நிதானம் வேண்டும்! posted bykavimagan (chennai)[14 February 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 20463
செய்தி ஊடகங்கள் தனிப்பட்ட தங்களது கருத்தை,சமூக
பார்வையோடு வெளியிடுவதே தலையங்கம்.அந்த வகையில்
மிகவும் கவனமாகவும்,சமூக அக்கறையோடும் எழுதப்பட்ட
ஒரு தலையங்கத்தை,அதில் உள்ள சில வார்த்தைகளின்
யதார்த்தங்களை உணர்ந்து கொள்ளாமல்,தடித்த வார்த்தைகளால்
ஏனோதானோவென்று விமர்சிப்பவர்களின் கருத்துக்களையும்
அப்படியே வெளியிட்டுவரும் காயல்பட்டணம்.காம் உடைய ஊடக தர்மத்திற்கு முதற்கண் எனது வாழ்த்துக்கள்!
இந்த பிரச்சனையால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள இரண்டு
ஜமாஅத்தினரின்,எம்மோடு உடன்பிறந்த சகோதரர்களின்
மனவேதனையை அனைவரும் உணர்ந்தே இருக்கிறோம்.
கையெழுத்து இயக்கம் நடத்தி,பெரும்பான்மையோரின் ஆதரவைப்பெறுவது என்பது ஜனநாயகரீதியான நேரிய செயலே!
அது ஒருபோதும் தவறான முன்னுதாரணம் ஆகாது.
அதே நேரத்தில்,தலையங்கம் குறித்த விமர்சனங்களுக்கு விளக்கமாக,
நகரின் ஒவ்வொரு பிரச்சனைக்கும்,அல்லது இருசாராரின் கருத்து
வேறுபாடு களைவதற்கும்,கையெழுத்து இயக்கம் நடத்துவது,
தொடர்ந்த பேச்சுவார்த்தை மூலமாக ஏற்படவேண்டிய சுமூக
நிலைக்கு குந்தகம் விளைவித்துவிடும் என்று கருதியதால்,அந்த
வார்த்தைகளை உபயோகப்படுத்தியதாக வலைத்தளம் சார்பாக
சொல்லப்படுவதை ஏன் ஏற்கக்கூடாது? வார்த்தைகளை மட்டும்
பார்க்காமல்,பிரச்சனை சுமுகமாக தீர்க்கப்படவேண்டும் என்ற
அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்.
பாசமிகு சட்னி மீரான் காக்கா அவர்கள்,தளத்தின் நடுநிலைமை
குறித்து விமர்சிக்கும் போது,கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது
நடந்த சில சம்பவங்களை போகிற போக்கில்,புழுதி வாரித் தூற்றி
இருக்கின்றார். வேண்டாம் காக்கா இந்த வினோத விளையாட்டு!
நீங்கள் குறிப்பிட்ட அனைத்து விஷயங்களுக்கும் ஆதாரம்
இருக்கின்றது.அவற்றை எல்லாம் மீண்டும் விவாதகளத்திற்கு கொண்டு வந்தால் நகரின் ஒற்றுமை நிரந்தர கேள்விக்குறி ஆகிவிடும்.இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடமே விளக்கம் சொல்லப்பட்டு விட்டது.இதனை இத்தோடு நிறுத்திவிடுவது நல்லது!
நிறைவாக, இரு பகுதியையும் சேர்ந்த எங்களது அன்பு உடன்பிறப்புக்களே! எங்கள் மண்ணின் மைந்தர்களே! காயல்
சொந்தங்களே!உங்களது சிரமங்களை,மன உளைச்சலை நாங்கள்
உணர்ந்தே இருக்கின்றோம்! ஆத்திரத்தில் வார்த்தைகளை அள்ளிக்
கொட்டாமல்,நமது வார்த்தை விளையாட்டுக்கள் நகரின் ஒற்றுமைக்கு நிரந்தர ஊனத்தை ஏற்படுத்திவிடாமல்,கவனமாக
எழுதுங்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross