Re:இது தேர்வு காலம்!... posted byOMER ANAS (DOHA QATAR.)[06 February 2012] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 20492
NSE மஹ்மூது மச்சான் இது தேர்வுக்காலம்! அதில் மாணவர்கள் எப்படி படிக்க வேண்டும்,அதற்க்கான நேரம்,காலம் வழிமுறைகள் இதுபற்றித்தான் எழுதி உள்ளார்கள்!
அதுபோல் மாணவர்களை பாராட்டும் முகமாக ஃபேஸ்புக்,பைக்கு ஓட்டம் இதுகளை மாணவர்கள் தவிர்த்து வருவது அவர்கள் படிப்பில் காட்டும் ஆர்வத்தினையே காட்டுகிறது என்று புகழ்ந்து உள்ளார்கள்!
இதைவிட்டு,எந்த இடத்திலும்,ஒலிபெருக்கி விசயமாக கூறவும் இல்லை.மார்க்க ஹதீஸ் சம்பந்தமான விசயங்களை இதற்கும் அதற்கும் முடிச்சுபோடுபவரும்,நிச்சயம் என் மச்சான் இல்லை!
மஹ்மூத் மாமா அவர்கள் ஒலி பெருக்கி ஏற்படுத்தும் இன்னலை பற்றி தான் எழுதி உள்ளார்கள்!இது சகோ!M M S இப்ராஹீம் அவர்கள் கருத்து!
அடுத்து அருமை காக்கா சுஹைப் அவர்களே, தங்கள் கமண்டில்,
இங்கு நான் எதையும் மனதில் வைத்து சொல்லவில்லை நமது சதுக்கை தெரு பகுதியில் ஒரு வருடத்தின் அநேகமான நாட்கள் ஒலிபெருக்கி விடாமல் முழங்கி கொண்டேதான் இருக்கிறது. ஏதாவது கந்தூரி விழாக்கள்..அல்லது பொது நிகழ்ச்ச்கள் என இது ஒலிக்காத நாள் இல்லை. எங்கோ நடைபெறும் விழாக்களுக்கு இங்கு ஸ்பீக்கர் வைக்கிறார்கள். இதனால் மாணவர்களின் படிப்பு தடைபடுகிறது ..மாத்திரமல்ல...நோயாளிகள் குழைந்தைகளின் தூக்கம் இவைகளுக்கு இந்த ஒலிபெருக்கிகள் செய்யும் துன்பம் ஒன்று இரண்டல்ல.
இது உங்கள் கருத்து!
காக்கா நமது சதுக்கைத்தெரு என்று தாங்கள் சொன்னது எனக்கு என்றே எடுத்துக்கொள்கிறேன்!
அதுபோல்,நான் இங்கு எதையும் மனதில் வைத்து சொல்லவில்லை என்பதையும் பாராட்டுகிறேன்!
பின்பு ஏன் இதுவிசயமாக நாம் பேச வேண்டும்???
அன்று உள்ள பெரியோர்களை சிலர் இன்றும் இருக்கிறார்கள்!(அல்லாஹ் அவர்களின் ஹயாத்தை மென்மேலும் நீடிக்கசெய்வானாக!)நாமும் துஆச் செய்வோம்!
இவர்கள் ஹதீஸ் உபன்யாசங்களைகேட்க்க அன்று தன வாலிப வயசில் சென்று வந்தார்கள்! இன்று அதே ஹதீஸ் தன வீட்டு வாசலில் ஒலிக்கும் போது அதை கேட்டு மகிழ்கிறார்கள்! அதுபோன்ற பெரியோர்களின் கடைசிக் கால ஆசைகளை இடையில் மார்க்கத்தை நான் அதிகம் கற்றுக் கொண்டேன் அது இது என்று பேசும் குழப்பவாதிகள், தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாமல் இருந்தால் சரி!
காலையில் எங்களுக்கு தினமும் கேட்க்கும் சில லவுட்டு ஸ்பீக்கர் ஒலிகளை விடவா மார்க்க ஹதீஸ் சிலருக்கு கசக்கிறது?
எதையும் அவசியம் இன்றி யாரும் அதி மேதாவிகள் என்று கருத்து கூற வேண்டாம்!
அன்று முதல் இன்று வரை ஏன் வருங்காலங்களிலும் இது ஒலிக்கும்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross