Re:தலையங்கம் குறித்த விமர்சன... posted byMohammed Adam Sultan (Kaaraikkal)[02 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20446
உங்கள் தலையங்கத்தின் தன்னிலை விளக்கமாவது எப்படி இருக்கிறது என்றால்,ஒருவன் பட்டுகோட்டைக்கு வழி கேட்டால்,கொட்டை பாக்குக்கு விலை சொன்னானாம். அது போல இருக்கிறது.
தாயும் பள்ளி ஜமாஅத், நெசவுதெருஜமாஅத் தீர்மானத்தை குறிப்பிட்டு ஊர் முழுவதும் கையெழுத்து வேட்டை நடத்தியது போல ஒரு மாயையை ஏற்படுத்தி இது ஒரு மோசமான முன் உதாரணம்.
எதிர் காலத்தில் இது தொடர்ந்தால் ஏதாவது இருஜமாதிற்க்குமிடையே சண்டை சச்சரவு என்று வந்தால் இதுபோன்ற கையெழுத்து வேட்டை நடைபெற வாய்ப்பாக அமையுமே. அதனால் தான் இந்த கையெழுத்து வேட்டை தவறான முன் உதாரணம் என்று தலையங்கம் எழுதினோம் என்று முழு பூசணிகாயை சோற்றில் மறைக்க முயன்று இருக்கிறீர்கள்.
உண்மைக்கு மாற்றமாக உளறும் உங்கள் தளயங்கத்தால் தான் இரு சகோதர ஜமாதிற்க்குமிடையே பிரிவினை தீ பற்றி எறிந்து கொண்டிருக்கிறது.
இருவழி சாலைக்கு ஆதரவாக கையெழுத்திட்ட அணைத்து ஜமாத்தினரும், அணைத்து அரசியல் கட்சிகளும்,அணைத்து தன்னார்வு தொண்டு நிறுவனங்களும் இத் தவறான முன் உதாரணதிற்கு துணை போயிருக்கிறார்கள்.
தாயும் பள்ளி ஜமாஅத் நெசவு தெரு ஜாமதிர்கெதிரான நடவடிக்கைக்கு ஊர்மக்களை பகடைகாய்களாக பாவித்து இருக்கிறார்கள்
ஆக மொத்தத்தில் ஊர் முழுவதும் பெரும்பாலோர் ஒரு முட்டாள் தனமான காரியத்திற்கு கொப்பான முன் உதாரணதிற்கு முழு பொறுப்பாளிகள் என்று தானே உங்கள் தலையங்கம் சொல்கிறது.
தாயும் பள்ளி ஜமாஅத் வாங்கிய கையெழுத்தில் ஒரு வரியிலாவது நெசவு தெரு ஜமாத்தின் தீர்மானம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்களா.அப்படி குறிப்பிட்டிருந்தால்,அதை பார்க்காமல் கையெழுத்திட காயல் நகரமக்கள் அந்த அளவிற்கு கருத்து குருடர்களா?
நெசவு தெரு கோமான் தெரு ஆகிவைகளை எந்த சம்பந்தமும் எடுக்காமல் ஒதிக்கியே வைக்கிறோம் என்பது உங்கள் தலையங்கத்தின் மற்றுமொறு குற்றசாட்டு.
ஒரு கண்ணியமிகு காயல் சகோதரன் இப்படி சொல்வதற்கு தயங்குவான். இப்படி சொல்வது நாமாகவே அவர்களை தாழ்வு மனப்பான்மைக்கு தள்ள முயற்சிக்கும் செயல் என்று தான் சொல்வேன். ஏனெனில்,ஒட்டு மொத்த காயல் சகோதரர்களையும் அண்ணன்,தம்பிகளகதான் நேசிக்கிறோம்.
சம்பந்தம் என்பது அவரவர் எண்ணத்தாலும்,குணத்தாலும்,குளத்தாலும்,குடும்பத்தாலும் அமையக்கூடியது.
ஒரு வீட்டிலுள்ள சொந்த அண்ணன் தம்பி,ராத்தா,தங்கை குள்ளேயே சம்பந்தம் எடுக்க மறுக்கிறார்கள். இதில் வலியுறுத்தலோ ,வற்புறுத்தலோ, கட்டாயமோ கட்டுபடுத்தாது.
இருவேறு வாழ்க்கைமுறையை ஒப்பிட்டு பார்காதீர்கள்.அப்படி பார்க்கும் பொழுது சில நேரம் உயர்வு தாழ்வு என்ற கருத்து மேலோங்கி நிற்பதுபோல் தெரியும்,அதுவே உண்மையாகி விடாது.
எவரும்,எவருக்கும் இளைத்தவர்கள் அல்ல.எல்லோரும் நம் காயல்பதியின் உடன் பிறவா சகோதரர்களே!. எல்லா தெரு சகோதரர்களும்,எல்லோர்களிடமும் ஒரு சில காரியங்களுடன் ஒன்று படாவிட்டாலும், பல காரியங்களில் பண்புடனும்,அன்புடனும் அரவணைத்து செல்கின்ற காட்சியைத்தான் காண முடிகிறது. அக் காட்சியை கொச்சையாக்கி விட்டீர்கள் உங்கள் தலையங்கத்தில்.
ஆக மொத்தத்தில் உங்கள் தவறான தலையங்கத்திற்கு நேரிடியாக வருத்தம் தெருவிக்காமல் சுற்றிவளைத்து நியாயப்படுத்த முயற்சித்து இருக்கிறீர்கள் என்பது தான் யதார்த்தமான உண்மை.
மனசாட்சிபடியும்,உண்மைநிலைகேர்ப்பவும்,ஊர்மக்கள் ஒட்டு மொத்த நிலைபாட்டிற்கு மதப்பளிக்கும் முகமாகவும்,
தலகவ்ரவத்தை தூக்கி எறிந்து விட்டு,
தெளிந்த மனதோடு,நாங்கள் எழுதிய தலையங்கத்திற்காக எங்களின் வருத்தத்தை தெருவிக்கிறோம் என்று நீங்கள் தெளிவாக கூறும் வரை,
பற்றி எறிந்து கொண்டிருக்கின்ற தீ யானது அனையபோவது இல்லை.
உங்களின் மேல் கண்ட, கண் துடைப்பு விளக்கத்தால் மன வேதனையான ஊர் அணைத்து ஜமாதாரும்,தாயும்பள்ளி ஜமாதாரும் அமைதியாக மாட்டார்கள் என்பது தான் எதிகாலத்தின் வேதனையான விஷயம். அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross