கண்காணிப்பு குழு சிறந்ததாக அமைந்து செயல்பட ... posted byN.S.E. மஹ்மூது (????????????)[05 March 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20466
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
தலையங்கம் நன்றாக உள்ளது - சிந்தித்து செயல்படுத்த வேண்டிய அம்சங்கள் அடங்கியுள்ளது.
இதற்கு விரிவாக எழுத விரும்பவில்லை - சுருக்கமாக சொல்வது நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இப்போதைய நமது நகராட்சியில் பணி புரிபவர்களில் 90 % பணியாளர்களுக்கு அவர்களுடைய வேலையே அவர்களுக்கு என்ன வென்று தெரியாது.
அதனால் அவர்கள் அனைவரும் மாற்றப்பட வேண்டியவர்களே - விரைவில் மாற்றப்படுவார்கள் என்பதை நம்புவோமாக.
பொது மக்கள்/பொது நல ஆர்வலர்கள்/அமைப்புகள் (CIVIL SOCIETY) நகர்மன்ற விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது உண்மைதான்.
அதை உடனே , இன்றே துவங்கிட வேண்டும் என்பதை விட , தீர ஆலோசித்து நல்லொதொரு முடிவு எடுத்து தாமதமானாலும் தரமான கண்கணிப்பாளர்கள் மூலம் செயல்படுத்துவதே சிறந்தது.
நகரமன்ற கண்காணிப்பு குழு சிறந்ததாக அமைந்து செயல்படத் தொடங்கி , நம் நகர்மன்றம் சிறந்த மன்றமாக விளங்க வல்ல அல்லாஹ்! கிருபை செய்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross