அவர்களையும் இந்த சீதேவிகள் குறை கூறியதும் கிடையாது.
எப்போதாவது தெருவில் ஏதாவது ஒரு வாகனம் வேகமாகச் சென்று அதனால் பிள்ளைகளுக்கு அச்சுறுத்துவது போல இருந்தால் கூட களகமோ கலவரமோ பண்ண மாட்டார்கள் இந்த தெருவாசிகள். அனுமதிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே தமது எதிர்ப்பை வெளியிட்டு இனி பிற வாகனங்கள் அவ்வாறு செல்லாமல் இருக்க சம்மந்தப் பட்டவர்களிடம் உறுதிக் கேட்பார்கள். இது அவர்களுக்கு பழகிப்போன விஷயம்.
தற்போதுள்ள சர்ச்சையால் தான் இப்போது தமது பள்ளிப்பருவத்தில் உள்ள சிறியவர்கள் கூட இவ்வளவையும் நாம் இழந்திருக்கிறோமா என நினைத்திருப்பார்கள். ஃஹைர்.
இதே போல ஊர் விரிவாக்கம், ஊர் நலன் மீது அக்கறைக் கொண்டு நெசவுத்தெரு மேன்மக்களும் பரந்த மனத்தோடு வருங்கால சமுதாயத்தை நாமே மனோ ரீதியான அச்சத்திற்கு இட்டுச்செல்லாமல், தற்போது ஏற்பட்டிருக்கும் சிறு இடைவெளியை மறந்து, நீண்ட காலமாக நிலைநாட்டப்பட்டுள்ள KTM தெரு மக்களின் முன்மாதிரியை அவ்வாறாகவே எடுத்துக்கொண்டு நமதூருக்கு அமைதி மற்றும் ஒற்றுமைக்கான ஒரு புதிய அத்தியாத்தை உருவாக்கித்தருவீர்கள் என்ற மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் முடிக்கிறேன்.
"LET'S ALL WIN AND NO BODY SHOULD LOSE"
"UNITY IS OUR STRENGTH ; THEN ; NOW ; AND EVER.........................................
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross